புதன், 4 நவம்பர், 2015

தமிழகத்தில் உள்ளவர்கள் கம்யூனிஸ்ட்களா ? இல்லை கமிஷன் ஏஜெண்டுகளா ? அரசியல் கட்டுரை !!







பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!


அஸ்ஸலாமு அலேக்கும் !!


அல்லாஹூ-அக்பர்-அல்லாஹ் !!



அனைவருக்கும் வணக்கம்.


இன்றையதினம், தமிழகத்தில் உள்ள திராவிட 

முன்னேற்றக் கழகம், அ.இ.அ.தி.மு.க. இந்த 

இரண்டு அமைப்பிற்கும் மாற்றாக, வெட்கம் 

கெட்ட அரசியல் அரைவேக்காடு என்று 

அனைவராலும் பாராட்டுப் பெற்றவரும், நம்பி 

வளர்த்த கலைஞரின் தோள்களில் அமர்ந்து

கொண்டு அவரின் செவிகளைக் கடித்து துப்ப 

முயன்றவரும்,தலைமைக்கே தெரிவிக்காமல், 

தான்தோன்றித்தனமாக கள்ளத்தோணி ஏறி 

யாழ்ப்பாணத்தில் அங்கே விடுதலைப் 

புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை 

சந்தித்த அட்டைக்கத்தி வீரரும் ஆன ( அதுவரை 

வை. கோபாலசாமி என இருந்த தனது பெயரை), 

எண்ணியல் ஜோதிடக்கலை ஆராய்ச்சியாளர்     

(Numerology Researcher )அறிவுறுத்தலால் வை.கோ. 

என்று பெயர் மாற்றம் செய்து கொண்டு 

அன்றிலிருந்து இன்றுவரை, தூங்கும்நேரம்தவிர 


மற்ற அனைத்து நேரமும் வாய்க்கு வந்தபடி 

ஏதாவது கருத்தினை மிக உணர்ச்சிபொங்கிட 

உளறித்திரிவது ஒன்றே தனது தலையாய 

கடமை  என்று செயல் பட்டுக்கொண்டிருக்கின்ற 

தமிழினத் துரோகியின் தலைமை ஏற்று மக்கள் 

நலக்கூட்டு இயக்கம் என்ற பெயரில் 

இணைந்துள்ள தமிழகத்தில் வாழும் இவர்கள் 


கம்யூனிஸ்ட்டுகளா ?  கமிஷன் ஏஜெண்டுகளா ?


இதுதாங்க இன்றைய கட்டுரையின் தலைப்பு.

இந்த இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும்அதாவது 

மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் 

( முதல்ல சொன்னது அரிவாள் சுத்தியல் 

நட்சத்திரம், இரண்டாவது அரிவாள் நெற்கதிர் 

சின்னம்-சின்னத்திலேயே வன்முறை ஆயுதம் ) 

இவர்களோடு கூட நம்ம மதிப்பிற்குரிய 

விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் 

திரு தொல். திருமாவளவன் அவர்களும்,

( தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் கலைஞர் 

பக்கம் இவர் வந்துவிடுவார்--எப்படி என்றால் 

அதுவரைக்கும் அங்கே இருந்து அவர்களோடு 

கூட்டாக இயங்குவதுபோல நடித்துக் கொண்டு 

இருங்கள் என்று சொல்லி அனுப்பியதே நம்ம 

தல கலைஞர் தானே ) சேர்ந்து மக்கள் 

நலக்கூட்டு இயக்கம் கடந்த 02-10-2015 அன்று 

மேலேசொன்ன வை.கோ. தலைமையில் 

நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், 

தங்களது  தேர்தல் நடைமுறைக் கொள்கைகள்/

அறிக்கையின் முன் வடிவம் பற்றி எடுத்து 

உரைத்தபோது, மானங்கெட்ட வை.கோ.என்ன 

உளறினார் என்று கேட்டால், 

தேர்தலுக்காக இந்த இயக்கம் மக்கள் நலக் 

கூட்டணி என்று மாற்றப்படும். ஆனால் 

கூட்டியக்கம் அது அப்படியே செயல்படுமாம். 

இது எப்படி இருக்குன்னு கேட்டா 

ஒரு பெண்ணைத் திருமணம் செய்வித்து அவள் 

கணவருடன் முதலிரவு அறைக்கு அனுப்பி 

நடைபெற வேண்டிய சாங்கோபாங்கங்கள்

அனைத்தும் நடைபெற்று முடிந்தாலும், விடிந்து 

முதலிரவு அறைதனில் இருந்து அவள் வெளியே 

வந்த பிறகும் அவள் கன்னி கழியாத பெண் 

குலத்திலகமே என்று சொல்கிற அறிவு கெட்ட 

பேச்சாகத்தான் தெரிகிறது. 

சரி. இந்தக் கூட்டணியில் இருக்கிற இந்தக் 

கமிஷன் ஏஜெண்டுகளின் கடந்தகால வரலாறு 

என்ன என்பதனை நாம் சற்று அலசி 

ஆராய்வோமா அன்பர்களே ?

