வெள்ளி, 27 ஜனவரி, 2017

நடந்தது இயற்கை மரணமா ? அல்லது சாகடிக்கப்பட்டாரா ? விவரிக்கின்றது இந்தக் கட்டுரை.





நடந்தது இயற்கை மரணமா ? அல்லது சாகடிக்கப்பட்டாரா ?



அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

உங்கள் அனைவருக்கும் இனிய காலை 
வணக்கங்கள்.

எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

அது 1952ம் ஆண்டு. முத்தமிழ் அறிஞர் தலைவர் 
கலைஞர் அவர்களது எழுத்தோவியத்தில் 
வெளிவந்த திரைக்காவியம்தான் " மனோகரா "
என்ற சரித்திரப்புகழ் பெற்ற திரைப்படம். அதில் 
ஒரு காட்சியில் வரும் வசனத்தை மட்டும் 
இங்கே நான் கோடிட்டு காண்பிக்கவிழைகிறேன்.

" சிந்தனை சித்திரம் அல்ல நீங்கள் காண்பது !!"
சிருங்காரி ஒருத்தியால் சீரழிந்த  சாம்ராஜ்ய 
சரித்திரம் "

இந்த ஒரு வசனத்தை மட்டும் நான்ஏன்,எதற்காக 
இங்கே குறிப்பிடுகிறேன் என்பதை அடுத்து வரும் கட்டுரையின் பதிவோடு நீங்கள் ஒப்பிட்டு படித்து பார்த்திடத்தான். 

ஏனென்றால், அந்தக்கட்டுரை முழுவதும் பெயர்கள் குறிப்பிடாமல் சம்பவம் மட்டுமே குறித்து எழுதப்படப் போகின்றது.

நீங்கள், நீங்களாகவே யோசித்து, யார் இந்தக் 
கட்டுரைக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வு 
இதன் பின்னணி யார்,யார் என்பதனை முடிவு 
செய்துகொள்ளுங்கள். ஏனென்றால் எதிர்கால 
சட்ட சிக்கல்களை தவிர்த்திடும் முகமாகவே 
நான் இந்தமுடிவெடுத்துள்ளேன், என்பதை இங்கே உள்ள உங்கள்அனைவருக்கும் 
தெரிவித்துக்கொள்கிறேன் அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

இப்போது கட்டுரை ஆரம்பம் :-

அது ஒரு ஜனத்தொகையில் உலகிலேயே இரண்டாம் இடம் வகிக்கும் நாடு. அங்கே ஒரு இடத்தில் அதிசியம் நடக்கிறது. என்ன அதிசியம் ? 

வேற ஒன்னும் இல்லைங்கோ.
பழுத்த அரசியல் வாதிகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டுபார் புகழ்ந்த நடிகனையும் அதன் பின்னால் அவரது ஆசை நாயகியையும் ஆட்சிக்கட்டிலில் அமரவைத்து அழகு பார்த்த கொடுமையை, அதை நிகழ்த்திக்காட்டியுள்ள வாழ்க்கையில்அனாதையான பிரஜைகள் அந்த இடத்தில் வசிக்கிறார்கள் என்ற ஒன்றுதான் அங்கே அதிசியம்.

அந்த நடிகன் மறைவிற்குப் பிறகு, அந்த நடிகை ஆட்சிக்கட்டிலில் அமர, அதன் பின்னர் அந்த நடிகையும், அவரது தோழியும் சேர்ந்துகொண்டு 
அந்த மாநிலத்தின் வளத்தை, நலத்தை, செல்வத்தை கொள்ளையோ கொள்ளை என்று அடித்து கணக்கில் அடங்காத அளவுக்கு அசையும்சொத்துக்களும் அசையா 
சொத்துக்களும்(வைர,வைடூர்ய,தங்கச்சுரங்கத்திற்குஇணையான புதையல்கள்) என சேர்த்து வைத்தனர்.

அந்த நடிகைக்கும் வயசாகி ரொம்பவே கிழடு தட்டி உலகில் உள்ள அத்தனை வியாதிகளுக்கும் அந்த நடிகை சொந்தக்காரி ஆகியதால், உடம்பும் கனத்து இப்பவோ அப்புறமோ என்று இருக்கின்ற நிலை.

