வியாழன், 5 மே, 2016

திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தமிழக வாக்காளப் பெருமக்கள் இந்த முறை ஏன் வாக்களிக்க வேண்டும் ?






நாம் ஏன் வாக்களிக்க வேண்டும் தி.மு.க. விற்கு ?




அன்பு மிகுந்த தமிழக வாக்காளப் பெருமக்களே !!

எதிர்வரும் மே மாதம் 16ம்தேதி நடைபெற உள்ள 
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தேர்தலில் நாம் 
அனைவரும் ஏன் ? எதற்காக ? திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் எனும் கேள்விக்கான பதிலை விலாவாரியாக உங்களுக்கு விளக்கிக் கூறிடும் கட்டுரை இது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக ( 2011 to 2016 ) இங்கே 
நடைபெற்ற ஆட்சி, தமிழக மக்களுக்கு எந்தவிதமான நன்மையையும் செய்திடவே இல்லை என்பது உண்மை.  

அப்படி என்றால், அடுத்து நாம் இங்கே யாரை ஆளும் பணியில் அமர்த்துவது ? என்று எண்ணிப்பார்க்கையில் நம் முன்னே கீழ்க்கண்ட அரசியல் கட்சிகள் மற்றும் அதன் கூட்டணிகள், வரிசை  வரிசையாக வந்து இங்கே நிற்பதை நாம் காண்கிறோம். அவை யாதெனின் :-

1) தமிழ் இனத்தலைவர் கலைஞர் தலைமையில் உள்ள இந்திய தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒரு அணி.

2)  மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரில் தேமுதிக கட்சி தலைவர் நடிகர் விஜயகாந்த்தை முதல்வர் என்று இங்கே முதன்மைபடுத்திய ஒரு 6 கட்சிகள் கொண்ட ஒரு அணி.

3)  பாரதிய ஜனதா கட்சியின் தலைமை கொண்ட அணி.

4)  சீமான் தன்னை முன்னிருத்திக்கொண்ட ஒரு அணி.

5)  மருத்துவர் அய்யா  இராமதாசு அவர்களை தலைவராக அவரது சீமந்தபுத்திரன் திரு. அன்புமணி அவர்களை முதல்வர் வேட்பாளராகக் கொண்டுள்ள பாட்டாளி 
மக்கள் கட்சி  மற்றும் ஒரு அணி.

இப்படியாக பல்வேறு கட்சிகள் தங்களுக்கு தமிழ்நாட்டை ஆளுகின்ற வாய்ப்பினை வழங்கிட வேண்டும் என்று மேடைக்கு மேடை, ஊருக்கு ஊர் சென்று மக்களிடம் வாக்கு கேட்டு அலைகின்ற காட்சியையும் நாம் இங்கே 
காண்கின்றோம்.

சரி. அதில் இருந்து யாரை நாம் ஆட்சிக்கட்டிலில் அமர வைத்து, வருகின்ற 5 ஆண்டுகளுக்கு அவர்களிடம் நமது எதிர்காலத்தை ஒப்படைத்திட வேண்டும் ? என்று தமிழக 
வாக்காளப்பெருமக்களுக்கு அறிவுரை சொல்லுகின்ற விதமாக, இந்த கட்டுரை இங்கே உங்கள் அனைவருக்கும் வழங்கிடப் படுகின்றது என் அன்புத்தமிழ் நெஞ்சங்களே.

திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நாம் அளிக்கும் வாக்கு, நமக்குப் பயன் தந்திடுமா ? என்று சிந்தித்துப்பார்த்தால், நம்மை அவர்கள் ஏற்கனவே பல்வேறு காலகட்டங்களில் ஆண்ட ஒரு கட்சி. 

அதுமட்டுமல்ல,நமது தமிழ்நாட்டிற்கு நல்ல பல உருப்படியான திட்டங்களை செயல்படுத்தி அழகு பார்த்த கட்சியும் கூட.  ஆண்ட காலங்கள் அனைத்திலும், மத்தியில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அவர்களோடு அனுசரித்துப்போய் தமிழக நலன் சார்ந்த பல நல்ல திட்டங்களை, இங்கே அமல் படுத்திய பெருமை திமுக வுக்கு என்றென்றும் உண்டு. அதுபோலவே அண்டை மாநிலங்களோடு சண்டை செய்திடாமல் 
அவர்களோடும் விட்டுக்கொடுத்தும், அனுசரித்தும் பல்வேறு தீராத பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு அதனால், தமிழகத்திற்கு நலன் தேடித்தந்த நல்ல ஒரு கட்சியும் இது ஒன்றே. 

பொதுவாக, அரசியல் செய்து ஆட்சியில் அமர்ந்து மக்கள் பணி செய்வது என்பது, ஒரு பெரிய தூய மலைத்தேன் நிறைந்த ஒரு பானையில் கை விட்டு வேலை செய்வது போன்ற ஒன்றாகவே கருதப்படுகின்றது. அதில் ஈடுபடுபவர்கள் எப்படியாகிலும்   சிறிதளவே ஆனாலும் தேனை உண்ணாமல் இருக்கவே இயலாது.

அதன்படி பார்த்தால், தாங்களும் ஓரளவு பயன்பெற்று, மக்களுக்கும் பல்வேறு நன்மைகளைப் பெற்றுத்தந்த கட்சி என்று பார்க்கின்றபோது, இங்கே திராவிட 
முன்னேற்றக்கழகத்தை விட்டால், வேறு எந்தவித நாதியும் தமிழனுக்கு இல்லை என்பதே பொதுக்கருத்து.

நான் மேலே குறிப்பிட்டுள்ள திமுக தவிர உள்ள எல்லாக் கட்சிகளுக்கும், ஆட்சி எப்படி நடத்துவது என்பதை அவர்கள் கற்றுக்கொள்ளவே ஏதாவது ஒரு பள்ளியில் 
சேர்ந்து 1ம் வகுப்பில் இருந்து பாடம் படித்து பின்னரே அதை அறிந்திடும் அளவிற்கே அறிவு படைத்தவர்களாக இருக்கிறார்கள் என்பது உண்மை.

எனவே நான் இங்கே இறுதியாக, உறுதியாக, அறுதியிட்டு கூறிடக் கடமைப்பட்டுள்ளது என்னவென்றால் எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் நாம் அனைவரும் இங்கே 
வாக்களித்து ஆட்சிக்கட்டிலில் அமரவைத்திட வேண்டிய ஒரே கட்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் உள்ள ஒரே அணிதான். அதற்கு மட்டுமே நமது பொன்னான 
வாக்குகளை அளிப்போம் என்று உறுதி கூறி உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகின்றேன்.

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R. பாலு.