சிறை செல்லும் சீமாட்டி பாகம் 4.

ஜெயலலிதாவின் மேல் முறையீட்டுக்காக அத்தனை ஆவணங்களும் தயார் செய்யப்பட்டு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.   உச்சநீதிமன்றம் இப்படி கெடுபிடிகளை விதிக்கவில்லை என்றால், இவ்வளவு வேகத்தில் இந்த ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்குமா என்ன ?   இவ்வளவு விரைவாக 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்கங்களை உடைய இத்தனை ஆவணங்களையும் தாக்கல் செய்ததற்கான காரணம், இந்த ஆவணங்களை தாக்கல் செய்து, கர்நாடக உயர்நீதிமன்றப் பதிவாளரிடம் இருந்து, தடையில்லா சான்று பெற்று, அதை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
10845958_1445996815656464_7980466236836171082_n (1)
ஜெயலலிதா வழக்கு ஆவணங்கள், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இறக்கப்படுகின்றன
இப்படி ஒரு கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை என்றால், ஜெராக்ஸ் மிஷின் ரிப்பேர், பைண்டிங் செய்யும் நபரின் கையில் நகச்சுத்தி, ஆவணங்களை தைக்க நூல் கிடைக்கவில்லை, இரண்டு பக்கங்களை காணவில்லை, இன்று அஷ்டமி, நாளைக்கு கவுதமி என்று வண்டி வண்டியாக காரணங்களை அடுக்கி வழக்கை தாமதப்படுத்தியிருப்பார்கள்.
வழக்கம்போலவே, அதிமுக அடிமைகள், இந்த முறையும் டீல் முடிந்துவிட்டது.  அம்மா விடுதலையாகப்போகிறார் என்று பரபரப்பாக வதந்திகளை கிளப்பி விட்டபடி இருக்கிறார்கள். இதே போலத்தான் செப்டம்பர் 27க்கு முன்பாகவும், கூசாமல் பல வதந்திகளை பரப்பி விட்டபடி இருந்தார்கள்.
அவை வதந்திகளா இல்லையா என்பது விரைவில் தெரிந்து விடும்.  நாம் நமது அடுத்த பாகத்வை வதந்திகளா இல்லையா என்பது விரைவில் தெரிந்து விடும்.  நாம் நமது அடுத்த பாகத்துக்கு வருவோம்.
ஜெயலலிதா, தன் பினாமி பெயர்களில் தமிழகத்தில் மட்டும்தான் தொழில் தொடங்கியிருக்கிறார் என்றால் இல்லை.    தெலுங்கானா மாநிலத்திலும், தொடங்கியிருக்கிறார்.    தெலுங்கானாவில் உள்ள நிறுவனம் இவர் தொடங்கியது அல்ல.   ஏற்கனவே ஒருவர் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கும் நிறுவனத்தை இவர்கள் கைப்பற்றி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.  கிட்டத்தட்ட ஃபீனிக்ஸ் மால் சத்யம் தியேட்டர் வாங்கிய கதைதான்.
article of association_Page_1
article of association_Page_7
ஒரு லட்ச ரூபாய் முதலீட்டில் சுதபத்துலு பாஸ்கர ராவ், அடப்பல வீர வெங்கட பாஸ்கர ராவ், அடப்பா நரசிம்மராவ் மற்றும் சுதபத்துலு வெங்கட ராமராவ் ஆகியோர் இந்த நிறுவனத்தை பிப்ரவரி 1995ல் தொடங்கி இந்த நிறுவனத்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.    ஆனால், எந்த காலகட்டத்தில் இந்த நிறுவனம் கைமாறியது என்பது தெரியவில்லை. ஒரு கட்டத்தில் ராவணன் இயக்குநராக இருக்கிறார்.   பிறகு தமிழ்மணி என்பவர் இயக்குநராக இருக்கிறார்.   மன்னார்குடி மாபியா வெளியேற்றப்பட்டதும், மிடாஸ் மாமா சோ இயக்குநராக சில காலம் இருக்கிறார். அதே காலகட்டத்திலேயே, பெருந்தொழில் அதிபர் பூங்குன்றனும் இயக்குநராகிறார்.   இந்த தமிழ்மணி, மன்னார்குடி மாபியா வெளியேற்றப்பட்டபோது, தொடரப்பட்ட நில அபகரிப்பு வழக்குகளில் குலோத்துங்கனோடு சேர்ந்து கைதானார் என்பது குறிப்பிடத்தக்கது. இணைப்பு
diu
diur
இறுதியாக அனைவரும் வெளியேற்றப்பட்ட பிறகு, இப்போது போயஸ் தோட்டத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கார்த்திகேயன் கலியபெருமாள் மற்றும் டாக்டர் வி.எஸ்.சிவக்குமார் ஆகியோர் இயக்குநராகியிருக்கிறார்கள்.