அப்போது என்ன ஆச்சு என்று கேட்டால், எத்தனை நாளைக்குத்தான் தோழியானவள் இந்த நடிகைக்கு ஆயாவாக வேலை பார்த்துக்கொண்டே இருப்பாள்.அவளுக்கும் ஆசை வரதா என்ன ? 

வந்துவிட்டது ஆசை தோழிக்கு !! ( நாடாள)
முந்திவிட்டது மரணம் நடிகைக்கு !! ( காடாள )

என்னங்க பாலு சார், ஓவரா புதிர் போடுதீயளே !!
என்று நினைக்கிறீர்களா ? அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

ஆம் !! நான் எழுதுகின்ற இந்தக் கற்பனைக்காவியத்தில் ( இந்தக் கட்டுரை !! முழுக்க, முழுக்க எனது கற்பனையில் 
பூத்திட்ட புதுமலர்கள் மட்டுமே நிறைந்தது. இந்தக் கதையும் சரி, இந்த கட்டுரையில் வருகின்ற சம்பவங்களும் சரி, யாரையும், எவரையும் குறிப்பிடுவன அல்லவே அல்ல)
அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பது ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு !! 

அதுவரை நீங்கள் அனைவரும் பொறுமை காத்து இருக்கவேணும் என்று வேண்டி விரும்பி
கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். உங்கள் நேசன்.
மதுரை TR. பாலு.

திங்கள், 23 ஜனவரி, 2017

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் சின்ன அம்மையாரே !!



இதற்குத்தானே ஆசைப்பட்டாய் சின்ன அம்மையாரே !!



அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

அனைவருக்கும் காலை வணக்கங்கள். 

எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

நேற்றையதினம் சென்னை மாநகரில் தலை
விரித்தாடிய காவல்துறையின் அட்டகாசம் 
மற்றும் அத்துமீறல்கள், அடாவடிச்செயல்கள்,
இவை அத்தனையையும் தொலைக்காட்சியின் 
வாயிலாக முழுவதுமாக டிஷ் ஆன்டனா வைத்து பராமரித்திடும் நேயர்கள் மட்டுமே பார்த்திட முடிந்தது. 

தமிழகம் முழுவதும் ( சென்னை உட்பட)
அத்தனை நகரங்களிலும் இந்த காவல்துறை 
நடத்திய அராஜகத்தை பொதுமக்கள் எல்லோரும் பார்த்துவிடக்கூடாது என்ற சதிச்செயலின் வெளிப்பாடுதான் அத்தனை இடங்களிலும் கேபிள் டிவி இணைப்புக்கள் காலை மணி 10 முதல் மாலை 04.00 வரையிலும் துண்டிக்கப்பட்டு மக்கள் நேரலை தகவல் தொடர்புகளை பார்க்கின்ற அந்த வாய்ப்பினை தடுத்து நிறுத்திய பெருமை நமது தமிழக அரசையும் அதன் சொல்படி கேட்டு இங்கே 
செயல்பட்டுக்கொண்டிருக்கும் காவல்துறை என்ற பெயரில் செயல்படுகின்ற ஏவல்துறையை மட்டுமே சாரும்என்பதில்எள்ளின்முனையளவுகூட இங்கே எவருக்கும் ஐயமில்லை என்பதுதான் உண்மை.

சரி. கடந்த 7 தினங்களுக்கும் மேலாக சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, பொதுமக்களுக்கோ அல்லது சமூக 
அமைதிக்கோ எந்தஒரு பங்கமும் வந்துவிடாமல் அமைதிவழியில் செயல்பட்டு தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வந்த மாணவச் செல்வங்களும் இந்தத் தமிழகத்தின் இளைஞர் பட்டாளங்களும் போராட்டக் 
களத்தில் இருந்து வந்த வேளையில், இவர்களை 
கேவலப்படுத்த வேண்டும், இவர்களது போராட்டத்தின் மீது பொதுமக்கள் நல்மதிப்பு அளித்துவிடக்கூடாதுஎன்று இரவுபகல் என்று பாராமல் சதித்திட்டம் தீட்டி அதன் விளைவாக காவல்துறையை ஏவிவிட்டு அமைதிவழிப் போராளிகளை தடியாலும் கம்புகளாலும் 
அடித்து ரத்தம் சொட்ட சொட்ட காயப்படுத்தி பொதுச்சொத்துக்களான பேருந்துகள் ஆட்டோக்கள் மற்றும் கடைகள் இவைகள் மீது காவல்துறையே கற்களைவீசி, தீவைத்து சென்னை மாநகரையே துவம்சம் 
செய்துள்ளதற்கு மூல,முக்கிய, காரணகர்த்தா யார் ?

