வியாழன், 28 ஜனவரி, 2016

ஊதப்போயி உதட்டைக் கவ்விய கதை !! ( திரு.பழ.கருப்பையா அவர்கள் நீக்கம் சம்பந்தப்பட்டது )






முற்போக்கு சிந்தனையாளர் 

திரு பழ.கருப்பையா அவர்கள் ஆளும்கட்சியை 

விமர்சனம் செய்ததற்கு கிடைத்த பரிசு !!



எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

அல்லாஹ் ஒருவனே துணை நமக்கு !!


அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

அனைவருக்கும் வணக்கம்.

முதலில் கதை. பிறகு அரசியல் விளக்கம்.

அது மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய ஒரு 
சின்னஞ்சிறு கிராமம். அங்கே ஆடு மேய்ப்பவன் 
பெயர் அழகப்பன். வாலிப வயதைத்தாண்டிய 
பருவம். குறும்புத்தனம் அதிகம் கொண்டவன் 
என்பதை அறிவித்திடும் அரும்புமீசை கொண்ட 
வாலிபன். மார்கழிமாதம் ஒரு விடிந்தும் விடியாத அதிகாலைப்பொழுது. காலையிலேயே கிடையிலிருந்து ஆட்டுப் பரிவாரங்களுடன் மேய்ச்சலுக்குகிளம்பிச் சென்றுகொண்டிருந்தபோது சாலையின் நடுவில் ஊதும் பொருள் விசில் போல ஒன்று இருக்க அந்த 
வெளிச்சத்தில் அதனை விசில் என்று நம்பி அதைக்கையில் எடுத்து வாயில் வைத்து ஊதிட முற்படும் போதுதான் அந்த நிகழ்வு ஏற்பட்டது. என்னவென்றால் அது விசில் அல்ல. விசில் போன்ற தோற்றம்கொண்ட ஒருஊர்ந்துசெல்லும் ஒரு சிறிய பிராணி. அது என்ன செய்தது என்றால் அது இவனது உதட்டைக் கவ்விக்கொள்ள  இவன் வலியால் அலறித்துடித்து போவோர் 
வருவோரை தனது துயர் நீக்கிட அழைத்தானாம்.
இதுதான் கதை அன்பர்களே.

இப்போது அரசியல் விளக்கம் :-

கிட்ட்டத்தட்ட இந்த நிலைதான் அன்பர்களே நேற்று தமிழகத்தில் நிகழ்ந்தது ஆளும்கட்சி சட்டமன்ற உறுப்பினர் (சென்னை.துறைமுகம் தொகுதி)திரு. பழ.கருப்பையா அவர்களை 
கழகத்தலைமை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து மட்டுமல்ல சகல பொறுப்புகளில் இருந்தும் அவர் கழட்டி விடப்பட்டார் என்ற அறிவிப்பு நேற்றுமுன்தினம் இரவு சுமார் பத்துமணி அளவில் அம்மையார் ஜெயலலிதா வெளியிட்டதால்,நேற்று அவருக்கு (திரு.பழ.) வேறு வழியின்றி பத்திரிக்கையாளர் 
சந்திப்பின்போது ஆட்சியின் அவலத்தை, அரசாங்க உயர்நிலையில் உள்ள அதிகார வர்க்கமும் ஆளும் பொறுப்பில் உள்ள அனைத்து மந்திரிகளையும் சும்மா கிழிகிழிஎன்று கிழித்து
கடாசு கடாசு என்று கடாசி மனுஷன் திட்டித் தீர்த்து விட்டார்.

