புதன், 6 ஏப்ரல், 2016

நா காக்க... .... ( தமிழ் இனத்துரோகி, அரசியல் புரோக்கர் கோபாலசாமிக்கு இறுதி எச்சரிக்கை )





                      நா  காக்க !!....

( தமிழ் இனத்துரோகி, அரசியல் புரோக்கர்
கோபாலசாமிக்கு இறுதி எச்சரிக்கை !!)

அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!

அனைவருக்கும் வணக்கம்.

எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

நேற்றையதினம் தமிழினத்துரோகி, மற்றும்
அரசியல் புரோக்கர் கோபாலசாமி, தனது
திருவாய் மலர்ந்து,  முத்தமிழ் அறிஞர்
தமிழினத் தலைவர் திரு கலைஞர் அவர்களை
ஒருமையிலும், சாதியைக் குறிப்பிட்டும்,
அரசியல் நாகரீகம் என்பது கடுகு அளவுகூட
இல்லாமல் பேசியதைக் கேட்டு, தமிழகமே
பொங்கி எழுந்து புயலாக வீசியதை நாம்
அனைவரும் தொலைக்காட்சியில் கண்டு
துடிக்காத தமிழன் இதயம் எதுவும் இல்லை
என்றே சொல்ல வேண்டும். எதிர்பார்க்க
வில்லை கோபாலு, தனது பேச்சுக்கு இந்த
அளவு எதிர்ப்பு எழும் என்று. மேலும் அவர்
அமைத்துள்ள, மக்கள் நலன் கெடுக்கும்
அணியின் ஏனைய தலைவர்களான, திருமா,மற்றும் திரு ஜி.ராமகிருஷ்ணன் அவர்கள் 
கூட கண்டிக்கின்ற அளவிற்கு நிலைமை 
விபரீதம் ஆனதால், துரோகி கோபாலு, வேறு 
வழியின்றி, தனது வாழ்நாளில் செய்த மிகப்
பெரிய குற்றம், தாயுள்ளம் கொண்டு தம்மை 
தலைவர் மன்னிக்க வேண்டும் என்று அறிக்கை 
வெளியிட வேண்டிய நிலைமைக்கு அவர் 
தள்ளப்பட்டது கண்டு தமிழ்சமுதாயம் ஒரு 
முடிவுக்கு வந்து விட்டது என்றே நான் கூறிட 
கடமைப்பட்டு உள்ளேன். அதாவது துரோகி 
கோபாலுக்கு, மன நோய் பிடித்து, அது அவரது 
மண்டைவரை ஏறி நின்று கிறுக்கு பிடித்து 
உளறிட ஆரம்பித்துவிட்டார் என்றே  தமிழ் 
சமுதாயம் கருதிட வேண்டியுள்ளது.

அட..கோபாலசாமி...இந்த அளவிற்கு நீ தறி
கெட்டுப்பேசிட வேண்டிய அவசியம் என்ன 
வந்தது ? இப்படி எல்லாம் பேசச்சொல்லி 
உனக்கு ஜெயா எத்தனை கோடிகள் மேலும் 
தந்தார் ? அட..பைத்தியக்காரா..நீ..எல்லாம் 
ஒரு மனிதனா ? அட..மனிதப்பதரே. தமிழக 
அரசியலில் உனக்கு அடையாளம் தந்து 
மகிழ்ந்த மனித சிகரமடா தலைவர் கலைஞர்.
அவரது தயவினால் எறத்தாள மூன்று முறை,
பதினெட்டு ஆண்டுகள் மாநிலங்களவை 
உறுப்பினராக உன்னை அமர வைத்து, அழகு 
பார்த்த உள்ளமடா தலைவரின் உள்ளம். நீ 
பேசுகின்ற பேச்சினில் தனது உள்ளத்தைப் பறிகொடுத்து அதனால் உவகை அடைந்த உத்தமாமான உள்ளமடா கலைஞரின் உள்ளம். நீ வாழ்வதற்கு உயிர் தந்து உதவிய தாயின் பாலை அருந்திவிட்டு அந்த மார்பகத்தையே அறுத்து உண்ணுகின்ற நீ ஒருகேவலத்திலும்கேவலமான பிறவியடா நீ.இப்படி ஒரு கீழ்த்தரமான அரசியலை இங்கே தமிழகத்தில், இதற்கு முன்பும் சரி, இனிமேலும் சரி, யாரும், எவரும் நடத்தியதும் இல்லை இனி நடத்தப் போவதும் இல்லை.


உண்மையிலேயே நீ ஒரு நல்ல சாதியில்
பிறந்திருந்தால், இப்படிப்பேசியதற்கு இங்கே 
நீ மன்னிப்பு மட்டும் கேட்டால் போதாதடா.
திருவிளையாடல் என்ற திரைப்படத்தில்,
நடிகர் மறைந்த பாலையா சொன்னது போல,
இனிமேல் நீ வாயைத்திறந்து பேசக்கூடாது.
இத்துடன் அரசியல் துறவறம் கொண்டு அங்கே 
போயஸ்கார்டன் சென்று அம்மையார் வீட்டு 
கக்கூசை சுத்தம் செய்து, உனது பிழைப்பை 
நீ நடத்துவாயாக. இதுதான் உனக்கு தமிழ் 
சமுதாயம் வழங்குகின்ற உச்சபட்ச தண்டனை 
ஆகும்.

நேற்றோடு முடிந்து விட்டது உனது அரசியல் 
பிழைப்பு. நீ சோத்துக்கு உப்பு போட்டு தின்பது 
உண்மையானால், ஒரு தகப்பனுக்கு பிறந்த 
பிரகஸ்பதி என்பது உண்மையானால், இந்த 
நாட்டை விட்டு ஓடி விடு. இல்லையென்றால் 
நாங்களே உன்னை துடைப்பக்கட்டை கொண்டு 
துரத்தி விரட்ட வேண்டி இருக்கும் என்பதனை 
எச்சரிக்கையாக இங்கே தருகிறோம்.


ஓடி விடு துரோகி !! 


நன்றி !!  வணக்கம் !!


கோபத்துடன். மதுரை T.R. பாலு.

திங்கள், 4 ஏப்ரல், 2016

அந்தப்பருப்பு இப்ப வேகாது பொம்பள !! (2014 பாராளுமன்ற தேர்தலில் கிடைத்த ஒட்டுக்கள் இப்ப உனக்கு 2016 சட்டமன்றத் தேர்தலில் எப்படி கிடைக்கும் ?)





இப்போது அந்த வெற்றி நிச்சயம் 

         உனக்கு கிடைக்காது !!




அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!


அனைவருக்கும் வணக்கம்.

எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

வழக்கம்போல அதிரடியாக நேற்றைய தினம் 
ஜெயலலிதா, தனது கட்சியின் வேட்பாளர் 
பட்டியலை அறிவித்திருக்கிறார். எதற்காக 
என்றால், நேற்றையதினம், திமுக காங்கிரஸ் 
தேர்தல் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது 
என்ற செய்தியின் வேகத்தை குறைத்திட 
அவர் செய்த செயலாகவே என்போன்ற 
அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
அது மட்டுமல்ல, தனது தேர்தல் சுற்றுப்பயண 
விபரமும்கூட அறிவிக்கப்பட்டு உள்ளது.
இவை அனைத்தும் எந்த விஷயத்தை 
அடிப்படையாகக் கொண்டு அறிவிக்கப்பட்டு 
உள்ளது என்று ஆராய்ந்து பார்த்தால், நமக்கு 
கிடைக்கும் விடை இதோ :-

1)  சென்றமுறை 2014 பாராளுமன்றத்தேர்தல் 
நடந்த போது இதேபோல அதிரடியாக அவர் 
39 தொகுதிகளுக்கும் அறிவித்து அதில் 37ல்
வெற்றி பெற்றதை மனதில் எண்ணியே ஜெயா 
இவ்வாறு செய்திருக்கிறார். 

ஆனால், அதுபோல ஒரு வெற்றி இந்தமுறை 
அவருக்கு சாத்தியமா ? என்று கேட்டால் அது 
நிச்சயம் கிடைக்காது என்பதே நாங்கள் போடும்
கணக்கு.

எப்படி என்றால், சென்ற பாராளுமன்றத் தேர்தல் 
நடந்தபோது இருந்த சூழ்நிலை தற்போது ஜெயாவுக்கு சாதகமானதாக இல்லவே இல்லை.

1) அப்போது உங்களோடு தேர்தல் ஆணையம் 
எழுதப்படாத கூட்டணி ஒன்று வைத்திருந்தது.
அது தற்போது இல்லை.

2)  சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம் ஆகிய இந்த மூன்று மாவட்டங்களிலும் அதுபோல கடலூர் மாவட்டத்திலும் மழை, வெள்ள பாதிப்புக்கள்,அதனால் மக்கள் அடைந்த வேதனைகள்,மேலும்  துன்பங்கள், துயரங்கள், கண்ணீர் வெறுப்புக்கள் உங்கள் மீது அப்போது இல்லை. ஆனால் இப்போது மக்கள் மனதளவில் வெகுண்டெழுந்து கோபம் மிகுந்து, தேர்தல் வரட்டும், உங்களுக்கு நல்ல பாடம் கற்பிக்க வெறியோடு காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

3)  தங்களது ஆட்சியின் மீதும், அந்த அவலநிலை 
மீதும், அமைச்சர்களின் லஞ்சலாவண்ய செயல்கள் அப்போது இந்த அளவு வெளியே தெரியவில்லை. தற்போது நிலைமை சிரிப்பாய் சிரிக்கின்றது.

