சனி, 18 அக்டோபர், 2014

1991 to 1996 and 2001 to 2006 ஆட்சிசெய்த நங்கையின் அநியாயங்களும் அக்கிரமங்களும் !!






அரசியல்வாதிகள் சிலரின் 


அநியாயங்களைப் 


படித்துப்பாருங்கள் !!


http://savukku22.blogspot.in/2014/10/blog-

post.html

மண்ணோடு மண்ணாக ஆக்கி, மக்கிப்போகவைத்து குப்பைக் கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்ட மாபெரும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயத்திற்கு உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் தந்த தண்டனையை இடைக்கால நிறுத்திவைப்பு !!






பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் !!


அஸ்ஸலாமு அலெக்கும் !!



               மனிதருள் மாணிக்கம் !!


பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் நீதி 


அரசர் மைக்கேல் டி. குன்கா அவர்கள்தான்


மேலே குறிப்பிட்டிருந்த அந்த 


மனிதருள் மாணிக்கம் !!  ஆவார்.



நாணல் போல வளைவதுதான் சட்டமாகுமா ?


அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் 


வேணுமா ?


நானொருகை பார்க்கிறேன் !! நேரம் வரும் 


கேட்கிறேன் !!


பூனையல்ல புலிதான் என்று போகப்போக 


காட்டுகிறேன்!!போகப் போக காட்டுகிறேன் !!


என்று மறைந்த காவியக் கவிஞர் மறைந்த 


வாலி எழுதிய பாடல். இது பாடல் அல்ல. 


காவியம். சிற்பி செதுக்காத செந்தமிழ் சிலை. 


நீதி தேவனின் உருவம்.மைக்கேல் டி.குன்கா.




ஆனால் கடந்த மாதம் 27ம தேதி இவர் வழங்கிய 


வரலாற்றுச் சிறப்பு நிறைந்த அந்த தீர்ப்பு. இன்று 


அதன் நிலைமைதான் இங்கே கட்டுரைக்குத் 


தலைப்பாகத் தரப்பட்டு உள்ளது.



அம்மையார் அவர்களின் உடல்நிலை கருதி 


அவருக்கு இடைக்கால ஜாமீனும், பெங்களூரு 


சிறப்பு நீதிமன்றம் அளித்தத் தண்டனைதனை 


நிறுத்திவைத்து ஒரு உத்தரவும் உச்ச நீதி மன்ற 


அமர்வு நீதிபதிகளால் வழங்கிடப் பட்டு உள்ளது. 


இந்த உத்தரவினால் நீதிதேவனின் கண்கள் 


உண்மையிலேயே கட்டப்பட்டுள்ளது என்னும் 


வாசகங்கள் உண்மையாகிறது.



அம்மையார் அவர்களுக்குஎதற்காகஇடைக்கால 


ஜாமீன் வழங்கிடப்பட்டுஉள்ளதுஎன்றால்அதற்கு 


உச்ச நீதி மன்றம் கீழ்க்கண்ட காரணங்களை 


இங்கேஉதாரணமாக கொடுத்து உள்ளது.



1)  இவரது இதற்கு முந்திய பதவியின் நிலை.


2)  இவரது வயது மற்றும் அதனால் 


பாதிக்கப்பட்டுள்ள இவரது உடல் நிலை.


3)  இவருக்கு உடனடியாக மருத்துவ வசதியும்


நல்ல ஓய்வும் கொடுத்தாகவேண்டிய கட்டாயம் 


என்னும் நிலைமைக்கு அம்மையாரின் 


உடல்நிலை வந்துள்ளது என்ற மருத்தவர் 


அளித்த சான்றிதழ்.



