வியாழன், 22 டிசம்பர், 2016

மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் திட்டம்தான் என்ன ? தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் !!



பாரதீய ஜனதா கட்சியின் திட்டம்தான் என்ன ? ( தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் )



அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

உங்கள் அனைவருக்கும் இனிய காலை 
வணக்கங்கள்.

மாநில முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 
மறைவிற்குப் பிறகு, எப்படியாவது தமிழகத்தில் 
காலூன்றிட வேண்டும், அதிலும் குறைந்தஅளவு 
இரண்டாம் இடம் கிடைக்காவிட்டால்கூடப் 
பரவாயில்லை, மூன்றாவது இடமாவது இங்கே 
கிடைத்தால் போதுமானது அதை வைத்துக்கொண்டு அடுத்து அடுத்து முயற்சி செய்து இரண்டாவது இடத்தைக் கைப்பற்றிவிடலாம், என்ற மனக்கணக்கில் 
முழு நம்பிக்கை வைத்து இங்கே சித்துவிளையாட்டில் ஈடுபட்டிக்கொண்டிருக்கும் பி.ஜே.பி.யின் கனவு நமது தமிழகத்தைப் பொறுத்தவரையில், நனவாகுமா என்பதே 
இந்தக் கட்டுரையின் நோக்கம் அன்புத்தமிழ் நெஞ்சங்களே.

1967ம்ஆண்டிற்குப்பிறகுதமிழகத்தைப்பொறுத்தவரைதேசியக் கட்சியான காங்கிரஸ் வேரோடும் வேரடி மண்ணோடும் இங்கே புதைகுழிக்குத் தள்ளப்பட்டுவிட்டது. அதன்பிறகு அந்தக் காங்கிரஸ் கட்சி 1971ம் ஆண்டில் மறைந்த இந்திராகாந்தியின் புண்ணியத்தால், ஸ்தாபன காங்கிரஸ் என்றும் இந்திராகாங்கிரஸ் என்றும் இரண்டு பிரிவாகப் பிரிந்து ஸ்தாபன காங்கிரஸ் மறைந்த பெருந்தலைவர் காமராஜ் தனக்குப் 
பிறகு அடுத்த தலைமுறையை உருவாக்கி வைக்காமல் தனக்கு உள்ள முக்கியதத்துவம் எங்கே குறைந்துவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாக செயல்பட்டதன் விளைவு அந்தக் 
கட்சியே அவரது மறைவிற்குப்பிறகு காணாமல் போய்விட்டது இது வரலாறு நமக்கு உரைத்திடும் உண்மை.
( இதே கொள்கையைத்தான் இங்கே மறைந்த அம்மையார் ஜெயலலிதாவும் கடைப்பிடித்தார் அதே போல அவரது அதிமுக என்ற கட்சியும் நெல்லிக்காய் மூட்டையை பிரித்தால் எப்படி சிதறியோடி பறந்துவிடுமோ அதுபோல 
உடைந்து சிதறி சின்னாபின்னமாகி காணாமல் கரைந்து போகப்போவது எதிர்காலம் நமக்கு எடுத்துரைக்க இங்கே காத்துக்கொண்டிருக்கிறது என்பதே உண்மை)

சரி. நாம் இப்போது விஷயத்திற்கு வருவோம். 