இதுதான் இப்போது சமூக ஆர்வலர்கள் முன்பாக 
எழுந்துள்ள கேள்வி.

இதற்கு விடை எதுவாக இருக்கக்கூடும் என்று 
பலவகையிலும் ஆராய்ச்சி செய்து பார்த்திடும் 
போது கீழே குறிப்பிட்டுள்ளதைத்தவிர வேறு 
எந்த விடையும் பொருத்தமானதாக இல்லை 
என்பதைப் பதிவு செய்வதைத்தவிர வேறு 
வழியும் தெரியவில்லை.

மூன்று தினங்களுக்கு முன்பாக, சென்னை 
மெரீனாவில் நடந்துவந்த மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தின் போது மிகப்பெரும்பாலானோர் எழுப்பி வந்த கோஷங்கள் இவைதான் :-

" சின்னம்மா--சின்னம்மா-- பன்னீரைத்தான்  எங்கம்மா "

" நேத்துவரை ஆயாம்மா-- இன்னைக்கு என்ன சின்னம்மா "

இதுமட்டுமல்ல அங்கே பல்வேறு கல்லூரி மாணவிகள் வெளியிட்ட வீடியோ பதிவுகள் அனைத்திலுமே சின்னம்மா, பன்னீர் ஆகியோரை கிண்டல்செய்து பாடுவதிலும் மற்றும் 
ஆடுவதிலுமே தங்களது பொழுதினை கழித்தார்கள், இந்த இளைஞர் பட்டாளங்கள். 

இதற்கு அடுத்தபடியாக, அவசரச்சட்டம் பிறப்பித்தாயிற்றுமாணவர்களே உங்களது போராட்டங்களை கைவிடுங்கள் 
என்று முதல்வர் பன்னீர்செல்வமும் சரி ஆய்அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலாவும் சரி, இவர்கள் விடுத்த 
வேண்டுகோளினை புறக்கணித்த இவர்களை எப்படி பழிவாங்குவது என்று இவர்கள் இருவரும் சேர்ந்து (சசி+பன்னீர்) செய்த கூட்டுச்சதிதான் மாணவர்கள் மீது ஏவி விடப்பட்ட அடக்குமுறை, அராஜகம் மற்றும் அனைத்து சமூக விரோத செயல்களும். இதுதான் உண்மை இது 
மட்டும்தான் உண்மை. எனவேதான் இந்தக்கட்டுரை பெற்றுள்ள தலைப்பு :-

" இதற்குத்தானே ஆசைப்பட்டாய் சின்னம்மா "

இந்தியத்திருநாடு சுதந்திரம் அடைந்து இத்தனை 
ஆண்டுகள் காணாத ஒரு வன்முறை வெறியாட்டம் தலைநகர் சென்னையில் அரங்கேறியதற்கு மேலே குறிப்ப்பிட்ட இவர்கள்தான் காரணம் என்று கூறி 
இத்துடன் கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. TR.பாலு.

ஞாயிறு, 22 ஜனவரி, 2017

அடி மேல அடி வச்சா ? அம்மியும் நகரும் !! மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது !!




அடி மேல அடி வச்சா ? அம்மியும் நகரும் !!
மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது !!




அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

உங்கள் அனைவருக்கும் இனிமை நிறைந்த 
காலை வணக்கங்கள்.

சமீப காலமாக, எனது பதிவுகள் வெளிவராமல் 
தேக்க நிலையில் இருந்தமைக்கு உங்கள் 
அனைவரிடமும் எனது வருத்தத்தை இங்கே 
பதிவு செய்துகொள்கிறேன் முதலில். இதற்கு 
என்ன காரணம் ? எனது வாழ்க்கைத்துணைவி 
ஒன்றிணைந்த அமெரிக்க நாட்டிற்கு பயணம் 
மேற்கொண்டதாலும், முழு குடும்ப பொறுப்புக்கள் அனைத்தையும் நான் ஒருவனே முன்னின்று நடத்திட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாலும், என்னால் மடிக்கணினி முன் அமர்ந்து எனது எழுத்துப்பணியை செய்திட காலமும் நேரமும் எனக்கு அனுமதிதர மறுத்த ஒரே காரணம்தானேயன்றி வேறெதுவும் இல்லை அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
இப்படிப்பட்ட தேக்க நிலைக்கு நான் மீண்டும் 
உங்கள் அனைவரிடமும் எனது இயலாமை குறித்த வருத்தத்தை பதிவு செய்து கொள்கிறேன்.