அம்மையார் அவர்களே !!உங்களுக்குத் தேவையா இது ? ஏதோ அவர்தனது மனதில் பட்ட/தோன்றிய கருத்துக்களை அவர் 
துக்ளக் பத்திரிக்கை ஆண்டு விழாவிலும் சரி அதனை அடுத்து பல சந்தர்ப்பங்களிலும் தனது தொகுதியில் ஆளும் அதிகாரவர்கத்தில் உள்ள உயர் அதிகாரிகள் மந்திரிகள் இணைந்து கொண்டு எந்தெந்த வகையில் மக்கள் பணத்தைக்கொள்ளை அடிக்கின்றனர் என்ற விபரத்தைத்தானே திரு பழ.கருப்பையா அவர்கள் விவரித்துச்சொன்னார்.
உண்மையான தலைமையாக இருந்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும் ( அப்படி ஒரு தலைமை இங்கே இல்லை-அது வேறு விஷயம்) உடனே அவரைத் தொடர்புகொண்டு/அழைத்து என்ன விபரம்? தாங்கள் இதை என்னிடம் நேரில் சொல்லியிருக்கலாம் அல்லவா 
( அப்படிப்பட்ட ஒரு நிலைமை மட்டும் இங்கே இருந்திருந்தால் அவர் ஏன் வீதியில் நின்று பேசிடப்போகிறார்-ங்கொப்புரானே அதுதான் இங்க கிடையவே கிடையாதே)
என்று அவருடன் பேசி விபரங்களை வாங்கி அவரது துறைமுகம் தொகுதியில் எங்கே,என்னென்ன வகையில் 
ஆக்கிரமிப்புக்கள் நடைபெறுகின்றன என விசாரணை செய்து தவறுக்கு உரியவர்களை அழைத்து எச்சரிக்கை/நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். கருப்பையா அவர்களின் மன வாட்டத்தைப் போக்கி இருக்க வேண்டும். செய்தார்களா ?அதனை எல்லாம் விட்டுவிட்டு ஜெயலலிதா நடந்துகொண்ட விதம் இங்கே 
எப்படி இருந்தது என்று சொன்னால் :-

புருஷன் அடிச்சதுலே தப்பு இல்லை !!
நாத்தனார்காரி சிரிச்சதுதான் தப்பு !! 

என்று அல்லவா இருந்திருக்கிறது. 
இந்தக்கதையில் வந்த அழகப்பன்தான் தலைமை ஜெயலலிதா.
வாயில் வைத்து ஊதிய விசில் திரு பழ.கருப்பையா.


நன்றி !! வணக்கம் !!


அன்புடன். திருமலை.இரா.பாலு.

வெள்ளி, 22 ஜனவரி, 2016

ஒழியட்டும் விளம்பர மோகம் !! ( ஆனந்தவிகடன் 27-01-2016 இதழில் வெளிவந்ததன் மறுபதிப்பு)





பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!

அஸ்ஸலாமு அலேக்கும் !!


அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!

அனைவருக்கும் வணக்கம். 

நெஞ்சத்துணிவு,யாருக்கும்அஞ்சாமை, அரசாங்கம்செய்திடும்குற்றத்தை,அநியாயத்தை, 
அக்கிரமங்களை, தனது பத்திரிக்கையின் 
வாயிலாக, அதை  தலையங்கமாக வெளியிடும் ஆற்றல்,வல்லமை கொண்ட தமிழகத்தில் இருந்து வெளிவரும் ஒரே ஒரு 
வார இதழ்தான் " ஆனந்த விகடன் " என்பது அரசியல் ஆர்வலர்களும், ஆன்றோர் பெருமக்களும், சான்றோர்பெருமக்களும், அறிஞர்பெருமக்களும் அறிந்திட்ட 
ஒன்றே.

நேற்று முன்தினம் வெளிவந்த அந்தப் பத்திரிக்கையில் வெளிவந்த தலையங்கத்தை நேயர்களாகிய உங்கள் அனைவரின் கவனத்திற்கும் கொண்டுவரவேண்டும் 
என்ற உயரிய நோக்கத்தில் அந்தத் தலையங்கத்தை இங்கே நான் மறு பதிப்பு செய்வதில் மிக்க மனமகிழ்ச்சி அடைகிறேன்.

