சனி, 22 நவம்பர், 2014

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது அவருக்கு, நாட்டிற்கு, நன்மை தருமா ?








பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் !!


அஸ்ஸலாமு அலேக்கும் !!



அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!


வணக்கம். 


சமீபத்தில் நடைபெற்ற ஒரு 


பத்திரிக்கையாளர்கள் சந்திப்பினில் 


நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தாம் அரசியலுக்கு 


வருவதற்கு உள்ள வாய்ப்புகளைப்பற்றித் 


தனது கருத்தினை அங்கே அவர் சொல்லி


இருப்பது பற்றி செய்தித் தாள்களில் படித்து 


அறிந்துகொண்டேன். 



அவர் சொல்லியிருப்பதைப் படிக்கும்போது 


ஒருவேளை அவர் அரசியலுக்கு வந்தாலும் 


வரலாம் என்பது போலவே அந்த பேட்டி 


அமைந்திருந்தது.  தமிழ்நாட்டைப் 


பொருத்தவரையிலும் இது கவலைப்பட 


வேண்டிய விஷயமே. 


ஏற்கனவே நடிகர், மற்றும் நடிகைகளின் 


ஆட்சியில், தமிழ்நாடு அடைந்துள்ளபின்னடைவு 


சொல்லில் அடங்காதது. 


ஏறத்தாள இவர்கள் இருவரும் ( M.G.R. & J.J. ) 


ஆண்ட அந்த சுமார் 25 ஆண்டு காலகட்டத்தில், 


நமது தமிழகம் சுமார் 50 ஆண்டுகள் பின்னோக்கி 


சென்றுவிட்டது என்பதே உண்மையிலும் 


உண்மை ஆகும்.




நாய் வேலையை நாய் செய்யணும். 


கழுதை வேலையை கழுதை 


செய்யணும் !!. 



இது எனது தந்தை அடிக்கடி சொல்லும் ஒரு 


உண்மையான சொல் ஆகும். 


அதுபோலஒருஅனுபவம்பெற்ற அரசியல்வாதி


மட்டுமே  இந்த நாட்டை ஆளவேண்டும்.



நடிகர் நடிகை நடிப்பதுடன் நிறுத்திக்கொள்வது 


அவர்களுக்கும் நல்லது. நாட்டிற்கும் நல்லது 


அப்படி இல்லை என்று சொன்னால், 1996 ம் 


ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது நடிகர் 


ரஜினிகாந்த் சொன்ன வாசகம்தான் எனது 


நினைவுக்கு வருகிறது.


அவர் சொன்ன வாசகம் இதுதான் :-


" ஒருவேளை அந்த பெண் ( J.J. ) வெற்றிபெற்று 


மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துவிட்டால் 


இந்த நாட்டை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற 


முடியாது ".



திரு ரஜினிகாந்த் சொன்னபடியேதான் நடக்கும்


இந்த நாடு மீண்டும் எதிர்வரும் 2016 ம் ஆண்டு 


நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் 


ஒருவேளை ஒரு நடிகரோ அல்லது நடிகையோ 


அல்லது அவரின் ஆசி பெற்ற ஒரு பினாமியோ 


வெற்றிபெற்று ஆட்சியில் அமர்ந்துவிட்டால், 


இந்த நாட்டை அந்த ஆண்டவனால்கூட 


காப்பாற்ற முடியாது.



நன்றி !!  வணக்கம் !!



அன்புடன் திருமலை. இரா. பாலு.



( மதுரை T.R. பாலு )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக