திங்கள், 28 மார்ச், 2016

குடியரசுத்தலைவர் ஆட்சி அமல் செய்திடவேண்டும் இங்கே...உடனடியாக !!





அமல்படுத்து குடியரசுத் தலைவர்                ஆட்சியை தமிழகத்தில் !!



எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!

காலை வணக்கம் அனைவருக்கும் !!

சட்டமன்றத் தேர்தல்களம் சூடு பிடிக்கத்
துவங்கிவிட்ட நிலையில் ஆளும் அதிகார 
வர்க்கம், எப்பாடுபட்டாவது இந்தத்தேர்தலில் 
எதனைத் தந்தாவது வெற்றிபெற்று ஆட்சி 
அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ளவேண்டும் 
என்ற திட்டத்தில் பல்வேறு வகையான சதிகளில்
ஈடுபடுத்திக்கொண்டு வருவதாக செய்திகள் 
கசிந்திட ஆரம்பித்துவிட்டன. அந்த செய்தியின் 
ஆரம்ப நிலைதான், நேற்றையதினம் ஆளும் 
தலைமைக்குச் சொந்தமான சிறுதாவூர் 
அரண்மனையில் வரிசையாக 25க்கும் மேற்பட்ட 
சரக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதாகவும் 
அவற்றில் எண்ணிலடங்காத பல்லாயிரம் கோடி 
பண மூட்டைகள் அடுக்கிவைக்கப்பட்டு, அவைகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அங்கே தேர்தலில் நலிவுற்ற மக்களின் வாக்குகளை விலைகொடுத்து வாங்கிட ஆளும் கட்சி திட்டமிட்டு அந்த வாகனங்கள் கிளம்ப தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

ஆட்சி அவர்கள் கையில். அதிகாரம் அவர்கள் பையில்.நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்திடலாம்.

தடுத்து நிறுத்த வேண்டிய கடமை,பொறுப்பு இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு நிரம்பவே உண்டு. இதனை செய்திட வேண்டும் என்றால், இங்கே ஆட்சியைக் கலைத்தே ஆகவேண்டும். குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தினால் மட்டுமே, ஆளும் கட்சியின் இது போன்ற தில்லாலங்கடி வேலைகளை தடுத்து நிறுத்தும் 
ஆற்றல்,வல்லமை தேர்தல் ஆணையத்திற்கு முழுசாக கிடைக்கப்பெறும். ஆனால் மத்தியில் ஆளுகின்ற மோடி அரசோ காங்கிரசை பழி வாங்கிடும் எண்ணத்தோடு அருணாச்சல 
மாநிலம் மற்றும் உத்திரகான்ட் மாநிலம் இவைகளில் ஜனநாயகப் படுகொலைகள் செய்து காங்கிரஸ்ஆட்சியைக்கலைத்து குற்றவாளிகளாக மக்கள் மன்றத்தின் முன் நின்று 
கொண்டு உள்ளது. மோடி + ஜெயா கூட்டுக்களவாணிகள்சதித்திட்டமும் மக்கள் நன்கு அறிந்ததே. எனவே இனியும் 
காலம் தாழ்ந்திடாமல் உடனடியாக தமிழ்நாட்டினில் அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு எண்.356 ஐ பயன்படுத்தி குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல் செய்திட வேண்டும்.

அவ்வாறு செய்திடத்தவறினால், தமிழக மக்களின் வேகமும் கோபமும் எங்கே துவங்கி எங்கே போய் முடியும் என்பதனை அந்த ஆண்டவனாலகூட அனுமானம் 
செய்திட முடியாது.

இது மத்திய அரசாங்கத்திற்கு தமிழக மக்கள் தருகின்ற இறுதி எச்சரிக்கையாகக்கூட எடுத்துக் கொள்ளலாம்.

நன்றி. வணக்கம்.

அன்புடன். மதுரை. TR.பாலு.


புதன், 23 மார்ச், 2016

" முதல்வர் " பதவி என்பது கடையில் வாங்கும் பொருளா ?





" முதல்வர் "பதவி என்பது கடையில்               வாங்கும் பொருளா ?



எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

உங்கள் அனைவருக்கும் காலை வணக்கம்.
நேற்றையதினம், அரசியல் புரோக்கர் (மாமா)
திராவிட இனத்துரோகி வைகோ விரித்த சதி 
வலையில் வீழ்ந்த நடிகர் விஜயகாந்தை இந்த 
நாட்டின் முதல்வர் வேட்பாளராக அந்த மக்கள் 
நலன் கெடுக்கும் அணி அறிவித்திருப்பதை 
பார்க்கின்றபோது எனது மனதில் தோன்றிய 
கேள்வியே இந்தக் கட்டுரையின் தலைப்பாக 
இங்கே தரப்பட்டுள்ளது அன்புத்தமிழ் நெஞ்சங்களே.