******************************************************
                                 " ஆனந்த விகடன் "******************************************************
நாள்: 27-01-2016

                         " தலையங்கம் மறுபதிப்பு " 

                  " ஒழியட்டும் விளம்பர மோகம் !! "


ஒரு கட்சித்தலைவர், தன் கட்சியின் தலைமைக் கழகத்துக்கு வருவது அன்றாட நடவடிக்கை. ஒரு மாநில முதலமைச்சர் தலைமைச் செயலகத்துக்குவருவதுசராசரிநிகழ்வு.மக்களின்தலைவர் ஒருவர், மக்களைச் சந்திப்பது வழக்கமான செயல்பாடு.ஆனால், தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவைப் பொறுத்த 
வரைஇவைஅனைத்தும்அசாதாரணசாகசங்கள்.அதனால்தான் அவர் ஒவ்வொரு சாகசத்தை நிகழத்தும்போதும் அவரது கட்சித் தொண்டர்கள் கொண்டாடித் தீர்க்கிறார்கள். ஆனால் மக்களோ,
திண்டாடி நிற்கிறார்கள்.

சென்னை போயஸ்கார்டனில் இருக்கும் ஜெயலலிதாவின் வீட்டுக்கும், ராயப்பேட்டையில் இருக்கும் அ.தி.மு.க. தலைமைக் கழகத்துக்கும் அதிகபட்சம் இரண்டு கிலோமீட்டர் தூரம்.
கடந்தவாரம் நிகழ்ச்சி ஒன்றுக்காக ஜெயலலிதா கட்சி அலுவலகம் வந்தபோது, அந்தப்பகுதியே முடக்கப்பட்டது. சாலைகள் எங்கும் பேனர்கள் கண்களை மறைத்தன. சாலையின் இரண்டு ஓரங்களிலும் நடுவிலும் சதுரம், செவ்வகம், வட்டம்...என விதவிதமான வடிவங்களில் 
பேனர்கள் வைத்து பொதுமக்களைப் பதற வைத்தனர். வாகனஓட்டிகள் நிலைகுலைந்தனர்.

கட்அவுட்டுகள் வைத்து மக்களித் துன்புறுத்துவது அ.தி.மு.க.வுக்கு ஒன்றும் புதிது அல்ல.  1991-96 ம் ஆண்டு ஆட்சியின் நினைவுகூறத்தக்கப் 
" பெருமிதங்களில்" அதுவும் ஒன்று கட்அவுட் கலாச்சாரம்.சமீபத்திய மழை வெள்ளப் பாதிப்புகளில் பலரும் கொண்டாட்டங்களை 
ஒதுக்கி, ஆரவாரங்களைத் தவிர்த்த நிலையில், பொதுக்குழுவுக்காக கூடிய அ.தி.மு.க.வினர் சென்னையின் ஒரு பகுதியையே திருவிழாக் 
கோலமாகமாற்றினார்கள்.சாலைகள், நடைபாதைகளை ஆக்கிரமித்து வாகன ஓட்டிகளையும் பாதசாரிகளையும் நடுங்க வைத்தனர். பேனர்களை அகற்றிய பொதுநல ஆர்வலர்களைத் தாக்கி, பொய் வழக்குகள் பதிவு 
செய்து சிறையில் அடைத்தார்கள்.

இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குச் சென்றபோது, பெரும்பாலான பேனர்களுக்கு விண்ணப்பித்த அதே நாளில் அனுமதி வழங்கப்பட்டு இருப்பது 
தெரியவந்தது.  அப்படியானால் மற்ற அம்சங்களிலும் அரசு இதே வேகத்தில் செயல்படுகிறதா ? எனக்கேட்ட நீதிமன்றம், 2015-ம் ஆண்டில் எத்தனை பேனர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது?....விண்ணப்பித்த தேதிக்கும் 
அனுமதி வழங்கப்பட்ட தேதிக்கும் இடைப்பட்ட நாட்கள் எத்தனை ? என்பதை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு கேட்டது. ஆனாலும் 
கட்அவுட்டுகளும் பேனர்களும் மட்டும் இன்னும் ஓயவே இல்லை !