இங்கே இரண்டு பெரும் சக்திகள் உள்ளன தமிழகத்தைப்பொறுத்தவரையில். ஒன்று திராவிட முன்னேற்றக்கழகம் மற்றொன்று அஇஅதிமுக. இந்த இரண்டில் ஒன்றை 
அழித்தால் மட்டுமே பாரதீய ஜனதா கட்சி இங்கே அந்த இடத்தைப் பிடித்து அரசியல் செய்திட முடியும் என்கின்ற நிலைமை இங்கே தமிழகத்தில். அப்படி பார்க்கின்றபோது 
திமுக என்பதுஒருஎஃகுக்கோட்டை.விழுதுகளின் முழு பலத்துடன் ஓங்கி பறந்து விரிந்துள்ள ஒரு உண்மையான அரசியல் பாரம்பரியத்துடன் வளர்ந்த கட்சி. அதை அசைக்க கனவினாலும் இந்த டெல்லி ஆரிய இந்துமதவாத சக்தி 
என்பதன் மறு உருவமாக செயல்படும் பி.ஜே.பி. யால் ஒரு இம்மியளவுகூட அசைக்க முடியாது. ஆனால், ஜெயலலிதா மறைவிற்குப்பிறகு, வலுவில் ஒரு மாங்கனி மடியில் வந்து 
விழுந்த கதைபோல, பிஜேபிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதனால்தான்இங்கேதமிழகத்தில்மட்டும்வருமான வரித்துறை,  சிபிஐமற்றும் புலனாய்வுப்பிரிவு இத்யாதி..இத்யாதி..என்று சோதனை என்ற பெயரில் அனைத்து அமைச்சர்கள், அவருக்குத் துணைபோன அத்தனை IAS அதிகாரிகளையும் மடக்கி அவர்கள் லஞ்ச லாவண்யத்தின் வாயிலாக ஈட்டிய பணம் சொத்துக்கள் அத்தனையையும் மீட்டு அவர்களை  சிறைக்குத்தள்ளிடும் நடவடிக்கையில் முழுமூச்சாக மத்தியில் ஆளும் பிஜேபி அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. 

ஆடிக்காத்தில் அம்மியே பறக்கும்போது அம்மிக்குழவி எம்மாத்திரம் என்பதுபோல, ஆனானப்பட்ட தலைமைச் செயலாளரே இங்கே கைது செய்யப்படும் சூழலில் மன்னார்குடி மார்பியா கும்பலின் தலைவி சசிகலா எம்மாத்திரம் ?.

அடுத்தகட்ட நடவடிக்கை அவர்கள் மீதுதான். அவர்கள் ஜெயலலிதா கள்ளத்தனமாக, லஞ்ச, லாவண்யம் செய்து ஈட்டி வைத்திருந்த 
அத்தனை அசையும் சொத்துக்களையும் ஒருமாத காலத்துக்கு முன்பே தஞ்சை காவேரி டெல்டாப் பகுதிகளுக்கு கடத்திச்சென்று மண்ணிலே புதைத்து வைத்திருந்தாலும் அவை எங்கே, எந்தெந்த இடத்தில் உள்ளது ? அவை அத்தனையும் மத்திய அரசின் உளவுப்பிரிவின் கைகளில்தான் உள்ளது அத்தனை 
விபரங்களும். இனி வரும் நாட்களில் அவை அத்தனையும் வெளிவந்து, அந்த சொத்துக்கள் முழுவதும் கைப்பற்றப்படும்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா கும்பல் சிறைச்சாலைக்கு செல்வார்கள். தலைவன் இல்லாத கப்பல் போல அந்தக்கட்சி 
கடலில் மூழ்கி காணமல் போகப்போவதை எந்த சக்தியாலும் தடுத்த நிறுத்திட முடியவே முடியாது. 

இதுதான் இனிமேல் இங்கே அரங்கேறப்போகும் நாடகத்தின் கடைசி கட்ட காட்சிகள் என்பதை 
தமிழக அரசியலை கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக 
கண்காணித்துக்கொண்டிருப்பவன் என்ற முறையில் இங்கேபதிவு செய்கிறேன் அன்பர்களே. இந்த நிலையை இங்கே 
ஏற்படுத்தும் வரையில் மத்தியில் உள்ள பிஜேபி அரசாங்கம் தூக்கமின்றி செயல்படும் என்பதே உண்மை.

எதை விதைக்கிறோமோ அதுதான் முளைக்கும்.
துரோகத்தை விதைத்து வளர்ந்த கட்சி அஇஅதிமுக.
இப்போது துரோகத்தால் அது அழியப்போகிறது.


எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

நன்றி. வணக்கம்.

அன்புடன். மதுரை. TR.பாலு.
 

சனி, 17 டிசம்பர், 2016

அங்கே அடித்தால் ? இங்கே வலிக்கும் !! அரசியலில் இதுதான் யதார்த்தம் !!




