ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

தர்மம் தழைத்தது !! நீதி நிலைபெற்றது !! நிம்மதி அடைந்தனர் மக்கள் !!







பிஸ்மில்லாஹி ஹிர்ரஹ்மானிர் ரஹீம் !!



அஸ்ஸலாமு அலேக்கும் !!




அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!



அனைவருக்கும் வணக்கம். பதினெட்டு 


ஆண்டுகளாக இழு,இழு,இழு,இழு,என்று 


இழுத்தடிக்கப்பட்டு ஒருவழியாக கடந்த 


27ம் தேதி நீதிஅரசர் மாண்புமிகு மைக்கேல் 


டி.குன்கா சரியான, மிகச்சரியான தீர்ப்புதனை 


வழங்கியுள்ளார். வரலாற்றில் அவர் பெயர் 


என்றும் நிலைபெற்று இருக்கும். அதில் எள்ளின் 


முனையளவுகூட சந்தேகம் இல்லை. ஒரு 


மிகப்பெரிய இராட்சசியை இரும்புகம்பிகளுக்கு 


பின்னால் தள்ளி சிறையில் பூட்டுவது என்பது 


ஒன்றும் அவ்வளவு சாதாரணமான விஷயம் 


இல்லை. 


பல ஆயிரம் கோடிகள் தருகிறோம் என


நீதியரசருக்கு எவ்வளவோ கோரிக்கைகள் வந்த 


போதிலும் அவை அவ்வளவும் எனது அடியில் 


முளைத்துள்ள மயிருக்கு சமமானவை என்று 


சொல்லி உதறித்தள்ளிய உத்தமர்தான் நீதிபதி 


மைக்கேல்டி.குன்காஎன்பதையாரும்மறந்துவிட 


வேண்டாம்.



தமிழக அரசின் சின்னத்தில்உள்ளவாசகம்இன்று 


மகிழ்ச்சி அடைந்து உள்ளது.



                   வாய்மையே வெல்லும்.




நன்றி !! வணக்கம் !!




அன்புடன் மதுரை T.R. பாலு. 

புதன், 17 செப்டம்பர், 2014

நீதியே நீயும் இருக்கின்றாயா ?.........(நாட்டில் நடப்புகளைப் பார்க்கின்றபோது பாடிடத் தோன்றும் பாடல்)








பிஸ்மில்லாஹி ரஹ்மானிர் ரஹீம் !!



அஸ்ஸலாமு அலேக்கும்!!




அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!



நேற்று முன்தினம் செய்தித்தாள் வாசித்தபோது,


அதில் குறிப்பிட்டிருந்த செய்தி ஒன்று என்னை 


மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது என்று நான் 


சொல்வதைவிட நகைத்திடச் செய்தது என்பதே 


உண்மை.



ஆம் நேயர்களே !! ஒரு குற்றம் சாட்டப்பட்ட நபர்,


நீதி தேவதியின் தீர்ப்பு வழங்கிடப்படும் இடத்தை 



மாற்றிடச் சொல்லி மனுப்போடுவதும், அதற்கு 


நீதிதேவனும் சம்மதிப்பதும், அதனை ஒட்டி, 


தீர்ப்புவழங்கப்படும்தேதிமேலும்ஒருவாரகாலம் 


நீட்டிக்கப்படுவதும், இந்த அவனியில் எங்கேயும் 


காணமுடியாத அதிசயம்/அசிங்கம்தான் 


அன்பர்களே !!



இப்போதுநான்எதைப்பற்றி,யாரைப்பற்றி,இங்கே 


குறிப்பிடுகிறேன் என்பது உங்களுக்கே தெரிந்து 


இருக்கும்என்றுகருதுகிறேன்அன்புத்தமிழர்களே!



கடந்த பதினெட்டுஆண்டுகளாக,  இழு,இழு,என 


இழுத்தடிக்கப்பட்டு, ஒருவழியாக தீர்ப்பு 


எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2௦ம் தேதி 


வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த 


அ.இ.அ.தி.மு.க. வின் பொதுச்செயலாளரும், 


தமிழ்நாடு முதலமைச்சரும் ஆகிய செல்வி 


மாண்புமிகு(?)ஜெயலலிதாவின்வருமானத்திற்கு 


அதிகமாகசொத்துசேர்த்தஅந்த வழக்கின்தீர்ப்பு 


பற்றிய குற்றம் சாட்டப்பட்டுள்ள செல்வி 


ஜெயலலிதா, தனது  பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் 


தருகின்ற இடமாக பெங்களூரு, சிறப்பு 


நீதிமன்றம் இருப்பதாக தான் கருதுவதால்,


பார்ப்பன அக்ரகாரம் நீதிமன்ற வளாகத்தினை 


தீர்ப்புவழங்கிடும் இடமாக மாற்றிட வேண்டும் 


எனஅவர்கேட்டுக்கொள்வதும்அதனை நீதியரசர் 


மாண்புமிகு மைக்கேல் டி.குன்ஹா அவர்கள் 


ஏற்றுக்கொண்டு, தீர்ப்பினை ஒருவாரம் தள்ளி, 


27ம் தேதிக்கு மாற்றி உத்திரவு இட்டுஇருப்பதை 


பார்க்கும் போது சிரிப்பதா அல்லது அழுவதா 


என்று தெரியவில்லை.