தங்களின் புகழ் பரப்புவதாக எண்ணிக்கொண்டு ஆளும் அதிகாரத்தில் உள்ளோர் மேற்கொள்ளும் இந்த பேனர் விளம்பர மோகம், மக்களிடம் 
அசெளகரியத்தையும்,அச்சத்தையும் ஒருசேர விதைப்பதை,உரியவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இல்லையெனில்,நீங்கள் விதைப்பதை நீங்களே அறுவடை செய்ய வேண்டியிருக்கும் !

*****************************************************

என்ன நேயர்களே !! 

படித்துப்பார்த்தீர்களா துணிச்சல் மிகுந்த 
ஆனந்தவிகடன் பத்திரிக்கையின் தலையங்கத்தை ?

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். திருமலை.இரா. பாலு. 

திங்கள், 18 ஜனவரி, 2016

செஞ்சது எல்லாமே ஜோசியர் சொன்னபடிதான் !! ( செல்வி.ஜெயலலிதாவின் செய்கைகள் )






பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!

அஸ்ஸலாமு அலேக்கும் !!

அல்லாஹூ-அக்பர்-அல்லாஹ் !!


     செஞ்சது எல்லாமே ஜோசியர் 

               சொன்னபடிதான் !!

அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!

வணக்கம். தமிழ்நாட்டை பிடித்த ஒரு பீடையின் 
அலங்கோலம் மட்டுமே நிறைந்த ஒரு ஆட்சியைத்தான் நாம் கடந்த 55 மாதங்களுக்கும் மேலாக நாம் பார்த்துவருகின்றோம். 

எதிர்வரும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் அடுத்து வருகின்ற ஐந்து ஆண்டுகளுக்கு யார் கையில் மக்கள் இங்கே ஆட்சியை ஒப்படைக்கப் போகிறார்கள் என்பதனை தீர்மானித்திடும் சட்டமன்றத்தேர்தல்வெகுவிரைவில்வரஉள்ளது.

எப்பொழுதுமே எல்லோரையும்விட தான் தான்,
தான் மட்டும்தான் மிகப்பெரிய கெட்டிக்காரி என்ற எண்ணம் செல்வி.ஜெயாவுக்கு அந்தக் காலம் முதல் உண்டு என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.

அந்தவகையில் நேற்று இரவு அம்மையார் அவர்கள் வரும் தேர்தலில் போட்டியிடவிரும்பும் தனது கட்சிக்காரர்கள், தங்களது விருப்ப மனுவை வரும் புதன்கிழமைமுதல் சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கை இங்கே 
வெளியிட்டு உள்ளார்கள். 

என்ன காரணம் என்று கேட்டால், எல்லாமே ஜோசியர் சொன்னபடிதான் அதுதான் இங்கே கட்டுரைக்கு தலைப்பாகத் தரப்பட்டு 
உள்ளது.

காரணம் 1.  நேற்று 18ம் தேதி. கூட்டு எண்.9 இந்த எண்செல்வி.ஜெயாவுக்கு மிகவும் ராசியான ஒன்று என்பது கடந்த பல சந்தர்பங்களில் நிரூபிக்கப்பட்டு அவரும் அதை நம்பியதால் அந்ததேதியில் இந்த அறிவிக்கை இங்கே வெளியிடப்பட்டு உள்ளது.

காரணம்.2:-  நேற்று மத்தியானம் மணி 03.17க்கு மேல் நவமி முடிந்து தசமி திதி ஆரம்பம். இந்தத் திதியில் எந்த செயலை செய்திட ஆரம்பித்தாலும் அது வெற்றியை தரும் என்பது ஜோதிட உலகம் அறிந்த ஒன்று.

காரணம் 3 :-  நேற்றைய நட்சத்திரம் பரணி அது இரவு 11.58 வரை இருந்தது. இவர் அறிவிப்பு வெளியிட்டது இரவு 07.00 மணிக்கு மேல். பரணி நட்சத்திரம் என்பது தரணி ( பூமி,நாட்டை) ஆள்வார் என்பதும் ஜோதிடக் கணக்கு.