அங்கே அடித்தால் ?
இங்கே வலிக்கும் !!


அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

உங்கள் அனைவருக்கும் இனிய மாலை 
வணக்கங்கள்.

வர்தா புயலின் கொடுமையால் கடந்த 
6 நாட்களுக்கும் மேலாக எனது வலைதள 
பணிகள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டு,
அதனால் எனது பதிவுகளும் உங்களது 
கரங்களில் கிடைக்காமல் போனதற்கு,
எனது ஆழ்ந்த மன வருத்தத்தை இங்கே 
நான் முதலில்பதிவு செய்கிறேன்.

நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும். இனி 
நடப்பவை நல்லவைகளாக அமையட்டும்.

அங்கே அடித்தால் ?
இங்கே வலிக்கும் !!

ஒன்னுமே புரியலையே !!  என்று நீங்கள் 
குழம்புவது எனக்குத் தெரிகிறது. அந்தக் 
குழப்பத்திலிருந்து உங்களை மீட்டெடுப்பதும் 
எனது முதல் கடமைதான்.

பாராளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் 
நேற்றுடன் எந்தவித அலுவல்களையும் 
சரிவர கவனிக்காமல் முடிவுக்கு வந்துள்ளது.
( ஒருசில மசோதாக்கள் மட்டுமே அங்கே 
நிறைவேற்றப்பட்டுள்ளது)  காரணம் ..ரூபாய் 
நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் 
முடிவுக்கு, கடும் எதிர்ப்பு தெரிவித்து அதைப்பற்றிய விவாதங்களில் பிரதமர் திரு.நரேந்திரமோடி நேரில்வந்து விளக்கம் அளிப்பதற்கு முன்பாக,பிரதமர் பாராளுமன்றத்திற்கு வெளியே முக்கிய 
எதிர்கட்சிகளே கருப்புப்பணத்திற்கு முக்கிய காரணம் என்று  பேசியதற்கு, அவையில் வந்து முதலில் மன்னிப்பு கேட்கவேண்டும் என்ற எதிர்கட்சிகளின் கோரிக்கைகளை கடைசிநாள் வரை புறக்கணித்த பெருமை பிரதமர் நரேந்திர மோடியையே சேரும். 

இது ஒருபுறம் இருக்க, பாராளுமன்றத்தில் அனைத்து எதிர்கட்சிகளும் ஓரணியில் திரண்டு நேற்றையதினம் குடியரசுத்தலைவர் 
திரு. பிரணாப்முகர்ஜி அவர்களை நேரில் சந்தித்து தங்களது நிலைப்பாட்டினை தெரிவித்திட இருந்த நிலையில், அரசியல் கத்துக்குட்டி, காங்கிரஸ் கட்சியை அகில இந்திய அளவில் குழிதோண்டி புதைத்திட தன்னால் இயன்ற அளவில் அனைத்து முயற்சிகளையும் 
சிரமேற்கொண்டு பணியாற்றிவரும் அகிலஇந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி தனியாக அவரது ரத,கஜ,துரக பதாதிகளோடு (குலாம்நபி 
ஆசாத்,மல்லிகார்ஜுன கார்கே மற்றும் நிர்வாகிகள் சகிதத்துடன்) எந்த எதிர்கட்சிகளையும் கலந்து ஆலோசிக்காமல் 
தனந்தனியனாக, பிரதமர் மோடியை சந்தித்து, சமீபத்தில் சட்டமன்றத்தேர்தல் நடைபெற உள்ள உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள விவசாயிகளின் அனைத்து பயிர்க்கடன் 
முழுவதையும் ரத்து செய்திட வேண்டும் என்ற ஒரு வேண்டுகோளுடன் சந்தித்தது, காங்கிரஸ் தவிர உள்ள அனைத்து எதிர்கட்சிகளையும் முகம் சுளிக்க வைத்தது.

இதனால், திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் குடியரசுத்தலைவரை நேரில் சந்தித்து நிலைமைகளை விளக்கிக்கூறிவிட்டு வெளியே வந்தனர்.  