1967ல் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் காரணமாக மூதறிஞர் இராஜாஜியின் சீரிய முயற்சியால் இங்கே காங்கிரஸ் பேரியக்கம் படுதோல்வியைச் சந்தித்தது திராவிட இயக்கத்தின் முன்னோடி இயக்கமான தி.மு.க. ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது பேரறிஞர் அண்ணாவின் தலைமையில். ஆனால் 
காலத்தின் கட்டாயம் அண்ணா நம்மை விட்டு 
மறைந்ததால், முத்தமிழ் அறிஞர் கலைஞர் 
அவர்கள் தலைமையில் அவரை முதல்வராக 
ஏற்று ஆட்சி தொடர்ந்தது. அதன்பின்னர் 1971ம்
ஆண்டு இந்தியாவின் உண்மையான புரட்சித் 
-தலைவி மறைந்த இந்திராகாந்தி அம்மையார் 
ஓராண்டு காலத்திற்கு முன்பாக பாராளு மன்றத்தை கலைத்தபோது, மிகவும்சாதுரியமாக கலைஞர் தமிழ்நாடு சட்டமன்றத்தையும் கலைத்து இரண்டு தேர்தல்களையும்  (அதாவது     பாராளுமன்ற + சட்டமன்ற )  ஒரே நேரத்தில் சந்தித்து, வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றார் என்பது வரலாறு. 

அதன்பின் நடிகர் MGR கட்சியை உடைத்ததன் காரணமாக திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டுபட்டு, அடுத்த தேர்தலில் 1976 ம் ஆண்டு முதல் 1989 வரை 13 ஆண்டுகள் முதல்வராக பணியாற்றி மறைந்தார்.

அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கலைஞர் மீண்டும் முதல்வர் ஆனார். அதன் பிறகு ராஜீவ் மறைவினால் 1991ம் ஆண்டு தேர்தலில் அந்த ராஜீவ் மறைவு என்ற அனுதாப அலையை அறுவடை செய்ததன் விளைவு இங்கே நடிகை ஜெயலலிதா முதல்வர் ஆனார்.

அதன் பிறகு மாறி மாறி ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளும் கலைஞரும் நடிகையும் முதல்வர் பதவியில் இருந்து இன்று வரை நாடாண்ட கதை யாவரும் அறிந்ததே.

சரி. இப்போது விவாதம் என்ன என்றால், அறிஞர் 
அண்ணா, கலைஞர், MGR, வரையில் அந்த முதல்வர் பதவி என்பது இந்த மூவரும் அங்கே அதில் வீற்றிருந்த வரையில், பெருமை பெற்றுத்தான் இருந்தது.காரணம் 
இவர்கள் மூவரும் அந்த முதல்வர் பதவியை பெற எந்த அளவுக்கு கடுமையாக உழைத்து அதைப்பெற்றனர் என்பது இங்கே உள்ள என்போன்ற அரசியல் ஆர்வலர்கள் நன்கு அறிவர்.  ஆனால் எப்போது நடிகையும் MGR ன்
ஆசை நாயகியுமான ஜெயா அந்தப்பதவியில் அமர்ந்தாரோ அப்போதே அந்த இருக்கை தனது கண்ணியத்தையும் மாண்பினையும் இழந்து கற்பழிக்கப்பட்டு விட்டது என்றுகூட சொல்லும் அளவிற்கு கேவலப்பட்டுப்போனது நாடறிந்த விஷயம். 

இப்போது புதிதாக நேற்று அரசியல் புரோக்கர் துரோகி வைகோ மீண்டும் தமிழக முதல்வர் நாற்காலியை கற்பழிக்கும் முயற்சியில் 
ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார் நடிகர் விஜயகாந்தை அதில் அமரவைத்திடும் முயற்சியின் மூலமாக.தமிழகமே அதைப்பார்த்து கைகொட்டி சிரித்துக்கொண்டு இருக்கிறது நேயர்களே. 

நான் என்ன சொல்கிறேன் என்றால், ஒரு பதவியில் அமர யாரும் ஆசைப்படுவதில் 
தவறு என்பது இல்லை. ஆனால், அதேவேளை, அந்த நாற்காலியில் அமர்ந்திட என்ன நீ உழைத்திருக்கிறாய்? என்ன பாடுபட்டிருக்கிறாய் ? எத்தனை முறை போராட்டக் களத்தில் உன்னை ஈடுபடுத்தி இருக்கிறாய் ? எத்தனை முறை அதனால் தண்டிக்கப்பட்டு சிறைக்கு சென்று 
வரலாறு படைத்திருக்கிறாய் ? என்று அந்த முதல்வர் நாற்காலி கேட்கின்ற கேள்விகளுக்கு அதில் அமர ஆசைப்படுபவர்கள் பதில் சொல்லித்தானே ஆகவேண்டும் ?அதுதானே நியாயம். 