இப்போது பதிவினை நாம் தொடர்வோம்.

அடி மேல அடி வச்சால் ? அம்மியும் நகரும் !!
மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது !!


இதுதான் இன்று நான் எழுதிட இருக்கும் இந்தக் 
கட்டுரைக்கு தலைப்பு அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

கடந்த பல ஆண்டுகளாக இங்கே கையாலாகாத 
அண்ணா திமுக அரசாங்கத்தால், நின்றுபோன 
நமது பாரம்பரியம் மிக்க தமிழர்களின் உண்மையான உணர்வுகளோடு ஒன்றிக்கலந்த வீர விளையாட்டான "ஜல்லிக்கட்டு" மீண்டும் நமது தமிழகத்தில் நேற்று முதல் அதிகார பூர்வமாக நடந்திட என்ன காரணம் ?

பொறுத்தது போதும் !! பொங்கி எழு !!
மனோகரா !! என்ற முத்தமிழ் அறிஞர் கழகத்தலைவர் கலைஞர் அன்று 1952ல் வெளிவந்த " மனோகரா "திரைக்காவியத்தில் எழுதிய உணர்ச்சிமிகுந்த அந்த வீராவேச வசனத்தை, நமது தமிழினம் கடந்த ஒருவார காலத்திற்கும் மேலாக  மேற்கொண்ட ஒரே காரணத்தால், மத்தியில் உள்ள ஆரியர்களின் சாம்ராஜ்ஜிய பாதுகாவலர், இந்து ஆதிக்க 
வெறியர்களின் தற்போதைய தலைவர், பாரதீய 
ஜனதா கட்சியில் இவருக்கு முன்பாக உள்ள அத்தனை தலைவர்களையும் பின்னுக்குத்தள்ளி, தன்னை முன்னிறுத்திக்கொண்டு ஆட்சிக்கட்டிலில் பிரதமர் என்ற பொறுப்பில் அமர்ந்திருக்கும் திருவாளர் நரேந்திர 
மோடியிலிருந்து, இங்கே தமிழ்நாட்டில் அம்மையார் ஜெயலலிதா மறைவிற்கு பின்பாக, அந்த இடத்தில் முதல்வராக அமர்ந்திருக்கும் (மன்னிக்கவும் பொம்மை முதல்வராக) திருவாளர்O. பன்னீர்செல்வம் வரை அத்தனை 
பேருடைய நித்திரையைக் கலைத்து, நெஞ்சில் கலவர உணர்வினை ஏற்படுத்தி, இத்தனைகாலமும் இந்த ஒரு அவசர சட்டத்தை இயற்றிட வக்கத்த, வகையத்த, நெஞ்சில் 
தெம்பு, திராணியற்ற ஒரு அரசாங்கத்தை வழிநடத்தி வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி பின் பன்னீர்செல்வம் பிறகு மீண்டும் ஜெயா, மீண்டும் பன்னீர் என்று மாறி மாறி ஆண்டுமாறிய அந்த அரசியல் 
கையாலாகதவர்களால், கொண்டு வராத, கொண்டுவரத் தெரியாத, ஒரு அவசர அரசியல் சட்டத்தை கொண்டு வரச்செய்திட்ட நமது தமிழனத்தின்பண்பாடு,நாகரீகம்,கலாச்சாரத்தை காப்பாற்றிட, கொட்டும் பனி, கொளுத்தும் வெயில், வீசிய குளிர்காற்று, இவை அனைத்தயும் துச்சமென மதித்து 
கடற்கரை குளிர்காற்றினில் தவமிருந்து தங்களது இலக்கை இன்றையதினம் அடைந்திட்ட அந்தத் தியாகத்திரு உள்ளங்களின் 
பொற்கமல பாதங்களில் நான் முதலில் விழுந்து வணக்கம் செலுத்திக்கொள்கிறேன் அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