அது 1967ம் ஆண்டு. மூதறிஞர் C.இராஜகோபால 

ஆச்சாரியாரின் மதிநுட்பக்கூட்டணி ஒன்றினை 

(இதுதான் தமிழகத்தில் அமைந்த முதன் முதல் 

கூட்டணி என்பது மட்டுமல்ல அன்பர்களே 

கூட்டணி என்ற வார்த்தைக்கு முதல்முதலாக 

பிள்ளையார்சுழி போடப்பட்டதும் இதுவே 

ஆகும்.)திராவிட முன்னேற்றக் கழகத்தின் 

தலைமையில் அப்போது இந்த இரண்டு கமிஷன் 

ஏஜெண்டுகளும் இதில்தான் இணைந்திருந்தனர். 

அதன்பின்பு அமைந்த பலகட்டத் தேர்தல்கள் 

அனைத்திலும் அது சட்டமன்றத் தேர்தல் 

ஆனாலும் சரி அல்லது பாராளுமன்றத் தேர்தல் 

ஆனாலும் சரி இந்த இரண்டு கமிஷன் ஏஜெண்ட் 

கட்சிகளும்  கலைஞர் தலைமையிலே மட்டுமே 

அனைத்து தேர்தல்கள், இடைத்தேர்தல் 

ஆகியவற்றினை இவர்கள் சந்தித்து வெற்றியும் 

பெற்றனர் எதுவரை என்று கேட்டால், 1976ம் 

ஆண்டு வரை. அப்போது இந்தியக் கம்யூனிஸ்ட் 

கட்சியின் முன்னணிதலைவர்களுள்ஒருவரான, 

வயித்த வலி கல்யாணசுந்தரம் தனது 

துர்போதனையால் புரட்சி நடிகர் M.G. ராமச்

சந்திரனோடு சேர்ந்து கொண்டு அவரை 

அண்ணா தி.மு.க. என்று ஒரு கட்சியை 

ஆரம்பிக்க வைத்த பெருமையும் இந்த 

வயித்தவலி கல்யாணசுந்தரத்தையே சாரும்.

அதிலிருந்து அணி மாறி இரண்டு கமிஷன் 

கட்சிகளும் நடிகர் MGR பக்கம் போய் சேர்ந்து 

கொண்டனர். அந்த MGR மறைவிற்குப் 

பிறகு அவரது ஆசைக்கும் அன்பிற்கும் 

பாசத்திற்கும் உரிய அம்மையார் பக்கம் போய் 

சேர்ந்து கொண்டனர் இந்த இரண்டு கமிஷன் 

கட்சியினரும்.

அதிலும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் 

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் 

தமிழ் மாநில செயலாளர் என்று செயல் பட்டுக் 

கொண்டிருந்த திரு தா.பாண்டியன் அவர்கள் 

கிட்டத்தட்ட அம்மையார் வீட்டினில் காவல் 

காக்கின்ற நாய்க்குட்டியை விடவும் கேவலமாக 

அம்மையாரிடம் (" பெற வேண்டியதைப் பெற்றுக்

கொண்டு " ) கிட்டத்தட்ட ஒரு வாழ்நாள் 

கொத்தடிமைபோலவே வாழ்ந்து சொத்துக்கள் 

சேர்த்த கதை நாடே அறியும் என்று, நான் 

சொல்லவில்லை அன்பர்களே இந்த 

நாட்டு மக்கள் சொன்னார்கள், 

பேசிக்கொண்டார்கள் என்று என்னிடம் 

பலர் சொல்லக் கேட்ட அனுபவம்  உண்டு 

எனக்கு.  

ஆக இந்தக் கமிஷன் ஏஜெண்டுகள், இவர்கள் 

கம்யூனிச சித்தாத்தங்களை கைவிட்டு கிட்டத் 

தட்ட நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆயிற்று.

இதுதான் அன்பர்களே இன்று தமிழகத்தில் 

வாழ்ந்து வருகின்ற கமிஷன் ஏஜெண்டுகளின் 

வரலாற்று நிகழ்வுகளின் ஓரளவு தொகுப்பு.


இவர்களின் உள்ளக் கிடங்குகளை உங்களுக்கு 

விளக்கிக் கூறிட வேண்டும் என்ற எனது 

எண்ணத்தின் வெளிப்பாடுதான் இன்றைய 

இந்தக் கட்டுரை அன்பர்களே. மிகவும் 

நீண்டதோர் கட்டுரையை படித்து இரசித்த 

உங்கள் அத்துணை பேர்களுக்கும் எனது சிரம் 

தாழ்ந்த, கரம் குவிந்த அன்பு வணக்கங்களோடு 

நன்றி பாராட்டி விடைபெறுகிறேன்.

நன்றி !! வணக்கம் !!


அன்புடன். திருமலை.இரா.பாலு.

t