புதன், 29 மார்ச், 2017

சென்னை R.K.நகர் இடைத்தேர்தல் சம்பந்தமாக வாக்காளர்கள் விழிப்புணர்வு கட்டுரை இது !!


சென்னை RK நகர் 


வாக்காளப்பெருமக்களே !!

உங்கள் அனைவருக்கும் எனது இனிய 

காலை வணக்கங்கள் உரித்தாகுக.
எல்லாப்புகழும் இறைவனுக்கே !!
தமிழகத்தில் இருக்கின்ற சட்டமன்றத் தொகுதிகள் என்னவோ 234 தான். ஆனால்அவர்களுள் எந்தத் தொகுதிக்கும் கிடைக்காத மாபெரும் அதிருஷ்டமும் ஆனந்தமும் உங்களது தொகுதியான RK நகர் சட்டமன்றத் தொகுதிக்கு  மட்டுமே எல்லாம் வல்ல இறைவன் அளித்திருக்கிறான். எப்படி என்று கேட்டால் நடப்பு சட்டமன்ற நிலவரத்தின்படி ஒரே ஒரு ஆண்டிற்குள் இரண்டுமுறை தேர்தல்கள். அதில் ஒன்று முறைப்படி. ஆனால், மற்றொன்றோ இடைத் தேர்தல். எப்படி உங்கள் அதிருஷ்டம் வாக்காளப் பெருமக்களே. இதே நிலைதான் சென்ற முறையும். மறைந்த ஜெ 2011 சட்டமன்றத்தேர்தலில் ஸ்ரீ ரங்கம் தொகுதியில் நின்றார். "தரவேண்டியதைத் தந்து" பின்பு பெற வேண்டிய வெற்றியைப் பெற்றார். இவருடைய வழக்கமான தேர்தல் அணுகுமுறையே இதுதான். 2015ல் சொத்துக்குவிப்பு வழக்கில் கீழமை நீதிமன்ற நீதியரசர் திருமிகு மைக்கேல் D.குன்ஹா அவர்களால் முதல் குற்றவாளி ( Accused- 1) என்று அறிவிக்கப்பட்டு நான்கு ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் 1௦௦ கோடி ரூபாய் (கோடி என்பது நம்மைப் போன்ற சாதாரண, நடுத்தர மற்றும் உயர் வகுப்பினைரில் வேட்டியிலும் தெருக்கோடியிலும் மட்டுமே) அபராதம் விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ராஹார சிறையில் ஜெ,தோழி சசிகலா,இவரது அண்ணன் மனைவி இளவரசி, இவர்களோடு எருமை மாட்டு வயசில் தத்து எடுத்துக் கல்யாணம் கின்னஸ் ரிக்கார்டில் இடம்பெற்றவர் திரு.சுதாகரன் ஆக இந்த நான்கு பேரும் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு, பெங்களூரு உயர்நீதிமன்ற நீதி(?) அரசர் குமாரசாமியால் விடுதலை செய்யப்பட்டதால் மீண்டும் உங்களது RK நகர் தொகுதியில் நின்றார் ஜெ. வென்றார் ஜெ.( தொடரும்.......................)

சனி, 11 மார்ச், 2017

அகில இந்திய BJP கட்சிக்கு ஒரு சிறு அறிவுரை !! அந்தப் பருப்பு தமிழ்நாட்டு தண்ணியிலே வேகவே வேகாது !!




அந்தப்பருப்பு இந்த தமிழ்நாட்டு தண்ணியிலே
வேகவே வேகாது !! எத்தனை யுகங்கள் ஆனாலும் !!



அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

உங்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள்.

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத்
தேர்தல் இறுதி நிலவரங்கள் ஒவ்வொன்றாக,
வெளிவந்துகொண்டிருக்கும் இந்த நல்ல வேளையில்உங்களை நான் இந்தக் கட்டுரையின் மூலமாகசந்திப்பதில் மிகவும் மனமகிழ்ச்சி அடைகின்றேன்.