அவர்களது அந்த தியாகம் மத்தியஅரசாங்கத்தை நிமிரச் செய்திருக்கிறது. மாநில அரசாங்கத்தின் மடியில் நெருப்பை கவிழ்த்திருக்கிறது. இல்லையென்று சொன்னால், அந்த 
பன்னாட்டு நிறுவனங்களின் அடிவருடிகளான அந்த BETAஎன்ற அமைப்பு இங்கே நமது பாரம்பரிய வீராவேச காளைஇனத்தை அழிக்கும் முயற்சியில் இதுவரை வென்றிருந்த 
அந்த அமைப்பினை இன்று தோற்கடித்திருக்க இயலுமா ?

ஆகவேதான் மிக நீண்ட இடைவேளைக்குப்பிறகு நான் எழுதி இருக்கும் இந்த கட்டுரைக்கு நான் தந்துள்ள தலைப்பு 

அடி மேல அடி வச்சா ? அம்மியும் நகரும் !!
மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது !!

என்று தந்துள்ளேன். நாம் இப்போது பெற்றுள்ள இந்த அவசரச்சட்டம் என்ற ஒரு நிலை ஒரு தற்கால வெற்றியே.நிரந்தர வெற்றி எப்போது வரும் என்று கேட்டால், காளைமாட்டினை காட்சிப்பட்டியலில் இருந்து மத்திய அரசு
நீக்கியபிறகும், இந்த வெளிநாட்டு அடிவருடிகளின் அமைப்பான BETA வை முற்றிலும் இந்தியத்திருநாட்டினில்
தடை செய்வதன் மூலமாகவும் அதன் பின்பே நாம் இந்த முயற்சியில், முழுவெற்றி பெற்றுவிட்டோம் என்று என்னால் உறுதியாக, அறுதியிட்டு கூறிட இயலும் எனது
அன்புத்தமிழ் நெஞ்சங்களே. 

அதுவரை நாம் தொடர்ந்து போராடுவோம் !! போராடுவோம் !! முழுமையான வெற்றி
நமது கரங்களின் வந்து சேர்கின்ற வரை போராடுவோம் !!என்று சூளுரைத்து, வாய்ப்புக்கு நன்றி பாராட்டி உங்கள் அனைவரிடமும் இருந்து விடைபெறுகின்றேன்.

நன்றி !! வணக்கம் !!
என்றும் அன்புடன். மதுரை. T.R. பாலு. 

செவ்வாய், 3 ஜனவரி, 2017

கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா ?




கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா ?



அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்.

சுமார் 50 ஆண்டுகளுக்கும் முன்பாக தமிழில்
வெளிவந்த வெற்றிப்படவரிசையில் நின்ற
படம்தான் " ஆலயமணி"  மறைந்த வில்லன்
நடிகர் ( உண்மை வாழ்க்கையில் மிகவும் நல்ல
பண்பாளர்- நடிப்பில் நல்லவராக நடித்தவர்
உண்மை வாழ்க்கையில் மிக மிக கெட்டவர்கள்
பலருண்டு-உதாரணம் MGR) PS வீரப்பா தயாரித்து
மறைந்த K.சங்கர் இயக்கத்தில் கவியரசர் கண்ணதாசனின்அதியற்புதமான பாடல்களில், மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன்-இராமமூர்த்தி இருவரின்தேனிசையில் வெளிவந்த கருப்பு-வெள்ளைத்திரைப்படம்தான்

                                      ஆலயமணி

அதில் இடம்பெற்ற ஒரு பாடலின் தலைப்புத்தான்
இங்கேகட்டுரைக்குதலைப்பாகத்தரப்பட்டுள்ளது.
என்ன காரணம் ? முதலில் பாடலின் வரிகளைப்
பார்ப்போம்:-

கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா ?
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலை ஆகுமா ?
சொல்லெல்லாம் தூயதமிழ் சொல்லாகுமா ?
சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா ?

சரி. எதுக்காக மதுரை பாலு இப்ப இந்த நேரத்துல
இப்படி ஒரு தலைப்பில் ஒரு கட்டுரை எழுதிட
முன்வரவேண்டும் ? என்ற உங்களின் கேள்வி
உண்மையில் நியாயமானதுதான்.