திமுக தங்களை விட்டு எங்கேவிலகிப்போனால், இங்கே தமிழகத்தில், தங்களது காங்கிரஸ் கட்சி அரசியல் அனாதைஆகிவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாக, (எப்போது இந்த 
கத்துக்குட்டி சென்னை வந்தாலும் தலைவரைப் பார்ப்பதே இல்லை என்பதை ஒரு கொள்கை முடிவாக செயல்படுத்தி வந்தவர்தான் இந்த ராகுல்காந்தி என்பது உலகறிந்த விஷயம்.
மறைந்த ஜெயலலிதா, உடல்நலமின்றி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது ஓடோடி வந்தவர், ஜெயா மரணமடைந்தபோது அஞ்சலி செலுத்தவந்தவர்,  அப்போது காவேரி மருத்துவமனையில் தலைவர் கலைஞர் இருந்தார்)அப்போதெல்லாம் தலைவர் கலைஞரை பார்க்க வராதவர் இன்று சிறப்பு வானூர்தியில் சென்னை வந்து காவேரி 
மருத்துவமனைக்கு நேரில் விஜயம் செய்து தலைவர் கலைஞர் அவர்களை நேரில் சந்தித்தும், தளபதி திரு.மு.க.ஸ்டாலின் அவர்களிடம் நலம் விசாரித்தும் 
சென்றிருக்கிறார் என்றால், என்ன அர்த்தம் ?

நான் மேலே குறிப்பிட்டுள்ளதுதான் காரணம். எங்கே தமிழகத்தில், தாங்கள் ( காங்கிரஸ்கட்சி) அரசியல் அனாதைகள் ஆகிவிடுவார்களோ என்ற அச்சத்தின் காரணமாக, வேறு வழியேதுமின்றி இந்த அரசியல் கத்துக்குட்டி, திரு. ராகுல்காந்திசென்னைவந்து சென்றுள்ளார். 

அதைக் குறிப்பிட்டுக்காட்டிடவே நான் இந்தக் 
கட்டுரைக்கு தலைப்பாக தந்தது :-

அங்கே அடித்தால் ?
இங்கே வலிக்கும் !!

நன்றி !! வணக்கம் !!

அன்புடன்.

மதுரை. TR.பாலு.






திங்கள், 5 டிசம்பர், 2016

புயலுக்குப் பிறகு அமைதி !! அநியாய வெற்றிக்குப் பிறகு ?


புயலுக்குப் பிறகு அமைதி !! 

அநியாய வெற்றிக்குப் பிறகு ?


( கடந்த மாதம் 22-11-2016 அன்று நான் பதிவு 
செய்த எனது மற்றுமொரு வலைதளமான 
" நெஞ்சு பொறுக்குதில்லையே " அதில் 
எழுதியிருந்த கட்டுரையை மீண்டும் இங்கே 
பதிவு செய்கிறேன்)


அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

உங்கள் அனைவருக்கும் இனிமை நிறைந்த 
வணக்கம்.

எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

இறைவனால் படைக்கப்பட்ட இந்த பூமியில், 
நாம் பொதுவாக பார்த்தோமேயானால்,இங்கே  
நடைபெறுகின்ற நிகழ்வுகள் ஒவ்வொன்றும்  
ஒன்றுக்குமற்றொன்றுஎதிர்மறைவிளைவுகளைசந்திப்பதாக மட்டுமே இதுவரை இயற்கையாக, அழகாக, அமைந்திருக்கிறது.

எப்படி என்று கேட்டால், கடும் கும்மிருட்டு 
நிறைந்த இரவு அதனை அடுத்து நல்ல வெளிச்சம் தருகின்ற உதயசூரியனின் ஒளிக்கதிர்கள் பூமியெங்கும் பிரகாசிக்கத் தொடங்குவதால் அந்த கும்மிருட்டு எங்கே என்று தேடினாலும் அது காணாமல் போய்விடுகிறது.

