ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

" வயக்காட்டு பொம்மைகள் " அண்ணா திமுக சட்டமன்ற உறுப்பினர் திருவாய் மலர்ந்து அருளியது !!





     " வயக்காட்டு பொம்மைகள் !!"



அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

அனைவருக்கும் வணக்கம்.

எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

சென்ற வாரம், தமிழ்நாடு சட்டமன்ற 
நடவடிக்கைகளின் போது பேசிய ஆளும் 
அண்ணா திமுகவின் பரமக்குடி தொகுதி 
சட்டமன்ற உறுப்பினர் திரு. முத்தையா 
மானியக் கோரிக்கைமீது பேசிடும்போது 
விவாதத்திற்கு முற்றிலும் சம்பந்தம் 
எதுவுமில்லாமல், முதல்வரை திருப்தி 
அடையச் செய்திடும் ஒரே நோக்கத்தில் 
எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கும் 
89 திமுக சட்டமன்ற உறுப்பினர்களையும் 

வயக்காட்டு பொம்மைகள் 

என்று தன்னையும் மீறி, திமுகவை வசை 
பாடுவதாக எண்ணிக்கொண்டு உண்மையை 
அங்கே பேசியிருக்கிறார் என்றே நான் கருதிட 
வேண்டியுள்ளது அன்பர்களே.

வயலில் விளைந்துள்ள பயிர்களை அறுவடைக்கு தயார் நிலையில் இருக்கின்ற புஞ்சை நிலதானியங்களான கம்பு,கேழ்வரகு, 
சோளம்இதுபோன்ற பயிர்களை திருடித்திங்க வரும் பறவை இனங்களை விரட்டி பயிரை காத்து உதவிடும் ஒரு போர்வீரன் செயலை செய்வதுதான் வயக்காட்டு பொம்மைகளின் செயல்பாடு.

இதே போலத்தான் மக்கள் வரிப்பணம் என்னும் 
பயிரை திருடித்திங்க வரும் ஆளும் கட்சியை 
விரட்டி மக்களின் செல்வத்தை வளத்தை,
பாதுகாத்திடும் பனி செய்திடும் எண்பத்தி
ஒன்பது சட்டமன்ற வீரர்களும் வயக்காட்டு 
பொம்மைகளாகத்தான்காவல்காத்துவருவதால் 
இவர்களுக்கு மனதில் பயம் ஏற்பட்டுவிட்டது 
என்றே நான் கருதுகிறேன்.

வசை பாடி கட்சித்தலைமையை திருப்தி 
செய்வதாக எண்ணிக்கொண்டு ( அதன் உள்கருத்து புரியாத மட அம்மணி) கருத்து உரைத்த பரமக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரை பாராட்டி அவருக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன்.

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R. பாலு.