உங்களது கேள்விக்கான விடை இதோ :-

கடந்த 1980ல் தொடங்கி பல்வேறு சூழல்களில்
மறைந்த MGRன் " அன்புக்கு " உரியவராகி அதனால்பிற்காலங்களில் அவர் ஆரம்பித்த கட்சிக்கு(ஆய்.அ.தி.மு.க.) கொள்கை " பரப்பு " செயலாளர் ஆகிஅதன்பிறகு இந்த அம்மணியின் தொந்திரவு பொறுக்கமுடியாமல், இவரை டெல்லிக்கு அனுப்பினால் தான், நம்மால் 
இங்கே நிம்மதியாக இருக்கமுடியும் என்ற நிலைக்குதள்ளப்பட்ட புரட்டுத்தலைவர் MGR, இந்த அம்மணியை மாநிலங்களவை
உறுப்பினராக ஆக்கி, அதனால் இந்த அம்மணிக்கும்மறைந்தராஜீவ்காந்திக்கும் "ஆழமான நட்பு " மலரத்தொடங்கி அதன் பிறகு இவரை சந்திக்கவேண்டும் என்ற" தணியாத " எண்ணத்திர்காகவே கடந்த 1991ம் ஆண்டுநடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத்தேர்தலில் பிரச்சாரம்செய்திட வந்த ராஜீவ்காந்தி மண்டையப்போட்டது ஒருதனி விஷயம் அதன் பலன், இந்தப் பொம்பளைக்கு ஒருகுருட்டு அதிர்ஷ்டம் அடித்த மாதிரி ஆகி அதனால் இந்தத்தமிழகத்திற்கு ஆட்சிப்பொருப்பிற்கு வந்து அதனால் பலகோடி கோடிகளை அசையும், அசையா சொத்துக்களாக வாங்கிக்குவித்து அதன் பிறகு ஒவ்வொரு 5 ஆண்டுகள் இடைவெளிவிட்டு, கடந்த 2016 நடந்த சட்டமன்றத்தேர்தலில்அநியாயஅக்கிரமச்செயல்களால், தேர்தல் ஆணையத்தையே விலைக்குவாங்கி அதன் மூலம் MGRக்கு அடுத்தபடி தொடர்ச்சியாகமுதல்வர் பதவி அடைந்த வரும் சமீபத்தில் 


" பாவத்தின் சம்பளம் மரணம் "


என்ற கிறிஸ்த்துவ மதத்தின் உண்மை 

வாசகங்களுக்கு வடிவம் தந்து இறந்து 

போன அம்மையார் ஜெயலலிதா ( அந்த மரணம் 

இயற்கையானதா அல்லது மரணத்திற்கு 

தள்ளப்பட்டாரா ? இது தனி ட்ராக்)

அதன் பிறகு அவரது ஆருயிர்த்தோழியும் கடந்த 

30 ஆண்டுகளுக்கும் மேலாக, அவருடன் கூடவே 

இருந்து அவருக்கு " பலவகையிலும்" 

உறுதுணையாக இருந்த அவரது "இணைபிரியா" 

" ஆழ்ந்த நட்பினால் "அவருக்கு அரசியல் 

ஆலோசனை சொன்னவரும், மன்னார்குடி தந்த மாணிக்க செல்வமும் ஆன VK. சசிகலா, 

மறைந்த ஜெயாவைப்போல அதே பச்சை நிற 

சேலை, ஜாக்கெட், இத்யாதி..இத்யாதி.. அவர் பாணியில் மாடத்திலே நின்று கொண்டு 

கூடியிருக்கும் அந்தக் கட்சியின் 

அனாமதேயங்களுக்கு கை அசைத்து கும்பிடு போடுகின்ற ஸ்டைல் இவைகளை எல்லாம் உற்று பார்க்கின்ற போது எனது மனதில் இசைக்கத்தொடங்கியஅந்தக்காலத் திரைப்படப்பாடல்தான் இந்தக் கட்டுரைக்குத் 

தலைப்பாக நான் இங்கே தந்துள்ளேன் 

அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா ?

மற்ற பிற விஷயங்களை உங்களது சொந்த 

சிந்தனைக்கு விட்டு விடுகிறேன்.

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. TR.பாலு.