ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

உங்களுக்கு ஏன் இந்த கவலை ? போயி உங்க வேலையைப் பாருங்க....






பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!

அஸ்ஸலாமு அலேக்கும்  !!



அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!

அனைவருக்கும் வணக்கம்.

ஒருவழியாக நாம் அனைவரும் எதிர்ப்பார்த்தபடி 
தி.மு.க. மற்றும் இந்தியதேசிய காங்கிரஸ் ஆகிய 
இவ்விரண்டு கட்சிகளும் எதிர் வரும் தமிழ்நாடு 
சட்டமன்றத்தேர்தலில் இணைந்து போட்டியிடும்
வகையில் ஒரு புரிந்துணர்வுக்கு வந்துள்ளன. இது வரவேற்கத்தக்க ஒரு செய்திதான். 

ஆனால் இதை ஏற்றுக்கொள்ள இயலாத, ஜீரணித்துக்கொள்ள முடியாத சில அரசியல் பெருச்சாளிகள் ஒவ்வொன்றும் தத்தமது கருத்துக்களை வெளியிட்ட வண்ணம் 
இருக்கிறார்கள்.

தமிழிசை, இது ஒரு ஏமாற்றுக்கூட்டணி என்றும்
மக்கள் இதை நம்ப மாட்டார்கள் என்று சொல்கிறார்.

பிரகாஷ் ஜவ்டேக்கர் இது இரண்டும் பூஜ்யங்கள் 
என்றும் இவ்விரண்டு பூஜ்ஜியங்கள் ஒன்றிணைந்ததால்எதுவும் சாதிக்கபோவது கிடையாது என்றும் தனது திருவாய் மலர்ந்துள்ளார். பூஜ்ஜியங்கள் இல்லை எனில், இங்கேஆயிரங்கள்,லட்சங்கள்,கோடிகள்என்று எதுவுமே இல்லை என்பது அந்த அரசியல் 
அரைகுறைக்கு தெரிய வில்லை போலும்.

இதே போல ஒவ்வொருவரும், பொறுமை இழந்த நிலையில், வயித்தெரிச்சலில் ஏதேதோ உளறிக்கொண்டு திரிகிறார்கள். அவர்கள் அப்படியே திரியட்டும். 

நான் என்ன சொல்லுகிறேன் என்றால்,

உங்களுக்கு ஏன் இந்தக் கவலை ?
போயிஉங்கவேலையைப் பாருங்க !!


என்பதுதான். முடிஞ்சா, நீங்களும் இதுபோன்ற ஒரு கூட்டணியை அமைத்துத்தான் பாருங்களேன். அது உங்களால் முடியாது. அடுத்த வீட்டுக்காரி ஆம்பிளைப் புள்ளையப் பெத்ததைபாத்து எதித்த வீட்டுக்காரி அம்மிக் 
குழவியை வைச்சுக் குத்திக்கிட்டாளாம். 

அது மாதிரித்தானே இதுவும் இருக்கிறது.
பாவம்.அவர்கள்அனைவருமேபேசித்தோற்றவர்கள்.இனியும் தோற்கப்போக இருக்கிறார்கள். 

அதுதான் நடக்க உள்ளது.

நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும் !!.
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்.!!

நன்றி !!  வணக்கம் !!

அன்புடன். திருமலை. இரா. பாலு.

செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

திரு.சுப்பிரமணிம்சாமி அவர்களின் டுவிட்டர் பதிவினைப் பற்றிய கருத்து !!






அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

அனைவருக்கும் வணக்கம் !! நேற்று மாலை 
பாரதீய ஜனதாக்கட்சியின் தலைவர் திரு.அமித்ஷா அவர்களைச் சந்தித்து உரையாடிவிட்டு வந்து திரு சுப்பிரமணிம்சாமி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்து ஒன்றினை பதிவு செய்து உள்ளார். 

அது என்ன என்றால் :-

எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 
திராவிட முன்னேற்றக்கழகம், தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக்கழகம் மற்றும் பாரதீய ஜனதா ஆகிய இந்த மூன்று கட்சிகளும் இணைந்து ஓர் அணியில் போட்டியிடும் என்றும் திமுக தலைவர் திரு மு.க. அவர்கள் தனது இளைய மகன் தளபதி திரு மு.க.ஸ்டாலின் அவர்களை முதல்வர் வேட்பாளராக அறிவித்திட வேண்டும் 
என்று தனது எண்ணத்தை அங்கே பதிவேற்றம் 
செய்திருக்கின்றார். வாழ்க. அவரது எண்ணம்.

