புதன், 30 செப்டம்பர், 2015

மகளிர் சுய உதவிக்குழுவிற்கு கைபேசி இலவசமாக வழங்கிட முடிவு செய்துள்ள அரசின் தீர்மானம் தரப்போகும் பலன் என்பது பூஜ்யமே !!







பிஸ்மில்லா-ஹிர்ரஹ்மானிர்-ரஹீம் !!


அஸ்ஸலாமு அலேக்கும் !!


அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!


நடந்துமுடிந்த தமிழ்நாடு சட்டமன்ற(மேஜையை 

தட்டுவதும் கைதட்டுவதும் முதல்வர் பேச்சுக்கு 

துதிபாடுவதும் மட்டுமே நிறைந்த 

அ.தி.மு.க.வின் அரசியல் பொதுக்குழுக்கூட்டம் ) 

நிறைவு தினத்தின்போது வழக்கம் போல் 

அம்மையார் 110 விதியின் கீழ் ( இந்த எண்ணிற்கு 

அடுத்த எண் திருப்பதி வெங்கடாசலபதி எண் 111 

ஆகும்)படித்த ஒரு சிறப்பு சலுகைதான் 

இந்தக்கட்டுரையின் தலைப்பாக இங்கே 

கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்திற்கு 

சுமார் 15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தப்பணம் எங்கே யார் யார் கைக்குப் 

போகப்போகிறது என்பது வேறு விஷயம். 

ஆனால் இது தேர்தலுக்காக ஏமாந்த மக்கள் 

ஓட்டுக்களை திருட,கொள்ளை அடிக்க 

ஆளும்கட்சி போடுகின்ற திட்டமாகவே மக்கள் 

மத்தியில் பேசப்படுகிறது.  முதல்வர் என்னதான் 

வானத்தை வளைத்து வில்லாக ஆக்கினாலும், 

மணலைக் கயிறாக திரித்தாலும்மக்கள் 

இந்தமுறை அண்ணா தி.மு.க.விற்கு சத்தியமாக 

வாக்களிக்க மாட்டார்கள் என்பதுதான் 

என்னைப்போன்ற அரசியல் ஆர்வலர்கள் 

போட்டு வைத்துள்ள கணக்கு.


நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கும்.


நன்றி.வணக்கம்.

அன்புடன். திருமலை.இரா. பாலு.