4)  அப்போது தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் 
" நமக்கு நாமே " என்ற எழுச்சிப்பயணம் அப்போது இல்லை. இப்போது அந்த சுற்றுப்பயணம் தந்த நல்லதோர் எழுச்சி, இந்த லஞ்ச லாவண்ய ஆட்சியை மாற்றியே 
ஆகவேண்டும் என்ற மக்களின் துடிப்பு இப்போது 
மிக நன்றாகவே தெரிகின்றது.

5) அப்போது உங்களால்உங்களுக்குஅடிமையாக 
இருந்த தேர்தல் ஆணையத்தின்துணைகொண்டு 
பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு மூலமாக 
உங்கள் கட்சியினர் மிகவும் இலகுவாக மக்கள் 
வசம் ஓட்டுக்கு பணம் தந்த வசதி தற்போது இங்கே முடியவே முடியாது என்ற நிலையில் உங்களது வாக்கு வங்கி கணிசமான அளவில் குறைந்திடவே அதிக அளவில் வாய்ப்பு உள்ளது.

6) இவை அனைத்திற்கும் சிகரம் வைத்தார்போல்
அப்போது உங்களது சொத்துக்குவிப்பு வழக்கின் 
உச்சநீதிமன்றத்தில் இறுதிக்கட்டத்தை எட்டாத 
சூழல்,தற்போதுகிடையாது.போகின்றபோக்கைப்
பார்த்தால், தேர்தலுக்குமுன்பாகவேஅதுமுடிந்து 
தீர்ப்பு வெளியாகக்கூடிய சூழல் தங்களுக்கு அங்கே சாதகமா ? அல்லது பாதகமா என்பது அறிந்தவன் அந்த இறைவன் ஒருவனே ( ஈட்டி அது பாயும் எட்டியதூரம் வரை மட்டுமே !! பணம் அது பாயும் உச்சநீதிமன்ற நீதிமன்ற நீதிபதிகள் பையிலே!!என்றதொரு புதிய தத்துவத்தை தங்களால் தவிர வேறு யாரால் தரமுடியும் அம்மையாரே!!)

8)  அப்போது திமுக காங்கிரஸ் தனித்தனி அணியாக நின்றது. தற்போது இணைந்துள்ளது தங்களது வாக்கு வங்கியை கணிசமாக பாதிக்கும்.

எது எப்படியோ, தங்களால் இந்தமுறை சட்டமன்றத் தேர்தலில் தங்களது அணியால் அதிக பட்சம் 25 தொகுதிகளுக்கும் குறைவாகவே பெற்றிட இயலும் என்பதே அரசியல் ஆர்வலர்கள் போடும் கணக்கு.

இவன் போட்ட கணக்கு ஒன்று !!
அவள் போட்ட கணக்கு ஒன்று !!


என்று தலைவர் கலைஞர் எழுதிய பாடலின் வரிகள் படி யார் போட்ட கணக்கு வெற்றி பெரும் என்பது நாம் தெரிந்துகொள்ளும் தேதி மே மாதம் 19ம் தேதி பகல் 1.௦௦ மணியளவில்.

அதுவரை பொறுத்து இருப்போம். 

தர்மமே வெல்லும்.வெல்ல வேண்டும்.

நன்றி !!  வணக்கம் !!


அன்புடன். மதுரை. TR.பாலு.

சனி, 2 ஏப்ரல், 2016

யாரைப்பார்த்து யார் பயப்படுவது ? தெரியாமல்தான் கேட்கிறேன் !!( நடிகர் விஜயகாத்தைப் பார்த்து தளபதியா பயம் கொள்ளப்போகிறார் ? )







யாரைப்பார்த்து யார் பயப்படுவது ?




அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

அனைவருக்கும் காலை வணக்கம்.
இரண்டு தினங்களுக்கு முன்பாக அரசியல் 
மேடை ஒன்றினில் ஆரம்பப் பள்ளியில் 
காலடி எடுத்து வைத்துள்ள ஒரு பெண் 
ஏறத்தாள நாற்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் 
மேலாக, இங்கே அரசியல் களத்தில் பல்வேறு 
போராட்டங்கள், பதவிகள், பட்டங்கள் முதலியன பெற்று இங்கே களம் கண்டு கொண்டிருக்கும் நமது தளபதி திரு.ஸ்டாலின் அவர்கள் அந்த பெண்மணியின் வீட்டுக்காரர் நடிகர் விஜயகாந்த்தை பார்த்து பயம் கொண்டு உள்ளார் என்று தனது திருவாய் மலர்ந்து பேசியதைக் கேட்டால்அன்பர்களே, என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. 