அதேபோலத்தான் காலங்களையும் இறைவன் 
கணக்காகஅளந்துஇங்கேபடைத்துள்ளான்.
எப்படி என்றால், மழைக்காலம், அதனை அடுத்து 
நம்மை வாட்டி வதைக்கும் குளிர்காலம்,அதனை 
அடுத்து இந்தக்குளிருக்கு கடும் எதிரியான வெப்பக் காலம் அதனை அடுத்து இதமான தென்றல் வீசிடும் வசந்தகாலம்...இதுபோலவே ஒன்றுக்கொன்று முற்றிலும் எதிர்மறையான காலங்களாகவே இறைவன் இந்த பூமியில் நிகழ்வுகளாக படைத்துள்ளான். இது 
எதற்காக ? என்று நாம் சற்றே சிந்தித்துப் பார்த்தால்,நமக்கு வரும் விடை, இதுதான் :-

எதுவும் இந்த பிரபஞ்சத்தில் நிரந்தரம் இல்லை.
காலம் மாறுதலுக்கு உரியது. அதேபோல 
மனிதன் நிலையம் மாறுதலுக்கு உட்பட்டது.
நேற்று வரையில் பணக்காரன், ஆனால் இன்றோ பரம ஏழை. ( இதை பல நிகழ்வுகளில் பூகம்பம்நடைபெற்ற இடங்களில் காணலாம்) அதே போல நேற்று வரை ஏழை, பிச்சைக்காரன், ஆனால் இன்றோ திடீர் அதிர்ஷ்டத்தின் காரணமாக அவனே பெரிய கோடீஸ்வரனாக மாறிவிடுகிறான். ( இதையும் பல லாட்டரி குலுக்கல்கள் இந்த பூமியில் நமக்கு 
நடந்தவைகள் நினைவு படுத்தியுள்ளது) இதே போல சரித்திரத்தில் நடந்த ஒரு நிகழ்வினை உங்களிடம் சொல்லி இந்தக்கட்டுரையை நிறைவு செய்திட நான் நினைக்கின்றேன். (இன்ஷா அல்லாஹ்- இறைவன் நாடினால்)


அது ஒரு மொழியின் பெயரால் அமைந்த மாநிலம். அந்த மாநிலம்அமைந்த நாடு, சுதந்திரம் அடைந்த நாள் முதலாக, சுமார் 20 ஆண்டுகள் வரையில் தேசிய கட்சியால் ஆளப்பட்டு வந்தது. அதன் பிறகு ஏற்பட்ட 
மக்கள் விழிப்புணர்வால், மாநிலக்கட்சியின் ஆட்சி அங்கே மலர்ந்தது. அது ஒரு சுயமரியாதை உணர்வு உள்ள ஒரு இயக்கம். ஒரு பேரறிஞரின் தலைமையில் இரண்டு ஆண்டுகள் நிர்வாகம் மிகவும் செவ்வனே நடந்தது. திடீரென அவர் மறைவுக்குப் பிறகு அவரது வழியில் கிஞ்சித்தும் அடி பிறளாது நடக்கும் ஒருநல்ல நிர்வாகத்திறன் பெற்ற ஒருவர், நல்ல பல கலைகள் கற்றறிந்த கலைஞர், மிகச்சிறந்த நிர்வாகி, எதையும் 
ஆராய்ந்து, அறிந்து செயல்படுத்துவதில் சாணக்கியர், அவரது நிர்வாகத்தில் அந்த மாநிலம் நல்ல பற்பல திட்டங்களால், மிக மிக முன்னேறியது. ஆனால் அவரது துரதிர்ஷ்டமோ அல்லது விதியின் விளையாட்டோ அவரது கட்சியில், அவரது கட்சியை வைத்து, தனது 
வாழ்வை வளப்படுத்திக்கொண்ட நடிகர் ஒருவர் 
அந்தக்கட்சியை உடைத்து, தனியாக கட்சி ஒன்று 
ஆரம்பித்து, ஏறத்தாள 13 ஆண்டுகள், அம்மாநிலத்தை ஆண்டு, முன்னேற்றத் திட்டங்கள் என்று எதையுமே செய்யாமல், மறைந்து போனார். அவருக்குப்பிறகு 
அவரது கட்சியின் கொள்கை பரப்பு பணியை ஏற்று நடத்திவந்த அவரது " ஆசைக்கும்-அன்புக்கும் " உரிய ஒரு நடிகை அந்தக் கட்சியை கைப்பற்றி ஆளுகிறேன் என்று சொல்லி, இதுவரை யாருமே செய்திடாத அளவு 
லஞ்ச,லாவண்யங்கள் மூலமாக, பல கோடி கோடிகள் சொத்து சேர்த்து அதனால் தண்டனையும் பெற்று பின் அந்த தண்டனையினின்று நீதிமன்றத்தை "கவனிக்க" 
வேண்டிய விதத்தில் " கவனித்து " விடுதலை பெற்று மீண்டும் கொள்ளை அடிக்க பதவியில் அமர்ந்தார்.

