செவ்வாய், 29 டிசம்பர், 2015

தமிழக அரசே !!ஏன் ? இப்ப போடவேண்டியதுதானே அவதூறு வழக்கு ?








பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!

அஸ்ஸலாமு அலேக்கும் !!

அல்லாஹூ-அக்பர்-அல்லாஹ் !!



அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!


அனைவருக்கும் இனியகாலை வணக்கங்கள்.
இன்றையதினம்,தமிழகத்தில்நடைபெற்றுக்கொண்டிருக்கின்றஒருகேடுகெட்டமற்றும் கேவலமான, அராஜக,அநியாய,ஆணவம்மட்டுமே நிறைந்த ஒரு அரசாட்சியில் இங்கே இம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வன வாசம் என்பது போல, ஆட்சியாளர்களை எந்த கட்சியினரும் விமர்சனம் செய்தாலோ அல்லது கேள்விகள் கேட்டாலோ, குறைகளை சுட்டிக்காட்டினாலோ, உடனே அவர்மீது, அவர் எந்தக்கட்சியைச் சேர்ந்தவரானாலும் சரி, உடனே அவதூறு வழக்கு,மானநஷ்டவழக்குஎன்று போடுவதுதான் வழக்கமாக உள்ள நிலையில்,

தமிழ் இனத்தலைவர் கலைஞர் அவர்களோ,
அல்லது தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களோ 
அல்லது வேறு யாரும் இங்கே பேசுவது என்பது 
செம்பரம்பாக்கம் ஏரியினை திறந்திட முதல்வர் ஜெயலலிதா தாமதமதாமாக ஆணை பிறப்பித்ததினால்மட்டுமே சென்னை வெள்ளக்காடாக ஆகி இத்தனை சேதங்களும், மக்களுக்கு பாதிப்புகளும் ஏற்பட்டு உள்ளதாக, ஒவ்வொரு மூலையிலும் அவர்கள் பேசிவரும் நிலையில், இதன்மீது இந்தப்பேச்சு அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தித்தருகிறது அதனால் அம்மையாரின் மானத்திற்கு (?)நஷ்டம் ஏற்பட்டு விட்டது என்று கருதி இதுவரை ஏன் ? எதற்காக ? அவதூறு வழக்கு மற்றும் மான நஷ்ட வழக்கு போட வில்லை ? 

சிந்திக்க வேண்டும்.

ஒருவேளை அப்படி வழக்கு போட்டால், உண்மை நிலையினை நீதி மன்றம் அறிந்து கொள்ள வழி ஏற்பட்டு விடுமோ அப்போது எங்க அப்பன் குதிருக்குள் இல்லை என்ற உண்மை தெரிந்து விடுமோ என்று அஞ்சியே இந்த 
கையாலாகாத, நிர்வாகத் திறமை எள்ளின் அளவுகூடஇல்லாத ஜெயா அரசாங்கம் அவதூறு வழக்கு போடமறுத்து வருகிறது என்பதே உண்மையிலும் உண்மை.


எல்லாவற்றையும் மேலே உள்ள ஆண்டவன் நன்கு பார்த்துக்கொண்டு இருக்கிறான் என்பதே உண்மை.அவன் நேரம் வரும்போது கயவர்களின் குரல்வளை நெரித்து எமலோகம்/பரலோகம் செல்ல வைத்திடுவான் என்பதுதான் காலம் உணர்த்திட உள்ள பாடம் ஆகும்.


நன்றி !!  வணக்கம் !!

அன்புடன். திருமலை.இரா.பாலு.