ஒருவேளை, நீதி அரசர், இப்படி நினைத்து இந்த 


முடிவு எடுத்திருக்கலாம் என்றே அரசியல் 


ஆர்வலர்கள் எண்ணுகின்றனர். ஒருவேளை 


ஜெயலலிதாவின் வேண்டுகோளை நீதியரசர் 


மைக்கேல் டி.குன்ஹா அவர்கள் மறுத்திருந்தால் 


உயர்நீதிமன்றம்,  அதனையும் எதிர்த்து உச்ச 


நீதிமன்றம், என்று வழக்கினை இழுத்தடித்து 


மேலும்ஒரு 6 மாதங்கள் தள்ளி வைத்திட ஜெயா 


தரப்பு போட்ட. அவர்கள் பின்னிய 


சதிவலைதனை அறிந்துதான் மாண்புமிகு 


நீதியரசர் இப்படி ஒரு முடிவுக்கு வந்திருப்பார் 


என்றே அவர்கள் கருதுகின்றனர்.



எது எப்படியோ, நீதி வென்றிட வேண்டும் குற்றம் 


புரிந்திருந்தால், அத்தகைய குற்றத்தினை 


புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். 


காராக்கிரகத்தில் அவர்கள் அடைக்கப்பட 


வேண்டும் என்றே ஸ்ரீமான் பொதுஜனம் 


இன்றையதினம்கடவுளைவேண்டிகொள்வதாக 


ஊரில் பரவலாக பேசிக்கொள்வது எனது 


காதுகளில் விழாமல் இல்லை. அதை உங்கள் 


காதுகளிலும்  போட்டு வைத்திடத்தான் இந்தக் 


கட்டுரை என் அன்புத் தமிழர்களே !!



நீதி நிலைபெறுமா ? அல்லது வாங்க 


வேண்டியதை வாங்கிக்கொண்டு அநீதியாக 


தீர்ப்பு வெளிவருமா ?


எல்லாம் அந்தப் பரந்தாமனுக்கே வெளிச்சம்.


எல்லாம் செப்டம்பர் மாதம் 27ம் தேதி 


தெரிந்துவிடும்.


சத்தியமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்) 


என்னும் தமிழக அரசின் முத்திரையில் உள்ள 


வாசகங்கள் உண்மையானதா இல்லையா 


என்பதும் அப்போது புரிந்துவிடும். 


பார்ப்போம். பொறுத்திருந்து.

 

நன்றி !! வணக்கம் !!



அன்புடன் மதுரை T.R. பாலு.

புதன், 3 செப்டம்பர், 2014

நீதி என்றும் நேர்மை என்றும் எழுதி வைப்பார் ஏட்டிலே !!








பிஸ்மில்லாஹி ரஹ்மானிர் ரஹீம் !!



அஸ்ஸலாமு அலேக்கும் !!




அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!



அனைவருக்கும் என் இனிய காலை 


வணக்கங்கள்.


அப்பாடா !! ஒரு வழியாக 1996ம் ஆண்டு 


போடப்பட்ட செல்வி ஜெயலலிதாவின் 


வருமானத்திற்கு அதிகமாக சொத்து 


சேர்த்த வழக்கு இழு,இழு,இழு,இழு,இழு,


இழு,இழு,இழு,இழு,இழு,இழு,இழு,இழு,


என்று இழுத்தடித்து கிட்டத்தட்ட 17 


ஆண்டுகளைக் கடந்து விட்ட நிலையில் 


எதிர்வரும் செப்டம்பர் திங்கள் 2௦ம் தேதி 


அன்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் 


தீர்ப்பு வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டு 


உள்ளது. இதில் ஏதாவது கோக்கு மாக்கு 


செஞ்சு இன்னும் ஒரு பத்து வருஷத்துக்கு 


தள்ளிவைக்க வாய்ப்பு இருக்கா என்று ஒரு 


தரப்பு சிந்தித்துக் கொண்டிருக்கும் அதே 


நேரத்தில், நல்ல தீர்ப்பு வெளியாகவேண்டும் 


எந்தவிதமான தங்குதடைஎதும் இன்றி என 


நினைக்கும் நல்ல உள்ளங்களும் இங்கே 


இருக்கத்தான் செய்கின்றது. 