இந்த நிறுவனம் இன்னமும் தெலுங்கானாவில்தான் இயங்கி வருகிறது.   வெறும் ஒரு லட்ச ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், இன்று 9 கோடி ரூபாய் முதலீட்டோடு வளர்ந்து நிற்கிறது. 31 மார்ச் 2011 அன்று தாக்கல் செய்த ஆண்டு கணக்கின்படி, இந்நிறுவனத்துக்கு பத்து கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்த நிறுவனத்தின் பெயரில் எங்கெங்கெல்லாம் சொத்து வாங்கிப் போட்டிருக்கிறார்கள் என்ற விபரங்கள் இல்லை.
balance sheet_Page_01
balance sheet_Page_06

ஆனால், தமிழகத்தில் இருப்பவர்கள், ஆந்திராவில் சென்று எதற்காக ரியல் எஸ்டேட் நிறுவனம் தொடங்கியுள்ளார்கள் என்பது, வருமான வரித்துறை மற்றும் இதர நிறுவனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தவேண்டிய ஒரு விவகாரம்.
அடுத்ததாக ஜெயலலிதா தொடங்கியுள்ள தொழிலை நினைத்தால் வியப்படைவீர்கள்.  விமான சேவை.  ரெயின்போ ஏர் என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த நிறுவனம், தனது நோக்கமாக குறிப்பிட்டுள்ளது, விமானங்களை வாடகைக்கு எடுக்க, சொந்தமாக வாங்க, வாடகைக்கு விட, விமான சுற்றுலா சேவை நடத்த என்று ஏகப்பட்ட ஐட்டங்களை தங்களது நோக்கமாக போட்டு உள்ளார்கள்.
இந்த நிறுவனம், 1 ஆகஸ்ட் 2009ல் தொடங்கப்பட்டுள்ளது.  தொடங்கப்பட்டபோது, இந்த நிறுவனத்தில் மூன்று பேர் பங்குதாரர்கள்.
வி.ஆர்.குலோத்துங்கன். சவுந்தரபாலன், கார்த்திகேயன் கலிபெருமாள்.  இந்த நிறுவனம் 5 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ளது.  இந்த நிறுவனம் 38-16, க்யான் அபார்ட்மென்ட்ஸ், 38, வெங்கட்ராமன் தெரு, தியாகராய நகர் சென்னை 17 என்ற முகவரியில் இயங்கி வருகிறது.
MoA_Page_01
MoA_Page_02
MoA_Page_18
MoA_Page_19
இவர்கள் எந்த இடத்தில் விமானம் விடுகிறார்கள் என்ற விபரங்கள் நம்மிடம் இல்லை.
அடுத்ததாக மன்னார்குடி கும்பல் மூலமாக ஜெயலலிதா வாங்கியிருக்கும் நிறுவனம் ஆச்சர்யத்தை அளிக்கவல்லது.  கருணாநிதி வீட்டின் அருகிலேயே, கோபாலபுரத்தில் இருந்து செயல்பட்ட வரும் LIFEMED என்ற மருத்துவமனையை வாங்கியிருக்கிறார். இந்த மருத்துவமனை, பழைய எண் 32, புதிய எண் 12, கான்ரான் ஸ்மித் சாலை, கோபாலபுரம், சென்னை 86 என்ற முகவரியில் இருந்து இயங்கி வருகிறது. 19 ஜனவரி 2011 அன்று இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது.  ஒரு கோடி ரூபாய் முதலீட்டில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.  தொடங்கியது முதல் தற்போது வரை இதன் இயக்குநர்களாக இருந்து வருபவர்கள் திருநாராயணன் அருண்குமார். ஹேமா வெங்கடேஷ் மற்றும் டாக்டர் கே.எஸ்.சிவக்குமார்.
