செவ்வாய், 25 அக்டோபர், 2016

மெல்ல மெல்ல மோடி பக்கம் சாய்கிறதா ? தமிழக அரசு !!





அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

அனைவருக்கும் காலை வணக்கங்கள்.

எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

தமிழக அரசியல் சூழலில் பல்வேறு வகையான மாற்றங்கள் நடைபெற்று வருவது, இப்போது கண்கூடாக தெரிகிறது அன்பர்களே.                                     
எப்படி என்றுகேட்டால்,முதல்வர்உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், அவர் விரைவில் 
உடல்நலம் பெற்று வீடுதிரும்பி,அரசுப்பணிகளை கவனிக்க வேண்டும் என்பது நம் அனைவரின் விருப்பம் என்பது ஒருபுறம் இருந்தாலும், இங்கே 
அரசியல் பணிகளில், முதல்வரிடம் இருந்த அனைத்துத் துறைகளும் நிதி அமைச்சரிடம் கைமாறிய பின்பு, முதல்வர் அவர் நன்றாக உடல்நிலைஇருந்த காலங்களில் கடைப்பிடித்துவந்த பல கொள்கைகளில் இப்போது உள்ள நிதி அமைச்சர் கீழுள்ள அமைச்சர்கள் முதல்வர் இதுவரை எடுத்த தைரியமான  நிலையில் இருந்து நழுவி மோடி அவர்கள் செயல்படுத்தி வந்த திட்டங்கள் 
பக்கம் சாய்வது மிகவும் நன்றாகவே இங்குள்ள அரசியல் ஆர்வலர்களால் உணரப்படுகிறது அன்புத்தமிழ் நெஞ்சங்களே.

எப்படி என்றால் :-

1)  முதல்வர் அவர்கள், இதுநாள்வரையிலும் மிக மிகக் கடுமையாக எதிர்த்து வந்த " உதய் " 
மின்திட்டத்தில் இப்போது உள்ள திரு பன்னீர்செல்வம் தலைமையில் உள்ள 
மின்துறை மந்திரி, டெல்லிக்கு வலுவிலே சென்று முந்தி விரித்த கதையாக அந்தத்திட்டம் தமிழகத்திலே இனிமேல் அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது அரசியல் ஆர்வலர்களின் முதல் சந்தேகம்.

2)  அடுத்தது என்னவென்றால், மருத்துவ படிப்பில் சேர்வதற்கு," நீட் " என்ற நுழைவுத் தேர்வை முதல்வர் ஜெயலலிதா அவர்கள், தமிழகத்தில் அமல் படுத்தக்கூடாது என்பதில் மிகவும் அழுத்தமாக இருந்த நிலைமை மாறி, நேற்று அந்த கல்வித்துறை அமைச்சர் டெல்லி சென்று, அங்கேயும் வலுவிலே சென்று முந்தி விரித்த கதையாக, நீட் தேர்வு எழுத பயிற்சி மையங்கள் தமிழ்நாட்டில் தொடங்கப்படும் என்று கட்சி விட்டு கட்சித்தாவி வந்த அமைச்சர் மா.ஃபா. 
பாண்டியராஜன்பத்திரிகைமற்றும்தொலைக்காட்சி நண்பர்களிடம் பேட்டி அளிக்கும்போது கூறியதை எல்லாம் ஒருசேர வைத்துப்பார்கின்ற போது இங்கே நாம் என்ன முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது என்று கேட்டால், 
உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு 
அனுமதிக்கப்பட்டு உள்ள முதல்வர் இப்போதைக்கு வீட்டிற்கு திரும்பிவர 
வாய்ப்பில்லை என்றதொரு முடிவுக்கு வந்த மத்திய அரசாங்கம், இங்கே மக்கள் பணி ஆற்ற வேண்டிய அனைத்து அமைச்சர் பெருமக்களும் அவரவர் சொந்த நலனில் மட்டும் அக்கறை செலுத்தி, ஒவ்வொருவரும் பல்லாயிரம் 
கோடிகள் பணம்சேர்த்து,குவித்துவைத்துள்ளதை ஆவணங்கள் ரீதியாக வருமானவரித்துறை மற்றும் அதன் புலனாய்வுப் பிரிவு ஆகியவைகள் மூலம் இந்த அமைச்சர்களின் பிடிகள் மத்தியில் உள்ள ஆளும் பி.ஜே.பி. அரசாங்கத்தின் கைகளில் சிக்கிக் கொண்டுள்ள காரணத்தால், அதனை பகடைக்காயாக பயன்படுத்தி, அதன் மூலம் இங்கே உள்ள அமைச்சர் பெருமக்களை பயமுறுத்தி, மத்திய அரசாங்கத்திற்கு சாதகமாக, மைய அரசாங்கம் அமல் படுத்திட நினைக்கும்உத்திரவுகள் அனைத்தையும் இங்கே 
தமிழ்நாட்டில் செயல் படுத்திட வேண்டும் அவ்வாறு செய்திட மறுத்தால், இவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவதோடு, இவர்கள் சட்டத்திற்கு புறம்பாக ஈட்டிய அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மற்றும் 
ரொக்கப்பணம் இவைகள் மத்தியில் ஆளும் அரசால் கைப்பற்றப் பட்டு, இவர்கள் மீது, துறை ரீதியாக கிரிமினல்வழக்குகள் தொடுக்கப்பட்டு, இவர்கள் அனைவரும் காராக்கிரகத்தில் (ஜெயிலில்) தள்ளப்படுவார்கள் என்று மிரட்டி, 
அந்த மிரட்டலுக்கும் கைது நடவடிக்கைகளுக்கும், பறிமுதல்களுக்கும் பயந்து போய் மட்டுமே அமைச்சர்கள், மத்தியில் ஆளும் மோடி அரசாங்கம் சொல்லுகின்ற அனைத்து திட்டங்களையும் செயல் படுத்துகின்றனவோஎன்று பொது மக்களுக்கு சந்தேகம் ஏற்படுவது என்பது இயல்பான ஒன்றுதான்என்றே அரசியல் ஆர்வலர்கள் கருதுகிறார்கள். ஆக, முதல்வர் இதுவரை காத்து வந்த மத்திய அரசின் காட்டு தர்பார் திட்டங்களை இங்கே இனிமேல்செயல்படுத்த மாட்டோம்  
என்று எவ்வளவுக்கு எவ்வளவு அம்மையார் உறுதியுடன் எதிர்த்து வந்தாரோ அவை அத்தனையையும் இங்குள்ள அமைச்சர்கள் தங்களது சொந்த நலனுக்காக, அம்மையார் பிறப்பித்தஅத்தனைஉத்தரவுகளையும்காற்றினில்பறக்க விட்டுவிட்டு மைய அரசுக்குலாலிபாடத்துணிந்துசெயல்படுகிறார்களே என்று ஆளும் கட்சியின் அடிப்படை தொண்டர்கள் எண்ணுவதில், பொருள் 
இல்லாமல் இல்லை என்று கூறி கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R.பாலு. 