பெங்களூரு உயர்நீதி மன்றம் ஜாமீன்  வழங்கிட 


மறுத்து உத்தரவுவழங்கிட்டபோதுமேலேகுறித்த 


மூன்றுவிஷயங்களை கருத்தில்கொள்ளாமல் 


தன்னிச்சியாக ஜாமீன் உத்தரவினை 


மறுத்துவிட்டது என்பது உச்ச நீதி மன்றம், 


பெங்களூரு உயர்நீதி மன்றத்தின் மீது 


அள்ளித்தெளித்து விட்ட அவதூறு நிறைந்த பகீர் 


குற்றச் சாட்டு. இந்த மூன்று விஷயத்திலும் உச்ச 


நீதிமன்ற  நீதியரசர்கள்  குறிப்பிட்ட எதுவும் 


இல்லை என்பதே அரசியல் சட்ட நீதி 


ஆர்வலர்கள் தரும் பொதுவான  விளக்கம்.



(வக்கீல் திரு.K. அறிவுச்சுடர் MA..B.L. கம்பம்.- 


இவர் தந்த இந்த ஜாமீன் சம்பந்தமாக 


கொடுத்துள்ள தொலைபேசி ( செல் போன்) 


பேச்சின் சாராம்சம் :-



உச்சநீதி மன்றம் குறிப்பிட்டதுபோல குற்றவாளி 


அம்மையார் மட்டுமே 3 மூன்றுமுறை முதல்வர் 


பதவி வகுத்தவர் அல்ல.  


பீஹார் முன்னாள் முதல்வர் திரு லாலு 


அவர்களும் மூன்றுமுறை முதல்வர் 


பதவியில்  அமர்ந்து அலங்கரித்தவர்தான். 


அதுபோலவேஹரியானா மாநிலத்தின் 


முதல்வராக இருந்த திரு.ஓம் ப்ரகாஷ் 


சௌதாலா அவர்களும் நான்கு முறைக்கு 


மேலாக முதல்வராக இருந்தவர்தான். 


மத்திய காபினட்அமைச்சராக இருந்துசிறைக்குச் 


சென்றவர்தான் திமுகவின் ராசா அவர்கள். 


அதுபோலவே திருமதி கனிமொழி அவர்களும் 


பாராளுமன்ற உறுப்பினர்தான். இவரும் 



ராசா அவர்களும் (2 g  வழக்கில் குற்றம் 


சாட்டப்பட்டவர்களே அன்றி  குற்றம் நிரூபிக்க


பட்டவர்கள் அல்ல) டெல்லி திகார் சிறையில் 


சாதாரண வகுப்பு சிறையில்தான் காலம் 


கழித்தனர்.சிமெண்ட் பலகையில்தான் படுத்து 


உறங்கினர்.பொதுஉறுப்பினர்கள்உபயோகித்த 


கழிப்பறையை த்தான் பயன்படுத்திவந்தனர் 


சிறைச்சாலையில். ஒவ்வொருவரைப்போல 


உடல்நிலை காரணம்காட்டிமருத்துவமனை 


சொகுசு மெத்தையில் படுத்து உறங்கிடவும் 


இல்லை.புதிய குளிரூட்ட பயன்படும்  இயந்திரம் 


(A.C.மெசின்)வாங்கி அம்மாவுக்காக அந்த 


சிறைச்சாலை மருத்துவமனையில் 


பொருத்தப்படவும் இல்லை. 



உடல்நிலை:-  இவரைவிடவும் பன்மடங்கு 


மோசமாக பாதிப்படைந்த உடல்நிலைதான் 


முன்னாள் ஹரியானா முதல்வராகப் பதவி 


வகித்த  திரு ஓம் ப்ரகாஷ்சௌதாலா மற்றும் 


பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் 


ஆகியோர்.


ஆனால் இவர்களுக்கெல்லாம் எப்போது ஜாமீன் 


வழங்கிடப்பட்டது தெரியுமா நேயர்களே !! 


ஓராண்டு அல்லது பத்து மாத சிறை அஞ்ஞான 


வாசம் முடிவடைந்தபிறகுதான்.


ஆனால் அம்மையார் வழக்கில் மட்டும் எப்படி ? 


வெறும் 21 நாள் மட்டுமே சிறைவாசம் 


முடிவடைந்தபின் ? உடனே ஜாமீன் !!


(அதுவும் சகலவிதமான வசதிகளோடு 


வாழ்ந்தார்)


எல்லாம் ஆண்டவன் ஒருவன் மட்டுமே 


அறிவான்.