இதற்கு மத்தியில் அவரது பதவிக்காலம் முடிந்து 
மீண்டும் தேர்தல் வந்தபோது, தேர்தலை நடத்தும் கமிஷனை தனது கட்டுப்பாடிற்குள் வைத்துக்கொண்டு அதனதன் உயர் அதிகாரிகளுக்கு லஞ்சப்பணத்தை 
அள்ளி வீசி அநியாய,அக்கிரம வழிகளில் மீண்டும் ஆட்சியில் அமர்ந்தார். 

அரசன் அன்று கொல்வான்,
தெய்வம் நின்று கொல்லும் !!

என்ற முது மொழிக்கு இணங்க, இந்த நடிகை/ஆட்சித்தலைமை பெண்ணுக்கு ஒருநாள் இரவு திடீரென்று உடல்நிலை படுமோசமாகி 
படுத்தபடுக்கை ஆனார். எதனால் இந்த நிலை என்று பார்த்தால், முறைதவறி வெற்றி அடைந்தவர் என்ற ஒரே காரணத்தைத் தவிர வேறு எதுவும் சொல்ல இயலாது. இப்போது அவர் உடல்நிலை என்ன ? அவரை யாரும் சென்று சந்திக்க முடியாதபடி, இந்த நடிகை 
ஒரு தோழியை தன்வசம் வைத்திருந்தார். இப்போது இந்த தோழிதான் கிட்டத்தட்ட ஆளும் அதிகாரத்தைத் தனது கைவசம் வைத்துள்ளதாக கேள்வி. 

இந்த நிலையில் அங்கே நான்கு இடங்களுக்கு இடைத்தேர்தல் வந்தது.அதிலும் முறைகேடு செய்து வெற்றி பெற்றது அந்த நடிகையின் கட்சி. ஏற்கனவே செய்த முறைகேடு வெற்றிக்கு கிடைத்த பரிசு, இப்போது உடல்நிலை 
பாதிக்கப்பட்டு படுத்த படுக்கை. 

அப்படி என்றால், இப்போது பெற்றுள்ள அதே முறைகேடு வெற்றிக்கு என்ன பரிசு ? 

என்று மக்கள் கேட்டார்கள். அதற்கு 
ஆண்டவன்தான் பரிசு அளிப்பான் அதுவும் வெகு 
விரைவில் !! அது யாருமே எதிர்பாராத வகையில் சோகம் மிக நிறைந்ததாகவே இருக்கும் என்று அந்த மாநில ஜோதிட வல்லுனர்கள் எதிர்ப்பார்த்து காத்திருந்தார்கள் என்பது நடைபெற்ற வரலாறு.

புயலுக்குப் பிறகு அமைதி !!
அநியாய வெற்றிக்குப் பிறகு ?
இறைவன் பதில் தருவான் -- விரைவில் !!


நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R. பாலு.


ஆடிய ஆட்டம் என்ன ? தேடிய செல்வம் என்ன ? திரண்டதோர் சுற்றம் என்ன ?




ஆடிய ஆட்டம் என்ன ?
தேடிய செல்வம் என்ன ?
திரண்டதோர் சுற்றம் என்ன ?


அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

கடந்த ஒருவார காலமாக, என்னால் இங்கே 
எனது வழக்கமான எழுத்துப்பணியில் என்னை 
ஈடுபடுத்திக்கொள்ள முடியாமல் போனதற்கு 
பல்வேறு சூழல்கள்,காரணங்கள், அவைகளுக்காக,நேயர்களாகிய உங்கள் அனைவரிடமும் நான் எனது வருத்தத்தை இங்கே பதிவு செய்திடக் கடமைப்பட்டு உள்ளேன்.

ஒரு வழியாக, எனக்குள்ளே ஒரு தீராத பிரச்சினை.நேற்று இரவு அது ஒரு முடிவுக்கு வந்தது. நெஞ்சில் இருந்த பெரிய பாரம் இறக்கி வைக்கப்பட்டு உள்ளது என்றே நான் நினைக்கிறேன். எனக்கு மிகவும் வேண்டிய 
ஒருவர் கடந்தசுமார்இரண்டரைமாதங்களுக்கும் 
மேலாக, கோவை மருத்துவமனையில் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு நோயின் கொடிய கரங்களில் சிக்கி, சின்னா பின்னமாகி சீரழிந்த நிலையில், நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில் மறைந்தார். எனக்கு அந்த மறைவு மனதளவில், பெரிய பாதிப்பை ஏற்படுத்தி 
விட்டது. நீதிக்கும் நேர்மைக்கும் புறம்பாக அவர் கோவையில் எண்ணிலடங்கா கோடிகள் அளவுக்கு திரவியங்கள் சேர்த்து வைத்து இன்று 

"போய் விட்டார் புண்ணியலோகத்துக்கு" 

என்ற மனோகரா திரைப்படத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் எழுதியிருந்த வசனத்தின்படி காலமாகிவிட்டார். 

தமிழ் மூதாட்டி என்று அழைக்கப்பட்ட அவ்வையார் எழுதிய பாடல்தான் இன்றைய தினம் எனது நினைவின்பால் வருகின்றது 
அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

பாடுபட்டுத் தேடி பணத்தைப் புதைத்து வைத்த 
கேடுகெட்ட மானிடர்காள் !! கேளுங்கள் !!
கூடு விட்டாங்காவிதான் போனபின்-யாரோ 
அனுபவிப்பார் பாவிகாள் அப்பணத்தை !!

இதுதான் உண்மை. இதுதான் யதார்த்தம்.
காலம் ஒவ்வொரு மனிதனுக்கும், ஒருவரின் 
இறப்பின் மூலமாக, பல்வேறு அனுபவங்களை 
கற்றுத்தருகிறது என்ற மூதறிஞரின் வரிகளுக்கு 
இணங்க,அந்தஅம்மையாரதுமறைவுஎனக்குள்  மாற்றமுடியாத,மறைக்கஇயலாதசெய்தியை 
விட்டுச் சென்றிருக்கிறது எனது அன்புத்தமிழ் 
நெஞ்சங்களே.

உலகையே கட்டி ஆண்டமாவீரன்நெப்போலியன் 
தனது மறைவுக்குப் பிறகு தனது சமாதியில் தனது இரண்டு கைகளையும் வெளியே தெரியுமாறு வைத்திட வேண்டும் என்று உயில் எழுதி வைத்து மறைந்தான் இது வரலாறு. 

எதற்காக என்று கேட்டால், தான் உலகையே 
கட்டி ஆண்டு சொத்துக்களும் சுகங்களும் கடல் வற்றினாலும் தன்னிடம் உள்ள திரவியங்கள் வற்றாத அளவுக்கு செல்வங்கள் சேர்த்து வைத்திருந்தாலும், தான் இந்த உலகைவிட்டு 
மறைந்துவிடும் பொழுது எதையுமே எனது கைகளில் எடுத்துச் செல்லவில்லை என்பதை உணர்த்திடும் விதமாக மாவீரன் நெப்போலியன் எழுதிவைத்துச் சென்றான்.

அந்த ஒரு நிகழ்வுதான் இப்போது எனது உள்ளத்தில் உணர்ச்சியில் எதிரொலித்துக் கொண்டு இருக்கிறது.

நன்றி !! வணக்கம் !!