moa_Page_2moa_Page_9


dr venkatesh
டாக்டர் வெங்கடேஷ்
ஹேமா வெங்கடேஷ்
ஹேமா வெங்கடேஷ்
dr sivakumar 2
டாக்டர் கே.எஸ்.சிவக்குமார்
இந்த ஹேமா வெங்கடேஷ் யார் தெரியுமா ? சசிகலாவின் அண்ணன் மகன் டாக்டர் வெங்கடேஷின் மனைவி.    மற்றொருவரான கே.எஸ்.சிவக்குமார், சசிகலாவின் அண்ணன் மகள் பிரபாவதியின் கணவர்.  இவரைப் பற்றி நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம்.
இது போல பல நிறுவனங்களின் இயக்குநர்களாக, மன்னார்க்குடி மாபியாவைச் சேர்ந்தவர்களே நீடித்து வருகிறார்கள்.   இந்த விபரங்கள், செப்டம்பர் முதல்வாரத்தில் கிடைக்கப்பெற்றது.    அதன் பிறகு முழுமையாக ஆராய்ச்சி செய்து, பல்வேறு ஆடிட்டர்களிடம் பேசி விபரங்களை சேகரித்த பிறகு, ஓரளவுக்கு முழுமையான வடிவம் கிடைத்தது.
இந்த விபரங்களை சவுக்கு தளத்தில் பிரத்யேகமாக வெளியிடலாம்.  ஆனால், இணையத்தை தாண்டி இது உரிய முக்கியத்துவம் பெறாது.  தமிழகத்தில் உள்ள முக்கிய எதிர்க்கட்சிகளை அணுகியபோது, ஒரு கட்சியும் ஆர்வம் காட்டவில்லை.  சரி. 2ஜி டேப்புகளை வெளியிட்டது போலவே, டெல்லிக்கு சென்று, ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களில் ஒருவரான பிரசாந்த் பூஷணை அணுகலாம் என்று செப்டம்பர் 23 அன்று டெல்லி பயணம்.    அவர் அலுவலகத்தில் அவரை சந்திக்க நேரம் பெற்று, அவரிடம் இந்த ஆவணங்கள் குறித்து விளக்கப்பட்டது.   தமிழகத்தின் அரசியல் நிலவரங்கள் குறித்து சற்றும் தெரியாத காரணத்தால், அவருக்கு இளவரசி யார், இளவரசியின் மகன்கள் யார் என்பது சுத்தமாக புரியவில்லை.  மேலும், ஜெயலலிதாவையும் இளவரசியையும் எப்படி இணைத்து குற்றச்சாட்டு சொல்ல முடியும் என்று புரியாமல் பல கேள்விகளை கேட்டார்.   பிறகு அவரது தயக்கம் வெளிப்படையாக தெரிந்தது.
சரி. இவ்வளவு தூரம் டெல்லிக்கு வந்தாயிற்று.   இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளலாமே என்று அடுத்ததாக சந்திக்க முயற்சி செய்த நபர் சுப்ரமணியன் சுவாமி.
Subramanian_Swamy
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைத்தது குறித்து இது தன்னால்தான் என்று சுப்ரமணியன் சுவாமி பெருமை பட்டுக் கொண்டாலும், திமுக இல்லாவிட்டால் இந்த வழக்கு என்றைக்கோ ஊற்றி மூடப்பட்டிருக்கும்.   1996ல் ஜெயலலிதா மீது புகார் கொடுத்ததோடு சுப்ரமணியன் சுவாமி இந்த வழக்கைப் பற்றி துளியும் கண்டுகொள்ளவில்லை.  தன்னோடு எப்போதும் கூட இருக்கும் சந்திரலேகா என்ற ஐஏஎஸ் அதிகாரியின் முகத்தில் ஆசிட் வீசப்படக் காரணமாக இருந்த நபர் என்று துளியும் கவலையும், இரக்கமும் இல்லாமல், 1998 தேர்தலில் ஜெயலலிதாவோடு கூட்டணி வைத்தது இதே சுவாமிதான்.