இங்கே என்னைப்பொறுத்தவரையில் நான் என்ன எண்ணுகிறேன் என்று கேட்டால், எந்த ஒரு மாநிலம் ஆகட்டும் தேர்தல் வருகிறது என்று சொன்னால் ஆங்காங்கே இருக்கும் கட்சிகள் எப்படி தேர்தலை சந்தித்தால் வெற்றி கொள்ள முடியும் என்று அங்கே சிந்திப்பது, எண்ணுவது அவரவர்களுக்கு உள்ள ஒரு 
தனிப்பட்ட உரிமை. அந்தக் கட்சியில் உள்ள முக்கிய நபர்கள் கட்சித் தலைமையிடம் சென்று அதைப்பற்றிவிவாதிப்பது என்பது மறுத்திட முடியாத ஒன்று.ஆனால், அங்கே தலைவர் சொன்ன கருத்தை அவர் அனுமதி இல்லாமல், அதனை இணையதளம் மூலம் மக்களிடம் அறிவிப்பது எந்தவகையில் நியாயம் ?
இது ஒன்று.

மற்றொன்று, கூட்டணியாக வர இருக்கும் கட்சியிடம் நீங்கள் இப்படி இருக்க வேண்டும், அப்படி இருந்திட வேண்டும் என்று கேட்பது, சொல்வது, சரியான ஒரு அணுகுமுறையா ? இது இரண்டாவது.

ஆக, BJP தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணியம் சாமி அவர்கள் மனதில் என்ன எண்ணுகிறார் ?இதுதான் இப்போது நம் முன் உள்ள கேள்வி.

அவர் இந்த பி.ஜே.பி., தி.மு.க.,மற்றும் தே.மு.தி.க.
கூட்டணியை விரும்புகிறாரா ? அல்லது இப்படி 
ஒரு கூட்டணி அமையப்போகிறது, அதை மாற்று 
அணியில் உள்ளவர்கள் ( ஜெயலலிதா போன்று)
தெரிந்துகொள்ளுங்கள், உங்களால் முடிந்தால் 
அதை எப்பாடு பட்டாவது தகர்த்து விடுங்கள் என 
சொல்லி கூட்டணியை கலைத்துவிட அவர் 
எத்தனிக்கிறாரா ? புரியவில்லை.

அனால், என்னைப்பொறுத்தவரை திரு சுப்பிர 
மணியம்சாமி அவர்கள் இணையதளத்தில் 
பதிவு செய்திட்ட இந்தக் கூட்டணி என்பது 
உண்மையில் தமிழ்நாட்டு மக்கள் வரவேற்புக்கு 
உகந்த ஒரு கூட்டணியே. இந்த கூட்டணி 
ஒன்றினால் மட்டுமே இங்கே அடாவடித்தனம் 
செய்திடும், அராஜகம் ஒன்றே தங்களது அரசின் 
இலட்சியம் என்ற இறுமாப்பு உணர்வோடு 
ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கும் அம்மையார் 
அவர்களை கீழே இறக்குவதற்கான ஒரே சிறந்த 
மக்கள் கூட்டணியாக இருக்கும் என்பதில் எனக்கு எள்ளின் முனையளவுகூட ஐயமில்லை. 

ஆனால் அங்கே நாம் மற்றுமொருவிசயத்தையும் கவனிக்க கடமைப்பட்டு உள்ளோம். ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்குதலைவர்கலைஞர்அழைப்புவிடுத்து அது அங்கே பரிசீலனையில் உள்ளதொரு நிலையில் இப்படி மாற்றி பி.ஜே.பி. யுடன் உறவு கொள்வது சரியாகுமா ? என்றதொரு கேள்வியும் உதித்திடத்தான் செய்கிறது. நான் இல்லை என்று சொல்லவில்லை.  ஆனால் இதிலே தி.மு.க.விற்கு எங்கு சென்றால் ( BJP or காங்கிரஸ் ) தங்களுக்கு ஆதாயம் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. எனக்கு என்னவோ திமுக 
காங்கிரஸ் அணியைத் தங்களுடன் சேர்த்துக் 
கொள்வதைவிட, பி.ஜே.பி.யை இணைத்துக் 
கொள்வதே சாலச் சிறந்தது என்றே சொல்வேன். 
எப்படி என்றால், ஒன்று இதன் மூலம் அ.இ.அ.தி.மு.க.திரு மோடி அவர்களது இணைப்பு துண்டிக்கப்படும்.
அதன் மூலம் செல்வி JJ உச்ச நீதிமன்றத்தால் 
தண்டிக்கப்படுவார். இங்கே தமிழக தேர்தலில் 
அவர்கண்டிக்கப்படுவார்.மாபெரும்தோல்வி ஒன்றினை தழுவிடுவார். இதுதான் இந்த ஒன்றுதான் தமிழக மக்களுக்குத்  தேவை. இது 
ஒன்றுதான் நடக்க வேண்டும். என்று உண்மைத் 
தமிழர்களாகிய நாம் அனைவரும் பிரார்த்திக்க 
வேண்டிய தருணம் இது என்று சொல்லி எனது 
கட்டுரையை நான் நிறைவு செய்கிறேன்.

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். திருமலை.இரா.பாலு..