புரட்சி நடிகர் MGR  நடித்து வெளிவந்த கவிஞர் 


கண்ணதாசனின் படைப்பான "பாசம்" என்னும்  


படத்தில் ஒரு பாடல் வரும்:-


என்னதான் நடக்கும் !! நடக்கட்டுமே !!


இருட்டினில் நீதி மறையட்டுமே !!


தன்னாலே வெளிவரும் தயங்காதே !! ஒரு 


தலைவன் இருக்கிறான் மயங்காதே !!


என்ற பாடலின் வரிகளுக்கு இணங்க நீதி 


கடந்த பதினெட்டு ஆண்டுகளாக மறைந்துதான் 


இருந்தது. அது விஸ்வரூபம் எடுக்கும் நாள் 


எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2௦ம் தேது சனிக்


கிழமை ஆகும். அன்றோடு தமிழகத்தை பிடித்த 


சனியன் தொலைகிறதா அல்லது தொடர்கிறதா 


என்று பார்ப்போம்.  நான் ஏன் இப்படி 


சொல்கிறேன் என்றால் 197௦ம் ஆண்டில்  சத்யா 


மூவிஸ் திரு RM.வீரப்பன் அவர்கள் தயாரித்து 3௦ 


ஏப்ரல் 1971ம் ஆண்டு மத்திய தணிக்கைக் 


குழுவினரால் தணிக்கை செய்யப்பட்டு 


வெளிவந்த திரைப்படம்தான் MGR&மஞ்சுளா 


நடித்த ஈஸ்ட்மென் கலர்ப்படம்  "ரிக்ஷாக்காரன்" 


என்னும் படத்தில் வாலி பாடல் ஒன்று புனைந்து 


இருப்பார். 



அதில் இப்படி வரிகள் வரும் :-


அங்கே சிரிப்பவர்கள் சிரிக்க்கட்டும் !!                       


அது ஆணவச் சிரிப்பு !!                                                         


இங்கே நீ சிரிக்கும் புன்சிரிப்பே ஆனந்த சிரிப்பு!! 


நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் 


நாள் வரும்போது அன்று !!                                                 


சிரிப்பவர் யார் ? அழுபவர் யார் ?                                   


தெரியும் அப்போது !!                                                           


அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் 


சிரிப்பு !! ஆணவச் சிரிப்பு !!


                                                          (அங்கே சிரிப்பவர்கள்)


வயிறு வலிக்க சிரிப்பவர்கள் மனிதஜாதி !!-பிறர்


வயிறெரிய சிரிப்பவர்கள் மிருகஜாதி !! 


மனிதன் என்ற போர்வையில் !!

மிருகம் வாழும் நாட்டிலே !!

நீதி என்றும் நேர்மை என்றும் !!

எழுதிவைப்பார் ஏட்டிலே !!


                                                        (அங்கே சிரிப்பவர்கள்)


நாணல் போல வளைவதுதான் சட்டமாகுமா ?


அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் 


வேணுமா ?

தர்மத்தாயின் பிள்ளைகள் தாயின் கண்ணை 


மறைப்பதா ?


உண்மைதன்னை ஊமையாக்கித் தலைகுனிய 


வைப்பதா ?


                                                          (அங்கே சிரிப்பவர்கள்)



தோட்டம் காக்க போட்டவேலி !!


பயிரைத் தின்பதோ ?


அதைக்கேள்வி கேட்க ஆளில்லாமல் 


பார்த்து நிற்பதோ ?


நானொரு கை பார்க்கிறேன் !!


நேரம் வரும் கேட்கிறேன் !!


பூனை அல்ல புலிதான் என்று !!


போகப்போக காட்டுகிறேன் !!


போகப்போக காட்டுகிறேன் !!


                                                          (அங்கே சிரிப்பவர்கள்) 


சட்டம் நாணல் போல வளைகிறதா ?


அல்லது நீதியின் செங்கோல் நேராகவும் 


நேர்மையாகவும் இருக்கிறதா ?   இந்த 


அனைத்துக் கேள்விகளுக்கும் நாம் விடை 


காணும் நாள்தான் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 


2௦ம் தேதி சனிக்கிழமை.2௦14.                                         


ஜெயிக்கப்போவது யாரு ? அன்று தெரிந்துவிடும் 


எனது அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!                     


நன்றி !! வணக்கம் !!


அதுவரையில் பொறு மனமே பொறு !!                                            



அன்புடன் மதுரை TR பாலு.