முதலில் இந்தத் தேர்தல் முடிவுகள், ஒன்றே ஒன்றைமிகமிகத் தெளிவாக நமக்கு எடுத்துக்காட்டுவதாகவேஎன்போன்ற கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகஇந்தியத் திருநாட்டின் அரசியல் நிகழ்வுகள் அனைத்தையும்ஆராய்ந்து கொண்டிருக்கும் அரசியல் ஆர்வலர்கள்கருத இடம் இருக்கிறது. அது என்னவென்றால், இதுவரை
ஆண்டுகொண்டிருந்த அத்தனை கட்சிகளையும்
மக்கள் புறக்கணித்துவிட்டு அங்கே ஓரளவு எதிர்க்கட்சிகளாகஇருக்கும் கட்சிகளில், வலிமை மிக்க கட்சியை மட்டும்
வெற்றிபெற வைத்து அங்கே ஆளும்கட்சியாக, ஆள்வதற்குதகுதி உள்ள கட்சிகளாக, அந்தந்த மாநில மக்கள் அங்கேஅங்கீகாரம் தந்துள்ளார்கள் என்பதுதான் உண்மை. அதாவது
BJP இதுவரை ஆட்சி புரிந்த மாநிலங்களான பஞ்சாப் மற்றும்GOA, இவை இரண்டிலும் அந்தக் கட்சி மக்களால் தோற்கடிக்கப்பட்டு உள்ளது. அங்கே எதிர்கட்சியாக இருந்த இந்திய தேசிய 
காங்கிரஸ் கட்சி ஆளும்கட்சியாக அந்த மாநில மக்களால்அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், அதே நேரம் உத்திரப்பிரதேசம் மற்றும் உத்திராகன்ட்ஆகிய இரு மாநிலங்களில், ஆளும் கட்சியாக இருந்த முறையே முலாயம்சிங் கட்சியும் மற்றும்காங்கிரஸ் கட்சியும்மக்களின் முழு நம்பிக்கையை இழந்து விட்டதனால், அங்கே எதிர்கட்சியாக இருந்த BJP கட்சிக்கு, அந்தந்த மாநில மக்கள் மீண்டும் நல்லதொரு 
வாய்ப்பினை நல்கியுள்ளார்கள் ஒருவேளை இவர்களாவது அந்த மாநில மக்களின் கஷ்டத்தை, வறுமையை போக்கி 
நல்லதொரு வாழ்க்கையை தருவார்கள், என்ற நம்பிக்கையை அம்மாநில மக்கள் மனதில் வைத்ததனால். மற்றபடி, தமிழக பி.ஜே.பி. கட்சியின் மாநிலத் தலைமை, திருமதி. தமிழிசை சவுந்திரராஜன் அவர்கள் இப்போது தொலைக்காட்சியில்,வாய்கிழிய பேசி வருகிறாரே :-

நாட்டு மக்கள் நன்றாக உணர்ந்து விட்டார்கள் !!
இனிமேல் மக்கள் பாரதீய ஜனதாவை மட்டுமே இந்தியா முழுவதிலும் உள்ள மாநிலங்களில் ஆளும் கட்சியாக இருக்க முடிவெடுத்து விட்டார்கள் !!

இந்திய ரூபாய் மதிப்பு குறைப்பு மற்றும் 5௦௦ ,1,௦௦௦ ருபாய் மதிப்பை செல்லாததாக ஆக்கியதை மக்கள் வரவேற்கிறார்கள் !!

இந்த வெற்றி பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் கடின உழைப்புக்கு, இந்திய மக்களின் மீது திரு.மோடி அவர்கள் கொண்டுள்ள கரிசனத்துக்கு, நம்பிக்கைக்கு,கிடைத்த வெற்றி !!

அப்படி, இப்படி என்று தமிழிசை பேசிவருவதை இங்கே நமது தொலைக்காட்சியின் நேரலை நிகழ்சிகளில் பார்க்கின்றபோது, எனக்கு தலையில் அடித்துக்கொள்ள எனக்கு இரண்டு கைகள் பத்தவே பத்தவில்லை என்பதை 
இங்கே நான் மிகவும் பணிவுடன் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டு உள்ளேன்.