அந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால், நடிகை ஜெயாவும் சரி இப்போது ஆசைப்படும் நடிகர் விஜயகாந்த்தும் சரி இவர்கள் இருவருக்கும் கடுகு அளவுக்கு கூட அமர்ந்து கோலோச்ச  உரிமை என்பது கிடையவே கிடையாது என்பதுதான் அரசியல் ஆர்வலர்கள் 
போடுகின்ற கணக்கு.

அதனால்தான் நான் கேட்கும் கேள்வி இங்கே கட்டுரைக்குத்தலைப்பாக தரப்பட்டு உள்ளது.

" முதல்வர் " பதவி என்பது கடையில் வாங்கும் பொருளா ?

வாக்காளப்பெருமக்களே !! சிந்திப்பீர். செயல்படுவீர் !!.

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். திருமலை.இரா. பாலு.

ஞாயிறு, 13 மார்ச், 2016

பழைய ஓட்டை,உடைசல்,ஈயம், பித்தளைக்கு பேரீச்சம்பழம் வாங்கலையோ !! ( போயஸ் கார்டனின் இன்றைய நிலைமை )





எல்லாப்புகழும் இறைவனுக்கே !!


போயஸ் கார்டனின் இன்றைய                                       நிலைமை !!

அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

வாசகர்கள் அனைவருக்கும் என் இனிய காலை 
வணக்கங்கள்.

பழைய ஓட்டை,உடைசல்,ஈயம்,பித்தளைக்கு,
பேரீச்சம்பழம் வாங்கலையோ !!

என்னடா இது நம்ம கட்டுரை ஆசிரியருக்கு என்ன மறை கழண்டு போச்சா ? என்று நீங்கள் எண்ணினால் அதில் தவறு இல்லை. ஆனால் உண்மை அதுவல்ல.

நான் ஏன்,எதற்காக அந்த வாசகத்தைகுறிப்பிட்டு 
இருக்கிறேன் என்று சொன்னால், நேற்றைய தினம் போயஸ் கார்டனில், அம்மையார் அவர்கள் சந்தித்த காலணா, அரையணா, கட்சித்தலைவர்களையும் அங்கே அவர்கள் அளித்த பேட்டியையும் பார்த்தபோது எனக்குள் எழுந்த உணர்வுதான் இங்கே கட்டுரைக்கு 
தலைப்பாக நான் இங்கே தந்துள்ளேன்.

சென்ற 2011 ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக,இடது,வலது கம்யூனிஸ்ட் கட்சிகள்,மனித நேய மக்கள் கட்சி என்று ஓரளவுவாக்குகளைதன்னகத்தே கொண்ட கட்சிகளுடன் கூட்டு வைத்துக்கொண்டு போட்டியிட்டு வெற்றி வாகை சூடிய ஒரு கட்சி, இன்றைக்கு அந்தோ பரிதாபம் !! தொகுதிக்கு நூறு வாக்குகள்கூட இல்லாத சின்னஞ்சிறிய கட்சிகளோடு, அதுவும் அவர்களுக்கு 
வலியச்சென்று முந்தானை விரித்து தொலைபேசியில் அழைத்து இப்படி தேர்தல் கூட்டு செய்துகொள்ள வேண்டிய 
நிலைமைக்குத் தள்ளப்பட்டு விட்டாரே அம்மையார் என்பதை எண்ணுகின்றபோது நமக்கு கிடைத்த விடை இது ஆணவத்திற்கு கிடைத்த பரிசு.

இதுதான் விதியின் விளையாட்டு. காலத்தின் கட்டாயம்.அம்மையார் அன்று செய்த அநியாயம்,அக்கிரமத்தின் அறுவடையை இன்று காண்கிறார். தேர்தல் முடியும் வரை, எல்லாக்கட்சிகள் மீதும் உள்ளம் நிறைந்த பாசம் 
இருப்பதுபோல வெளிக்காட்டிக்கொண்டு, தேர்தல் முடிந்த பிறகு தூக்கி எறிந்த அவரது நல்ல குணத்திற்கு ஆண்டவன் தந்த பரிசுதான் இப்போதைய அவரது நிலைமை.

காரியம் முடிகின்றவரை அண்ணே !! என்று சொல்வதும் காரியம் முடிந்த பின்பு " போடா வெண்ணை !! என்று சொல்வதுமே அவரது வாடிக்கை என்பது அனைவரும் அறிந்த உண்மை ஆகும்.

இப்போது அரசியல் களத்தில் அனாதையாக நிற்கிறார் அம்மையார். பணத்தைத் தவிர அவரிடம் வேறு எதுவும் இல்லை. அந்தப் பணத்திற்கு ஆசைப்படுபவர்களே இப்போது 
அவரை சுற்றிநின்றுகொண்டு லாலி பாடுகிறார்கள்.

அம்மையார் இந்தத்தேர்தலில் தோல்வி அடைவது நிச்சயம். இது உண்மை சத்தியம்.

அம்மையாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

நன்றி !!  வணக்கம் !!

அன்புடன். திருமலை.இரா.பாலு.