சுவாமியை அணுகலாம் என்று ஆலோசனை வந்ததற்கான காரணம், அதற்கு ஒரு சில நாட்கள் முன்னதாக, அத்தனை நாட்களாக இல்லாமல், சுப்ரமணியன் சுவாமிக்கும் ஜெயலலிதாவுக்கும் திடீர் மோதல் வெடித்தது.  இந்த மோதலுக்கு காரணம், சுவாமி மீது ஜெயலலிதா தொடுத்த அவதூறு வழக்கு.  அடுத்தடுத்து ஐந்து வழக்குகள் தொடுத்ததும், திடீரென்று சுவாமிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
உடனடியாக அன்று ஒரு ட்வீட் செய்தார்.  ஊட்டியைச் சேர்ந்த பிஜேபி கட்சியினர் கொடநாடு எஸ்டேட் வாங்கியது தொடர்பாக தன்னிடம் சில புதிய ஆதாரங்களை அளித்துள்ளனர் என்று ட்வீட் செய்தார்.  சரி.  சுவாமி ஜெயா மீது கோபமாக இருக்கிறார் என்று முதல் கட்டமாக, அவர் உதவியாளர் மூலமாக கொடநாடு எஸ்டேட் வாங்கியது தொடர்பான ஆவணங்கள் சுவாமியிடம் சேர்க்கப்பட்டன.    ஆனால், அந்த ஆவணங்களை வைத்துக் கொண்டு சுவாமி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சுவாமியின் மீது அவநம்பிக்கை இருந்ததற்கான காரணம், 1996ல் புகார் அளித்ததோடு சரி.  அதற்குப் பிறகு, எப்படியாவது ஜெயலலிதாவோடு கூட்டணி வைப்பதையே அவர் எப்போதும் விரும்பி வந்தார்.   2003ம் ஆண்டில், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், சொத்துக் குவிப்பு வழக்கின் அத்தனை சாட்சிகளும் அந்தர் பல்டி அடித்து, வழக்கு ஜெயலலிதாவுக்கு சாதகமாக திரும்பியபோது, இந்த வழக்கில் புகார் கொடுத்தவரான சுவாமி, இது குறித்து கண்டுகொள்ளவேயில்லை.   எனக்கென்ன என்றுதான் இருந்தார்.  திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன், உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு காரணமாகவே, ஜெயலலிதா சிறை சென்றார்.
2011 பிப்ரவரி மாதத்தில், தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கை, தேர்தலுக்குள் முடித்து விட வேண்டும் என்று அப்போதைய திமுக அரசாங்கம், ஒரு நீதிபதியை செட்டிங் செய்து வெகு தீவிரமாக வழக்கை நடத்திக் கொண்டிருந்தது.  அப்போது, அந்த வழக்கில் தொடர்புடைய அமைச்சர் பூங்கோதை தொடர்பான உரையாடலை வெளியிட்டது சுப்ரமணியன் சுவாமி என்பதால், அவரை நேரில் சந்திக்க நேர்ந்தது. இணைப்பு   இணைப்பு 2
அப்போது, தன்னால் இந்த வழக்கில் நேரடியாக தொடர்புப்படுத்திக் கொள்ள முடியாது என்றும், பூங்கோதை உரையாடலை அவரிடம் அளித்தது ஜெயலலிதா என்றும், அதை தன்னால் நீதிமன்றத்தில் சொல்ல முடியாது என்றும் கூறினார் சுவாமி.  மேலும், அவர் தனது ஜனதா கட்சிக்கு 2011 சட்டமன்றத் தேர்தலில் இரண்டே இரண்டு சீட்டுகள்தான் கேட்டு வருவதாகவும், ஆனால் அந்த இரண்டு சீட்டுகளைக் கூட ஜெயலலிதா அளிக்க மறுப்பதாகவும் வருத்தப்பட்டுக் கூறினார்.  வேறொரு நண்பர் மூலமாக, இந்த செய்தி ஜெயலலிதா காதுக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது, கடும் கோபமடைந்த ஜெயலலிதா, நான் எப்படி அந்த நபருக்கு சீட் கொடுக்க முடியும் ?   16 வருடங்களாக நான் சொத்துக் குவிப்பு வழக்கில் இப்படி மாட்டிக் கொண்டு அலைவதற்கு காரணமே அந்த நபர்தானே…. ?  போன வாரம் கூட டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில், சொத்துக் குவிப்பு வழக்கைப் பற்றி இந்த நபர் பேசிக் கொண்டிருந்தார்.  அவருக்கு நான் எப்படி சீட் கொடுக்க முடியும் என்று ஜெயலலிதா கோபத்தோடு கூறியதாக நண்பர் கூறினார்.