உடனே தமிழிசை அவர்கள், தமிழ்நாட்டில் இனிவரும் தேர்தல்களில், எங்களது உத்திரப்பிரதேசத்தில் நாங்கள் பெற்ற வெற்றி போலவே தமிழகத்திலும் பி.ஜே.பி.
வென்று, தமிழ்நாட்டின் அடுத்த ஆளும் கட்சியாக வந்தே தீரும் என்றெல்லாம் உளறித்திரிவதைதயவுசெய்துநிறுத்திக்கொள்ளுங்கள் தமிழிசை அவர்களே. நீங்கள் 
உண்மை நிலைமை, தெரியாமல் உளறுகிறீர்களா ?

அல்லது இப்படி எல்லாம் கப்சா வுட்டு, தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்களை ஏமாற்றிவிடலாம் என்று மனக்கணக்கு போடுகிறீர்களா ?

இந்த இரண்டில், நீங்கள் எதை நினைத்து செயல்பட்டாலும் உங்களுக்கு ஏற்கனவே கிடைத்த தோல்வியைவிட இன்னும் படுமோசமான தோல்வியை மட்டுமே தமிழக 
மக்கள் பி,ஜே.பி. கட்சிக்குத்தருவார்கள் அதில் எனக்கு எள்ளின் முனையளவுகூட ஐயம் இல்லவே இல்லை.

ஏன் நான் இதனைச் சொல்கிறேன் என்றால், தமிழக மக்களை அந்த அளவுக்கு நீங்கள் பல்வேறு விஷயங்களில் அவர்களின் மனத்தைக் காயப்படுத்தி, ரணப்படுத்தி,உதிரம் வடியும் நிலைக்குத் தள்ளி இருக்கிறீர்கள். அதை 
மறந்து விடாதீர்கள் திருமதி. தமிழிசை அவர்களே.

தமிழக மக்கள், உங்களையும் உங்கள் கட்சியையும் ஏன் புறக்கணிக்கக் காத்திருக்கிறார்கள், என்ற பல 
காரணங்கள், உங்களுக்கே தெரியும் என்று நினைக்கிறேன்.

அதனாலதான், அந்தக்கன்றாவிகளை, நான், இங்கே மீண்டும் எழுதி, எனது பொன்னான நேரத்தை, வீணடிக்க விரும்பவில்லை. தமிழிசை அவர்களே !! நீங்கள் குன்னக்குடிக்கு, அன்னக்காவடி எடுத்தாலும் சரி,
இல்ல, பழனி முருகனுக்கு, பாத யாத்திரை சென்றாலும் சரி, இல்ல திருப்பதி ஏழுமலையானுக்கு தங்கப் பல்லாக்கு தூக்குவதாக, வேண்டிக்கொண்டாலும் 
சரி, உங்களது பி.ஜே.பி. கட்சி, தமிழகத்தில், ஆளும் கட்சியாக வரும் என்று கனவில்கூட நினைக்காதீர்கள்.

ஆகவேதான் இந்தக் கட்டுரைக்கு நான் தந்துள்ள தலைப்பு :-

அந்தப் பருப்பு !! இந்தத் தமிழ்நாட்டுத் தண்ணியிலே என்னாளும் வேகவே வேகாது !!

என்று சொல்லி உங்களை எச்சரிக்கை செய்வதுதான் எனது இந்தக் கட்டுரையின் மூல நோக்கம்.

நன்றி !!வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R. பாலு.

திருமதி தமிழிசை அவர்களே !!

ஆங்கிலப் பழமொழிகள் இந்த இரண்டினை   மட்டும் நீங்கள் எந்நாளும் மறந்து விடாதீர்கள் !!

1)  IF DESIRES ARE HORSES,
BEGGARS WOULD DRIVE !!

2) THEY ARE AT THE FOOLS PARADISE !!

தமிழ் அர்த்தம் :-

1)  எண்ணங்களே குதிரைகள் என்றால், கேவலம் 
ஒரு பிச்சைக்காரன்கூட அதில் அந்தக் குதிரை மீது ஏறி  சவாரி செய்திடலாம்.

2) இப்படி பேசுபவர்கள், முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்ந்து வருகிறார்கள் !!