செவ்வாய், 26 ஜூலை, 2016

இன்று மறைந்த முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர்அப்துல் கலாம் நினைவு நாள்.






                   " அப்துல் கலாம் "



இன்று ( 27-07-2016) நம் நாட்டின் முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல் கலாம்         மறைந்த முதல் ஆண்டு நினைவு ஆள்.                   

சர்வதேச அளவில் இந்தியத் திருநாட்டை (முன்னாள் பிரதமர் திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் பதவி  வகித்தபோது) பொக்ரானில் அப்துல் கலாம் நிகழ்த்திய அணு ஆயுத சோதனையால், அமெரிக்கா முதற்கொண்டு அத்தனை வல்லரசுகளின் புருவங்களை உயர்த்தி நம்மை திரும்பி பார்க்க வைத்த பெருமை இவரையே சாரும்.                     

நீதி நேர்மை நியாயம் உண்மை இவைகளை மட்டுமே தனது அணிகலன்களாக அணிந்து வாழ்ந்து காட்டிய பெருமை இவருக்கு மட்டுமே உண்டு. 

இவர் மறைந்தபோதுஇந்தியத்திருநாடேகண்ணீர் சிந்தியது. அனால் நமது தமிழ்நாட்டில் ஒரே ஒரு உருவம் மட்டும் இதனைப்பற்றி  கிஞ்சித்தும் கவலைப்படாமல் அவரின்மறைந்த பூத உடலுக்கு,  தோட்டத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டு உறங்கியதும், மரியாதை செலுத்த வராமல் அவமதித்ததும், கடந்த கால வரலாறு ஆகும்.

அவரை நினைத்து இன்று நாம் அனைவரும் ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்த வேணுமாய் நேயர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். 

நன்றி !! வணக்கம் !!                                                             

அன்புடன். மதுரை. T.R. பாலு.

வியாழன், 7 ஜூலை, 2016

திராவிட முன்னேற்றக்கழகத்தின் செயல்பாடுகள் இனிமேல் எப்படி இருக்க வேண்டும் ?





தி.மு.க.வின் செயல்பாடுகள் இனிமேல் எப்படி இருக்கவேண்டும் ?




அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!


எல்லாப்புகழும் இறைவனுக்கே !!


உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த
காலை வணக்கங்களுடன் நான் எனது
கட்டுரையை  எழுதிடத் தொடங்குகிறேன்.


ஒருவழியாக, தேர்தல் முடிந்து, திமுக
வரலாறு காணாத மிகப்பெரிய நல்ல ஒரு
எதிர்க்கட்சி என்ற நிலைப்பாட்டுடன் தனது
மக்களாட்சித் தத்துவக் கடமைகளை மிகச்
சரியாக, கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடர்
முழுவதும் சிறப்பாக, செய்து முடித்துள்ளது
உண்மையிலேயே பாராட்டி மகிழ்ந்திட
வேண்டிய ஒரு விஷயம்தான்.

சரி. இனிமேல் திமுக எப்படி செயல்பட்டால்
அது மீண்டும் அரியணையில் ஏறி அமர்ந்து
ஆளும்கட்சியாக செயல்பட, உறுதுணையாக
இருக்கும் என்பதைப்பற்றிய ஒரு அரசியல்
அலசல் கட்டுரைதான் நான் எழுதப்போவது
எனது அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

முதலில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி
தேர்தல்களில், எப்பாடுபட்டாவது நம்மை
விட்டுப் பிரிந்து போய் தனியாக மக்கள்
நலன் கெடுக்கும் கூட்டணியில் சேர்ந்த
ஒரு சில கட்சிகளை, அரவணைத்து நாம்
நமது அணியில் இடம்பெறச் செய்திடுவது
மிகவும் அவசியமான ஒன்று. அந்தக்
கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், மற்றும்
கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்றவையே.

இரண்டாவதாக, நம்மிடம் உள்ள 89 சட்ட
மன்ற உறுப்பினர்களை மிகவும் கவனமாக
வேண்டியது நமது தலையாய கடமை.

நான் ஏன் இதைக் குறிப்பாகச் சொல்கிறேன் 
என்றால், எதிர் அணி ( ஆளும்கட்சி) மிகவும் 
பலம்பொருந்திய பணக்காரக் கட்சி. அதற்கு 
ஆசைப்பட்டு நம்மில் உள்ள சட்டமன்ற 
உறுப்பினர்களுள் ( பொருளாதார ரீதியில் 
நலிந்த நிலையில் உள்ளவர்கள்) எவரையும் 
அங்கே விலைபோக விடாமல் பாதுகாக்க 
வேண்டியது மிகவும் முக்கிய கடமைகளுள் 
தலையாய ஒன்று. ஏன் என்றால், கடந்தமுறை 
தேமுதிக உறுப்பினர்களை அணி பிளந்து 
அம்மையார் செய்த திருவிளையாடல்கள் 
இந்தமுறையும் தொடர்ந்து விடலாகாது 
செய்திட வேண்டும். இது மிகவும் முக்கியம் 
நிறைந்தது.

தளபதி திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது 
தந்தை தலைவர் கலைஞர் அவர்கள் தரும் 
ஆலோசனைகளை புறந்தள்ளாமல் அவரின் 
கட்டளைப்படி செயல் படவேண்டியது மிகவும் 
அவசியமான ஒன்று என்றே நான் கருதுகிறேன்.

                                                      (இன்னும் வரும் )


அன்புடன். மதுரை. TR. பாலு.