sasikala
அப்படி ஜெயலலிதாவின் தயவு எப்போது கிடைக்கும் என்று வழிமேல் விழிவைத்துக் காத்துக் கொண்டிருந்தவர்தான் சுப்ரமணியன் சுவாமி. ஆனால், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சிகள் எதுவுமே, இந்த ஊழல் புகாரை கையில் எடுக்க தயாராக இல்லாத நிலையில், வேறு என்ன வழி ?
ஆனாலும், ஜெயலலிதா அடுத்தடுத்து தொடுத்த 5 அவதூறு வழக்குகளின் காரணமாக சுவாமி கடும் எரிச்சலில் உள்ளார் என்பது தெரிந்தே அவரை சந்திக்க முயற்சி எடுக்கப்பட்டது.   அந்த நேரம் டெல்லியில் இருந்த சுவாமி, மாலை 7 மணிக்கு வீட்டில் வந்து சந்திக்குமாறு கூறினார்.  அதன்படியே, ஒரு பென் ட்ரைவில் அனைத்து ஆதாரங்களையும் எடுத்துக் கொண்டு, மாலை அவர் வீட்டுக்கு செல்ல நேர்ந்தது.  செல்வதற்கு முன்னதாக, பாதுகாப்பு காரணத்துக்காக மத்திய உளவுத்துறை அதிகாரி ஒருவரிடம், விபரங்கள் அனைத்தும் தெரிவிக்கப்பட்டது.
மிக மிக அன்போடு வரவேற்றார் சுவாமி.  அவர் வீட்டின் கீழே பாதாள அறை போன்ற ஒரு அறை.  அந்த அறை முழுக்க புத்தகங்கள்.   ஒரு கணினி.   பேக்ஸ் மிஷின்கள்.   என்ன விபரம் என்று கேட்டார்.   ஜெயலலிதா தனது உதவியாளர் பெயரிலேயே பல்வேறு நிறுவனங்களை தொடங்கி நடத்திக் கொண்டிருக்கிறார் என்றதுமே விஷயத்தை புரிந்து கொண்டார் சுவாமி.   தெரியும் தெரியும். எனக்கு பூங்குன்றன் யார் என்பது தெரியும்.     ஜெயலலிதா உறுதியாக இந்த முறை சிறை செல்கிறார்.  அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றார்.
பிறகு அனைத்து ஆதாரங்களையும் ஒரு பென் ட்ரைவில் காப்பி செய்து கொண்டார்.     எந்த ஆதாரங்களாக இருந்தாலும் எனக்கு மெயிலில் அனுப்பவும் என்று தெரிவித்தார். “சார் ஒரே ஒரு கோரிக்கை.    இந்த ஆதாரங்கள் செப்டம்பர் 27க்கு முன்னதாக வெளிவந்தால் நன்றாக இருக்கும்” என்று கூறியதற்கு, எனது ட்விட்டர் மூலமாக படிப்படியாக வெளியிடுகிறேன்.   எனது ட்விட்டர் அக்கவுன்டை, சிபிஐ, மத்திய உளவுத்துறை ஆகியோர் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார்.
அவரிடம் விடைபெற்று அவர் வீட்டை விட்டு 100 மீட்டர் செல்வதற்குள், ஜெயலலிதா தனது உதவியாளர் பெயரில் பல நிறுவனங்களை தொடங்கியிருக்கிறார்.   இந்த முறை அவர் தப்ப முடியாது என்று ஒரு ட்வீட் போட்டார்.
