சனி, 11 பிப்ரவரி, 2017

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் !!





மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் !!


அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

அது 1964 ம் ஆண்டு. தமிழ் சினிமா உலகில்
முடிசூடா மன்னனாக, முத்தமிழ் அறிஞர்
கழகத்தலைவர் கலைஞர் அவர்களால்
புரட்சி நடிகர் என்று பட்டம் பெற்ற மலையாள
தேசத்தில் பிறந்த நடிகர் M.G.இராமச்சந்திரன்,
மற்றும் அவரது அலுவலக மேலாளர் திரு. R.M. வீரப்பன் இருவரது கூட்டுத்தாயரிப்பில் சத்யா மூவிஸ் என்றபெயரில்  வெளிவந்த கருப்பு வெள்ளைதிரைப்படம்தான்

தெய்வத்தாய்

என்ற திரைப்படம் ஆகும்.மறைந்த காவியக்கவிஞர்வாலி, ஆலங்குடி சோமு இவர்கள் இருவரும் இந்தபடத்தின் பாடல்களை இயற்ற, மறைந்த மெல்லிசைமன்னர்கள் MS.விஸ்வநாதன் & இராமமூர்த்தி இருவரது
இன்னிசையில் பல்வேறு சிறப்பான பாடல்கள்
அந்தப்படத்தில் இடம்பெற்றன. அதில் தற்போது
தமிழகத்தில் நிலவி வருகின்ற அரசியல் சூழலுக்குஏற்ப ஒரு பாடல் இடம்பெற்றுள்ளது. அதனை முதலில்உங்களுக்கு சொல்லிவிட்டு அதன் பின்பு கட்டுரையைஎழுதிடத் துவங்கலாம் என்று எண்ணி உள்ளேன் எனதுஅன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

இதோ இதுதான் அந்தப்பாடல் :-

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் !!-அது 
முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும் !!
உள்ளம் என்றொரு ஊரிருக்கும் !!-அந்த 
ஊருக்குள் எனக்கொரு பேரிருக்கும் !!

பொதுவாக, மூன்றெழுத்துக்கள் கொண்ட 
எந்த ஒரு சொல்லாக இருந்தாலும் அதில் 
மனித இனத்திற்கு ( அது ஆணாகவோ அல்லது 
பெண்ணாகவோ யாராக இருந்தாலும் சரி )
ஒரு தணியாத மோகம், மயக்கம், அடைவதில் 
ஒரு வெறித்தனமான உணர்ச்சி, எப்பாடுபட்டாவதுஅதனை பெற்றிட வேண்டும் என்றொரு துடிப்போடு கூடிய ஒரு செயல்பாடு, இது போன்ற இன்னும் சொல்லிடமுடியாத, சொல்லில் அடங்காத பல்வேறு உணர்வு பூர்வமானவிஷயங்கள்அந்தமூன்றுஎழுத்துக்கள்
கொண்ட சொல்லில் அடங்கி இருப்பது கண்கூடு.

உதாரணமாக, சொத்து,சுகம்,காதல்,பணம்,பவிசு,
பதவி,அன்பு,இதுபோல இன்னும் எத்தனையோ 
இந்த மூன்றெழுத்து மந்திரத்தில்அடங்கியுள்ளது 
அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

இன்றையதினம், நமது தமிழகத்தைப் பொறுத்தவரைபதவி என்ற அந்த மூன்றெழுத்துக்கு நடைபெற்று 
வருகின்ற குடுமிபிடி சண்டையைப் பார்க்கின்றபோது அழுவதா ? அல்லது சிரிப்பதா ? தெரியவில்லை.

மறைந்த எனது அன்புத்தந்தை அடிக்கடி ஒரு 
சொற்றொடரை சொல்வதுண்டு. அது என்னவென்றால்:-

நாய் வேலையை நாய் பார்க்கவேண்டும் !!
கழுதை வேலையை கழுதை பார்க்க வேண்டும் !!

என்று. இந்த வாசகத்தின்படி நமது தமிழக வாக்காளப் பெருமக்கள் செயல்படாமல், நடிகரையும் அவரது ஆசைநாயகி நடிகையையும் அரியணையில் அமர்த்தி அழகு பார்த்ததன் விளைவு ? இந்தப்பதவி சண்டை என்பதே எனது கணிப்பு.

ஒருவர் மருத்துவர் ஆகா வேண்டும் என்றால், 5 ஆண்டுகள் படித்து அதன் பிறகு ஓராண்டு உள்மருத்துவராக (House Surgeon )பணியாற்றி அதன் பிறகே முழு அந்தஸ்த்து பெற்ற ஒரு 
மருத்துவராக பணியாற்றிட இயலும். 

இதுபோலவேதான் ஒவ்வொரு துறைகளும், அது பொறியாளர் ( Engineer) அல்லது வழக்கறிஞர் (Advocate) கல்வியாளர்கள், இதுபோல ஒவ்வொரு 
துறைக்கும் அதற்கென்று படித்து, அனுபவம் பெற்று, அதன்பிறகே அவர்களது தொழில் அங்கீகாரம் பெற்று அவர்கள் பணிபுரிந்திட 
அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் இவர்கள் அனைவரையும் ஆளுகின்ற பொறுப்புக்கு வருகின்றவர்களுக்கு, இதுபோன்று 
எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாததாலும், வயது மட்டும் இருந்தால் அதுமட்டும் போதுமானது என்ற காரணத்தால், அரசியலுக்கு வருகின்ற நிலைமை, இந்த நாட்டில் நீடிக்கின்றவரை, இதுபோல் நடிகர்களும் நடிகையர்களும், அந்த நடிகையின் ஆயாக்களும் பொறுப்புக்கு வந்து 
மக்களின் பல்லாயிரம் கோடிகள் வரிப்பணத்தை கொள்ளை அடித்து கோலோச்சுவதை இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தால் தடுத்து நிறுத்திடவே இயலாது. 

ஒரு தகுதி,திறமை,அன்புவம் பெற்ற, பலவருடங்கள் முழுநேர அரசியலில் ஈடுபட்டு, போராட்டங்கள் பல கண்டு, அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி, சிறைக்கு சென்று பொதுநலத்திற்கு பாடுபட்ட  அரசியல்வாதி 
மட்டுமே அரசாள வேண்டும், அரசாள முடியும் என்று சட்டம் எப்போது திருத்தப்படுகிறதோ அன்றுதான் இந்த நாடும் உருப்படும் ஒரு ஒழுக்கம் உருவாகும் சிறந்த ஆட்சி நிர்வாக 
நெறிமுறை, இந்த நாட்டு மக்களுக்கு கிடைக்கும் 

அதுவரை பொறுமனமே !!பொறு !! என்று கூறி கட்டுரையை இந்த அளவில் நிறைவு செய்கிறேன்.

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R. பாலு.