எங்க வாத்தியார் ஒரு பழமொழி சொல்வார் 


அடிக்கடி.


ஈட்டி எட்டிய மட்டும்தாண்டா பாயும் சிஷ்யா !! 


ஆனால் பணம் பாதாளம் வரைக்கும் பாயும் !!


என்று. அதுதான் தற்போது எனது நினைவிற்கு 


வருகிறது.


அரசன் அன்று கொள்வான் ஆண்டவன் நின்று 


கொல்வான்.


இந்தப்பழமொழி எனது தந்தை அடிக்கடி 


சொல்வார்.  


இப்ப நான் என்ன சொல்றேன் என்று நீங்கள் 


கேட்டால் 


நீதி அரசர் ஜாமீன் தருவார்.   


எல்லாம் வல்ல இறைவன் தக்க நேரத்தில் 


தலையிட்டு நீதியை நிலைநிறுத்திடுவார்.



நன்றி !! வணக்கம் !!



வாழ்வோம் வளமுடன்.



தமிழக அரசியல் ஆர்வலர்களது ஆசிகள்.

புதன், 15 அக்டோபர், 2014

பெயருக்கும் செயலுக்கும் சம்பந்தம் இல்லையே !!-- ஒரு கருத்துக் கண்ணோட்டம் !!






                          " அரசியல் மேடை "                


              (கட்சி சார்பு இல்லாதது ) 



அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!



நேற்றையதினம் தமிழ்நாட்டின் ஆளுநர் திரு 


ரோசையா அவர்கள் தனது திருவாய் 


மலர்ந்து  என்ன  சொல்லியுள்ளார் என்று 


தெரியுமா அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!                                                                 


தமிழ்நாட்டில் சட்டம் மற்றும் 


ஒழுங்கு மிகவும் சிறப்பாக உள்ளது. 


                                           


இது எப்படி இருக்கிறது என்று கேட்டால், 


சுடுகாட்டில் போய் உட்கார்ந்துகொண்டு இது 


நமது வீட்டில் இருப்பது போன்றதோர் உணர்வை 


தருகின்றது என்று சொல்வது போலவேஉள்ளது. 


இதற்காக என்ன கைமாறி உள்ளது என்பதனை


இறைவன் ஒருவன்மட்டுமே உண்மையில் 


அறிவான். 



நேற்றைய தினம் மட்டும் நமது 


தமிழ்நாட்டில், 5கொள்ளைகள், 


5 கொலைகள், காவல்நிலையத்தில் 


சிறுபான்மையினத்தை சேர்ந்த 


இளைஞர் ஒருவர் உதவி காவல் 


ஆய்வாளரால்சுட்டுக்கொல்லப்பட்டு 

இருக்கிறார். 



இவைகளை எல்லாம் ஆளுநர் சட்டம் ஒழுங்கு 


மிகச் சிறப்பாக இருக்கின்றது என்பதற்கு 


பொருள் என்றால், தமிழ்நாட்டில் 


உண்மையைத்தவிர மற்ற எல்லாமே 


விலைபோன சரக்குகளாக ஆகிவிட்டது 


என்பதைத் தவிர வேறு என்ன நான் சொல்ல ?   


தமிழக வாக்காளப் பெருமக்களே மேலேஎழுதிய 


கட்டுரைதனை மீண்டும் ஒருமுறை படித்துப் 


பாருங்கள். பெயர்தான் ஆளுநர். செயல் 


என்னவோ ஆளாதவர் என்றே நினைக்கத் 


தோன்றுகிறது. அதனால்தான் 


இந்தக்கட்டுரைக்கு கொடுக்கப்பட்டுள்ள 


தலைப்பு :-                                                                           


பெயருக்கும் செயலுக்கும் சம்பந்தம் 


இல்லையே !!



சிந்திப்பீர் !! செயல் படுவீர் !!                 


நன்றி !! வணக்கம் !!                                                           


அன்புடன் மதுரை T.R. பாலு.