வெள்ளி, 7 அக்டோபர், 2016

" மரணம் " இதைத் தவிர்க்கவே முடியாதா ? மறைந்த இசை முரசு நாகூர் E.M.ஹனிபா பாடிய பாடல்!!





மனிதனால் தவிர்க்க முடியாதது                              

                     " மரணம் " 

                      




அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

அனைவருக்கும் இனிய இதயம் கனிந்த 
மாலை வணக்கங்கள்.

மறைந்த கவியரசர் கண்ணதாசன் எழுதிய 
பாடல், " பாவமன்னிப்பு " திரைப்படத்தில் 
இடம்பெற்றது.

பறவையைக் கண்டான் !!
விமானம் படைத்தான் !!
பாயும் மீன்களில் !!
படகினைக் கண்டான் !!
எதிரொலி கேட்டான் !!
வானொலி படைத்தான் !!

என்ற வரிகளில் மனித இனத்தின் அதியற்புத 
படைப்பாற்றலை புகழ்ந்திருந்தார் கவியரசர்.
இவ்வளவு திறமை கொண்ட மனித இனத்தால் 
மரணத்தை முற்றிலும் தவிர்க்கவோ அல்லது 
தள்ளிப்போடவோ முடிந்ததா ? என்றால் இன்று 
மருத்துவ விஞ்ஞானம் வெகு வேகமாக பெருகி 
வளர்ந்துள்ள சூழலில், மேலே குறிப்பிட்டுள்ள 
விஷயம் என்பது ஓரளவு சாத்தியமாகத்தான் 
உள்ளதே தவிர, முற்றிலும் மரணத்தைத் தள்ளிப் 
போட யாருக்கும் அதிகாரம் இல்லை, ஏனென்றால்  அது நம்மைப்படைத்த பரம்பொருளின் கைகளில் வைத்துக் 
கொண்டிருக்கும் ஒரு " வீட்டோ " சக்திதான் 
என்பது முற்றிலும் உண்மை. உண்மையைத் 
தவிர வேறு ஒன்றும் இல்லை.

கிறிஸ்த்துவ மதம் என்ன சொல்லுகிறது என்றால் :-

பாவத்தின் சம்பளம் " மரணம் " என்று.

நம் கழகத் தலைவர், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் தான் வசனம் எழுதிய "மனோகரா "திரைப்படத்தில் என்ன சொல்லியுள்ளார் எனில்:-

கடலிடை துரும்பம்மா !!
மனித வாழ்வு !!

என்று. 