அதனால்தான் நான் இந்தக் கட்டுரைக்கு தலைப்பாக தந்துள்ளது 

" யாரைப்பார்த்து யார் பயப்படுவது "

என்று. வாய் இருக்கிறது, இந்திய அரசியல் 
அமைப்பு சட்டம் தந்துள்ள பேச்சுரிமை இங்கே 
இருக்கிறதுஎன்பதற்காக,எதுவேண்டுமானாலும் 
பேசுவது என்பது நாகரீகம் இல்லை அம்மணி 
பிரேமலதா அவர்களே. உங்களுக்கு என்ன 
தெரியும்  எங்கள் தளபதியைப் பற்றி. நீங்களும் 
சரி, உங்களது ஆத்துக்காரரும் சரி எங்களது 
தளபதியின் காலடி மண்ணிற்கு ஈடாவீர்களா ?
அவரது தொண்டுக்கு, தியாகத் திருஉள்ளத்திற்கு.
அவர் பட்ட மிசா காலக் கொடுமைகளுக்கு. உம்..
கேட்கிறேன் கேள்வி. பதில் சொல்ல தெம்பு, திராணி,வக்கு,யோக்கியதை ஏதாவது கடுகு அளவாவது உங்கள் இருவரிடம் இருக்கிறதா ? என்னவோ அடித்த ஆடிக்காற்றில் பறந்த எச்சிலிலை கோபுரம் மீது அமர்ந்த கதைதானே உங்கள் ஆத்துக்காரர் இங்கே அரசியல் பிரவேசம் செய்தது ? அதுமட்டுமல்ல ஆணவக்காரி ஜெயா போட்டபிச்சைச்சோறுதானே உங்கள்கணவர் அடைந்த  எதிர்கட்சித்தலைவர் பதவி என்பது ? எங்கள் தளபதி அப்படி அரசியல் நடத்தியது என்பது அவரது அரசியல் வரலாற்றில் எங்குமே காண முடியாதே. தன்னுடைய தீவிர 
கடுமையான உழைப்பு ஒன்றினால் மட்டுமே 
அவர் பெற்ற பதவிகளும் பட்டங்களும் ஏராளம்.
ஏராளம். நீங்கள் இருவருமே குன்னக்குடிக்கு 
அன்னக்காவடி எடுத்தாலும் அவரளவிற்கு 
உயரவும் முடியாது உழைத்து முன்னேறவும் 
வாய்ப்பு என்பது கிடையவே கிடையாது. இந்தத் 
தேர்தலோடு தமிழக அரசியல் அகராதியில் 
இருந்து துடைத்து எறியப்படும் பெயர் பட்டியலில் உங்கள் இருவரின் பெயர்களும்தான் முதல் இரு இடங்களைப் பெற்று உள்ளது என்பதை மறந்து எதுவும் பேசாதீர்கள் அம்மணி. 

சிறுநரி பார்த்து சிங்கம் என்றுமே பயம் கொண்டதாக வரலாறு இல்லை.

சீற்றம் கொண்ட வேங்கைப்புலி சின்னஞ்சிறு
மானைப்பார்த்து மிரண்டுள்ளதாக வரலாறு உண்டா ?

மதங்கொண்ட யானை சின்னஞ்சிறு சுண்டெலியைக்கண்டு எங்காவது ஓடி ஒளிந்ததுதான் உண்டா ?


அம்மணி எச்சரிக்கின்றோம் உங்களை. வள்ளுவர் சொன்ன வாக்குப்படி நாக்கை அடக்கிப் பேசிடக் கற்றுக்கொள்ளுங்கள். இல்லை என்றால் இழிவும் அவமானமும் மட்டுமே நீங்கள் அறுவடை செய்கின்ற 
பயிராக இருந்துவிடும். இன்னும் உங்களுக்கு வயசு இருக்கிறது. இருக்கும் வரை யாருடைய ஆவலாதிக்கும் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகாமல் இருந்தால் அது 
உங்கள் ஆத்துக்காரரின் ஆயுசுக்கு நல்லது.

அவ்வளவுதான் சொல்ல முடியும். அதற்கு அடுத்து விதிப்படியே எல்லாம் நடக்கும்.

நன்றி !!. வணக்கம்!!

கொந்தளிக்கும் உள்ளத்துடன்.மதுரை. TR.பாலு.