வியாழன், 22 அக்டோபர், 2015

உடம்பு சரியில்லை என்றால் அலுவலகத்திற்கு லீவு போடுவதுதான் உலக வழக்கம். ஆனால் இங்கே எல்லாமே தலைகீழ்தான் !!





ஓய்வு எடுங்க மாமி !!நீங்க உழைச்சு 

களைச்சுட்டீங்க சாமி !!





பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!


அஸ்ஸலாமு அலேக்கும் !!



அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!


அனைவருக்கும் வணக்கம். 


மகாகவி பாரதி பாடினான்.


நெஞ்சு பொறுக்குதில்லையே. இந்த

நிலைகெட்ட மாந்தரை நினைந்து 

விட்டால் !!

என்று. உண்மை. அன்றே பாடிவிட்டான் பாரதி.

தமிழகம் என்றாவது ஒருநாள் ஒரு தரம் கெட்ட

நபரால்ஆளப்படும்.அப்போதுமக்கள்எல்லோரும்

இந்தப் பாடலை மட்டுமே பாடவேண்டும் என்று 

இயற்றினாரோ எனக்குத் தெரியாது. இன்று 

அதுதான் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.



அவன் ஒரு இஸ்லாமியன். பெயர் முஹம்மது.

தொழுகை நடத்த அவன் பள்ளிவாசலுக்குத்தான் 

சென்றிட வேண்டும். ஆனால் என்ன செய்வது ?

அவனுக்குத்தான்இரண்டுகால்களும்இல்லையே. 

ஆகவே அவன் இருக்கும் இடத்திலேயே 

தொழுகையை நடத்தியாக வேண்டும். 

வேறு வழி இல்லை. 

இந்த நிலையைத்தான் ஆங்கிலத்தில்

என் அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய என் தந்தை 

சொல்லுவார்கள் :-


If Mohammed do not go to Mount, let mount 

come to Mohammed !!
என்று. 

அதுபோலத்தான்  இன்றைய நமது தாழ்ந்த 

தமிழகத்தை ஆளுகின்ற தலைமைப்பொறுப்பில் 

உள்ள மாண்புமிகு முதல்வர் அவர்களும் செய்து 

கொண்டிருக்கிறார்கள் என்பதே தமிழக மக்கள் 

வைக்கின்ற முதல்  குற்றச் சாட்டு.

உடல்நிலையில் பல்வேறு கோளாறுகளால் 

அவர் பாதிக்கப்பட்டு உள்ளதால், அவரால் 

மூன்று நிமிடத்திற்குமேலாக நிற்கவும் 

முடிவதில்லை. அதுபோலவே அவரால் ஐந்து 

 நிமிடத்திற்கு மேலாக அமர்ந்திருக்கவும் 

முடிவதில்லை. இது அவரைப்பற்றி ஊர் 

முழுவதும் பேசப்படுகின்ற பேச்சு.

இதற்கு என்ன காரணம் என்ன ? என்று நான் 

சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய 

நிலையில், நீங்களும் இல்லை. நானும் இல்லை. 

இந்த கோளாறுகள் அனைத்திற்கும் அவர் 

ஏறத்தாள 25ஆண்டுகட்கும்மேலாக திரைப்பட 

கலைத்துறையில் அன்னார் ஆற்றிய 


                   "  மாபெரும்  பணி "


மட்டிலுமே என்று அவரோடு   "தொழில் "

செய்திருந்த பல்வேறுதுறை கலைஞர்கள், 

நடிகர்கள், அந்த காலம் அளித்திருந்த 

பேட்டிகளில் பலவற்றினை நாட்டு மக்கள்படித்து 

அன்று என்னிடம் கூறினார்கள்அதனை நான் 

கேட்டவன்  என்ற வகையில் கூறுகிறேன். 

சரி.. இப்ப நாம விஷயத்திற்கு வருவோம். 

இப்ப என்னன்னு நீங்க கேட்டுக்கிடீங்கன்னா 

நிக்கவும் முடியல்லே, உக்காரவும் முடியல்லே, 

நடக்கவும் முடியல்லே அப்டீன்னு சொன்னா 

நீங்க இன்னா செய்யணும் ? 

உடனே பதவியிலிருந்து ராஜினாமா செஞ்சுட்டு 

யாராவது உங்களோட மந்திரிகள்,

( தண்ணீர் செல்வம் மாதிரி ) யாரையாச்சும் 

முதல்வர் பதவியில் அமர்த்துங்க மேடம். நீங்க 

வழக்கம் போல  உங்களோட சிறுதாவூர், 

கொடநாடு இந்த மாதிரிஉங்க ஓய்விடங்களுக்கு 

சென்று அங்கே கேரளா நாட்டிலிருந்து 

வந்திருக்கும் தன்வந்திரிகளை, மருத்துவகுல 

திலகங்களை வைச்சு உங்க உடம்ப சேதாரம் 

வராம பேட்ச் ஒர்க் பண்ண சொல்லிட்டு 

உங்களோட ஆரூர்த் தோழியுடன் இருக்குற 

இருப்புகளை எண்ணிகிட்டு நல்லாவே 

ஓய்வு எடுத்துக்குங்க.  

அத்த விட்டுட்டு அலுவலகத்தையே 

உங்களோட கொடநாடு பங்களாக்கு கொண்டு 

போறேன்,அங்கே வச்சு ஆட்சி நடத்துறேன் கீட்சி 

நடத்துறேன்னு நீங்க சொல்றதேல்லாம் நம்ம 

தல கலைஞர் ஒரு படத்துல வசனம் எழுதி 

இருப்பாரு:-


சும்மா புண்ணுக்கு புனுகுதடவுற 


வேலையாகத்தான் இருக்கும். 


உங்களோட அந்த புகழுக்கும், கௌரவத்துக்கும் 

பெருமை சேர்க்குற நல்ல செயலாக எந்நாளும் 

இருக்கவே இருக்காது மாண்புமிகுதாழ்ந்த 

தமிழக முதல்வர் புர்சீ தலைவி அம்மையார் 

அவர்களே.


என்னோட இந்த அன்பான வேண்டுகளைஏற்றுத் 

தாங்கள் உடனடியாக செயல் பட்டீங்கன்னு 

சொன்னா அத்து உங்களுக்கும் நல்லது. புர்சீ 

தலைவர் கிட்டே இருந்து திருட்டுத் தனமா நீங்க 

கைப்பத்துன அந்த கட்சிக்கும் நல்லது.           

அம்புட்டுத்தான். 

சொல்லுறத சொல்லிப்புட்டேன் !!. 

செய்யுறத செஞ்சுக்குங்க !! 

நல்லதுன்னா கேட்டுக்குங்க !! 

கெட்டதுன்னா விட்டுடுங்க !!



நன்றி !! வணக்கம் !!


அன்பன். திருமலை. இரா. பாலு.