ஆக இத்தனை காரனங்களால்தான் அம்மையார் 
தனது தேர்தல் களப்பணிகளை நேற்றையதினம் 
(18-01-2016) அன்று துவக்கியுள்ளார் என்பதனை 
நேயர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

இந்த இடத்தில் 1964 ம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்கள் எழுதிய " பூம்புகார் " திரைப்படத்தின்பாடலின் வரிகளை என்னால் குறிப்பிடாமல் இருக்கவே முடியாது. 

அந்த வரிகள் இதுதான்:-

இவன் போட்ட கணக்குஒன்று !!
அவள் போட்ட கணக்கு ஒன்று !!
இரண்டுமே தவறானது !!
யார் போட்ட புதிருக்கோ இருவரும் !!
விடையாகி நின்றதே முடிவானது !!

நன்றி !!. வணக்கம் !!.

அன்புடன். திருமலை..இரா.பாலு.

வெள்ளி, 8 ஜனவரி, 2016

தண்ணீர் பாம்பும் !! நல்ல பாம்பும் !! ஒரு ஆராய்ச்சிக்கட்டுரை !!







பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!

அஸ்ஸலாமு அலேக்கும் !!

அல்லாஹூ-அக்பர்-அல்லாஹ் !!

எல்லாப் புகழும் இறைவனுக்கே !!

அல்லாஹ் ஒருவனே துணை நமக்கு !!


உலகத் தமிழர்கள் அனைவருக்கும் எனது 
பணிவான வணக்கங்கள்.

இன்றையதினம் சற்று வித்தியாசமான 
தலைப்பு ஒன்றினைத் தேர்ந்தெடுத்து 
அதில் எனது மனதினுள் நிறைந்துள்ள 
கருத்துக்களை இந்தக்கட்டுரையின் மூலம் 
மக்களை சென்றடையச் செய்த எல்லாம்வல்ல 
இறைவனுக்கு மீண்டும் எனது நன்றியைக் 
காணிக்கையாக்குகிறேன்.

நிற்க. பொதுவாக, நாமெல்லாம் நகரவாசிகள் என்று ஆகி விட்டோம். அனால், இப்போதும் கிராமங்களில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் குளிப்பதற்கு நம்மைப்போல குழாயைத் திறந்து வாளியில் நீர் பிடித்து பிளாஸ்டிக் கப்பில் மொண்டு அவர்கள் குளிப்பது இல்லை. அதிகாலையில் எழுந்து ஒரு வேப்பங்குச்சியில் பற்களைத் துலக்கி சுத்தம் செய்தபின்பு அந்தந்த கிராமங்களில் ஓடுகின்ற குளிர்ந்த நீரினுள் மூழ்கி உடலின் வெப்பம் தணியகுளித்து நீராடுதல் அவர்களது அன்றாட வழக்கம்.
அப்போது ஆற்று நீரில் வசிக்கும் தண்ணீர் பாம்புகள் அவர்களது கைகளிலும் கால்களிலும் உரசிக்கொண்டுசெல்வது என்பது வாடிக்கை. இதைப்பார்த்து அந்த ஊர் மக்களும் பயம் கொள்வது என்பது கிடையாது.
ஏன் என்றால், அந்தப் பாம்புகளிடம் கொஞ்சம்கூட விஷத்தன்மை என்பது அறவே கிடையாது என்பதால்.
ஆனால் மிகக் கொடிய நாகப்பாம்பு என்று சொல்லப்படும் நல்ல பாம்பு இருக்கிறதே, அப்பப்பா, மனிதனின் சத்தம் வெகு தொலைவினில் கேட்டாலே போதும் உடனே 
அருகில்இருக்கின்ற ஏதாவது ஒருசந்து, பொந்துகளுக்குள்ளாக  விரைவாகஊர்ந்து சென்று உடனடியாகத் தன்னை மறைத்துக் கொள்ளும் சுபாவம் கொண்டது. ஏன் என்றால் தன்னை, இந்த மனிதர்கள் பார்த்துவிட்டால், அந்த இடத்திலேயே அடித்துக் கொன்று 
விடுவார்கள் என்பது அந்த நல்ல பாம்பிற்குத் தெரியும்.

இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் சங்ககால இலக்கியத்தில் ஒரு பாடல் உண்டு. அது என்னவென்றால் :-


நஞ்சுடைமை தானறிந்து நாகம் கரந்துறையும் !!
அஞ்சாத் தனிவழியே புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு !!
நெஞ்சில்கரவுடையார்தம்மைக்கரப்பர்- கரவார் !!
கரவிலா நெஞ்சத்தவர் !!

பொருள் :- தம்மிடம் கொடிய ஆலகால விஷம் என்ற ஒன்று இருப்பதாலேயே, நாகப்பாம்பு ஒளிந்து மறைந்து வாழ்ந்திடும். ஆனால் தண்ணீர்ப்பாம்போ தம்மிடம் எந்த விஷமும் இல்லாத காரணத்தால், மக்களுடன் மக்களாக 
நீர் நிலைகளில் வாழ்ந்து வருகிறது. 

அதுபோலவே தங்களிடம் கெட்டஎண்ணங்கள், அடுத்தவர்கள் பொருள் மீது ஆசைப்படுபவர்கள், பிறர் சொத்துக்களை அபகரித்து அதன்மூலம் ஆனந்தம் கொள்பவர்கள், லஞ்ச லாவண்யத்தின் 
மூலமாககோடிகோடியாகமக்களின்வரிப்பணத்தைக்கொள்ளையடித்தவர்கள், மக்களை நேரடியாகச் சந்திக்க மாட்டார்கள்-சந்திக்கவும் முடியாது அவர்களால். ஆனால் 
மனதில் எந்த அளவுக்கும் கெட்ட எண்ணம் இல்லாதவர்கள்,பொதுநலத் தொண்டில் அக்கறையும் ஆர்வமும் கொண்டவர்கள் 
மக்களோடு மக்களாக அவர்கள் ஒன்று கலந்து அவர்களது நலத்திற்கும், வளத்திற்கும் அக்கறையோடும் ஆர்வத்தோடும் 
நன்மை பயக்கும் திட்டங்களை செயல்படுத்தும் எண்ணம் கொண்டவர்கள், எப்போதும் மக்களோடு மட்டுமே ஒன்றுகலந்து 
வாழ்ந்திடுவார்கள். 

அன்பர்களே !!

நான் மேலே குறிப்பிட்ட அந்தப் பாடலையும் அதற்கு உண்டான பொருள் விளக்கத்தையும், பொதுமக்களாகிய நீங்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கும் மக்களின் 
அன்புத் தொண்டன் தளபதி திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் அவரது " நமக்கு-நாமே " நடைபயணத்தின் மூலமாக அவர் மக்களை நேரிடையாகச்சந்திப்பதற்கும்,"சென்னையில் கொட்டித் தீர்த்த மழைவெள்ளத்தின்போது ''
மக்கள் அவதியுற்றபோதிலும்கூட மக்களைச் சந்திக்காத முதல்வர் ஜெயலலிதாவின் எதேச்சதிகாரம் மட்டுமே நிறைந்த நடவடிக்கையையும்ஒப்பு வைத்து படித்துப் பார்த்தீர்கள் என்று சொன்னால் அது உங்களது விருப்பம். 

அதற்கும் கட்டுரை ஆசிரியருக்கும் எந்தவித தொடர்பும், முகாந்திரமும் இல்லை என்பதைநான் இங்கே விருப்பத்துடன் 
பதிவு செய்திடக் கடமைப்பட்டுள்ளேன்.

நன்றி !! வணக்கம் !!                                                              

அன்புடன். திருமலை.இரா.பாலு.