மறைந்த கவியரசர், நடிகர் திலகம் மறைந்த 
சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்த "தெனாலிராமன்"திரைக்காவியத்தில் :-

உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர்நாள் !!
சொல்லாமல் போவார் அல்லாவிடம் !! -அவர் 
முன்னாளில் சேர்த்த செல்வங்களாலே !!
பின்னோர்கள் சந்தோசம் கொண்டாடுவார் !!

என்று எழுதியிருந்தார். 

மறைந்த இசை முரசு நாகூர் E.M.ஹனிபா மரணத்திப் பற்றி, அதன் உண்மைத்தன்மையை மிகவும் சிறப்பாக விளக்கிக்கூறும் விதமாக ஒரு பாடல்ஒன்று பாடியிருப்பார்.                         

அதுஎன்ன என்றால் :-

மவுத்தையே (மரணம்) நீ மறந்து வாழலாகுமா ?
மாறிடும் பூமியில் நீந்துதல் நியாயமா ?

மன்னாதி மன்னர் எல்லாம் நிரந்தரமாய் 
இருந்ததில்லை !!
மகத்தான முறையில் வாழ்ந்த !!
மனிதரெல்லாம் நிலைத்ததில்லை !!பொன்னான செல்வந்தரும் !!
பூவுலகில் நிலைத்ததில்லை !!
பூவுலகின் இன்நிலையை புரிந்திடாமல் !!
பிதற்றுகிறாய் !!

                                                                      ( மவுத்தையே )

நிச்சயம் மரணம் வரும் !!
நீ ஒரு நாள் இறந்திடுவாய் !!
நேசரெல்லாம் அழுதபின்னே !!
நீ செந்தூக்கில் ஏறிடுவாய் !!
அச்சான கபர்ஸ்தானில் ( புதைகுழி) !!
நீ அடங்கி மண்ணாவாய் !!
அந்நாளை எண்ணிடாமல் நீயும் !!
ஏனோ பிதற்றுகிறாய் !!

                                                                         ( மவுத்தையே)

என்று அன்னார் பாடிய அந்த மிக அற்புதமான அந்தப்பாடல் என் சிந்தனையைக் கவர்ந்திருந்தது அந்நாளில். 

அது சரி. அதை ஏன் இப்போது இங்கே நான் கட்டுரை வடிவத்தில் தருகிறேன் ? என்று வாசகர்களாகிய நீங்கள் உங்கள், புருவங்களை உயர்த்தி என்னைப்பார்த்து கேள்வி எழுப்புவது என்னால் இங்கிருந்தே அறிந்திட முடிகிறது என் அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

தற்போது தமிழகத்தில் நிலவுகின்ற ஒரு சற்றும்
எதிர்பாராத ஒரு அசாதாரணமான சூழலுக்காக 
நான் இந்தக் கட்டுரையை எழுதுகிறேன் என்று 
உங்களில் யாராவது நினைத்தால் நிச்சயம் அதற்கு நான் முற்றிலும் பொறுப்பல்ல. 

அதற்காக நான் இங்கே கட்டுரை  எழுதிட முன்வரவில்லை. மனித வாழ்வின் 
நிச்சயமற்ற உண்மையை, வாசகர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றிட வேண்டும் என்ற உண்மையான எண்ணத்தின் வெளிப்பாடே அன்றி வேறு எதுவுமில்லை அன்புத்தமிழ் நெஞ்சகளே !!

மறைந்த என் அன்புத் தந்தை அவர் பேசும்போது
தவறாமல் இந்த வாசகங்களை  அடிக்கடி நினைவு படுத்திப் பேசுவது அவரது வழக்கம்.

மனிதன் இருப்பது பொய் !!
அவன் இறப்பது மெய் !!
இந்த பூமியில் நாம் வாழ்ந்து 
மடிந்துபோகும் வரையில், நாலு பேருக்கு நம்மால் முடிந்த அளவு ஏதாவது நன்மை செய்து மறைய வேண்டும் !!.
ஊரை அடிச்சு உலையில் போட்டு பணம் 
சேர்க்கவே கூடாது !!
நாலு பேர் வாயில் நாம் தவறிக்கூட கெட்டபெயர் 
சம்பாதிக்கக் கூடாது !!
உழைத்து பணம் ஈட்ட வேண்டும் !! 
குறுக்குவழியில் பெரும் பணம் கூடிய 
விரைவில் நம்மை அழித்துவிடும் !!

என்றெல்லாம் அறிவுரைகள் சொல்லி சொல்லியே, எங்களை வளர்த்திருந்தார் எங்கள் அன்புத்தந்தை.அந்த எண்ணங்களை இப்போது நினைத்தாலும் கண்களில் நீர் கசிவதை தடுக்க இயலவில்லை என்றுசொல்லி,இந்தக்கட்டுரை தனை  நிறைவு செய்கிறேன் அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R. பாலு.