Untitled-2
அதன் பின், சென்னை திரும்பியாகிவிட்டது.     ஜெயலலிதாவுக்கும் தண்டனை கிடைத்து விட்டது.  அவருக்கு ஜாமீனும் கிடைத்து விட்டது.   ஊழலை எதிர்ப்பவன், இந்தியாவின் மனசாட்சி என்று தன்னை அழைத்துக் கொள்ளும் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி, ஜெயலலிதாவுக்கு எதிரான ஆதாரங்கள் கிடைத்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் கனத்த மவுனம் சாதிக்கிறார்.    இதற்குப் பிறகு, அவருக்கு மேலும் சில ஆதாரங்கள் மின்னஞ்சலில் அவர் கேட்டுக் கொண்டபடி அனுப்பப்பட்டன.  ஆனாலும், சுவாமி ஜெயலலிதா குறித்து வாயே திறக்காமல்தான் உள்ளார்.    வைகோவையும், ராமதாஸையும் கடுமையாக விமர்சிக்கும் சுவாமி, தன் மீது தேவையே இல்லாமல் ஐந்து அவதூறு வழக்குகளை போட்ட ஜெயலலிதாவைப் பற்றி வாயே திறக்க மறுக்கிறார்.
அரசியல் வட்டாரங்களில் விசாரித்ததில், ஜெயலலிதாவின் பல்வேறு நிறுவனங்களில் பினாமியாக இருந்த சோ ராமசாமி மூலமாக, சுப்ரமணிய சுவாமியோடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், ஒரு பெரும் தொகை கைமாறியிருப்பதாகவும் கூறப்படுகிறது.  ஆனால், இந்தத்தகவல்களை உறுதி செய்ய முடியவில்லை.
ஆ.ராசா, ப.சிதம்பரம் ஆகியோர் மீது நாள் தவறாமல் வழக்குகளை தொடுத்து குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்த சுவாமி, தன் மீது அவதூறு வழக்ககளை தொடுத்த, ஜெயலலிதாவிடம் ஏன் பம்முகிறார் என்பதற்கான விளக்கத்தை அவர்தான் கூற வேண்டும்.
ஆதாரங்களுடனான ஊழல் குற்றச்சாட்டுகளை வெளியிட்டால் அவற்றை பரிசீலித்து, மேல் நடவடிக்கை எடுக்க ஒரு அரசியல் கட்சியோ, ஊடகமோ இல்லாத ஒரு வேதனையான சூழல்தான் தமிழகத்தில் நிலவுகிறது.
என்ன செய்வது ?
தொடரும்.

Comments

  1. senthurpandian says
    தங்களிடம் இருக்கும் ஆதாரத்தை கொண்டு நீங்கள் ஏன் டிராபிக் ராமசாமி போல் வழக்கு தொடுக்க என்ன தயக்கம் எல்லோருமே(அரசியல்வாதிகள்) நாடக நடிகர்கள் தானே ஊழலை ஓழிக்க கணிணிமயமாக்க சொன்னால் அதிலும் ஊழல் செய்யும் நாட்டில் நீதியாவது நேர்மையாவது பாவம் வெள்ளேந்தி மக்கள்
  2. Varatharaajan says
    மக்களை ஏமாற்றி வரிப்பணத்தை கொள்ளையடித்த நடிப்பில் கைதேர்ந்த அரசியல்வாதிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். தங்கள் விடாமுயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
  3. க.ஆனந்த் says
    தங்களின் பணி தமிழக அப்பாவி மக்களை காக்கும் கடவுள் பணி.நூறாண்டுகளுக்கு நோய்,நொடி இல்லாமல் நிறை செல்வம் பெற்று அறியாத மக்களுக்கு தொண்டு செய்ய இறைஅருள் திருஉளம் செய்யட்டும்.
  4. Tiger says
    “ஃபீனிக்ஸ் மால் சத்யம் தியேட்டர் வாங்கிய கதைதான்” can u please write about it ?

Leave a Reply

Your email address will not be published.
You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>